Saturday, June 5, 2010

பதிவர் சந்திப்பு புகைப்படங்கள் 05/06/2010



மெரினாவில் காந்தி சிலை

மிக நீண்ட நெடுநாட்களுக்கு பின் பதிவர் சந்திப்பு நடந்தது, மொத்தம் 35 பதிவர்கள் வந்திருந்தனர்.
மூத்த பதிவர் டோண்டு ராகவன் நோட்டு சகிதம் வந்திருந்த பதிவர்களின் வருகையை பதிவு செய்தார்.

அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்துள்ள பதிவர் சிறில் அலெக்ஸ் தம்மை அறிமுகப்படுத்தி கொண்டு, மற்ற பதிவர்கள் அறிமுகபடுத்திக்கொண்டனர்.


தற்பொழுதைய பெட்ரோல் விலையை மத்திய அரசு உயர்த்தும் எண்ணத்திற்கான விசயங்கள் பேசப்பட்டன.

பதிவர் சிறில் , அமெரிக்க பெட்ரோல் விலையை இந்தியாவின் விலையோடு ஒப்பிட்டு பேசினார்.


பாலபாரதியும், யுவகிருஷ்ணாவும் தமிழ்ச்செம்மொழி மாநாட்டிற்கான தன்னார்வலர்களை எதிர்னோக்குவதாக அறிவித்தனர்.

தமிழ்ச்செம்மொழி மாநாட்டில் இணைய பதிவர்களுக்கான அரங்கம் , தமிழக அரசால் வழங்கபடுகின்றது, அவ்வமயம் வரும் தமிழ் மக்களுக்கு இணையத்தில் தமிழ் தட்டச்சு செய்வது எப்படி, பதிவர் ஆவது எப்படி, பதிவு எழுதுவது எப்படி என்பதனை தெரிவிக்க தன்னார்வலர்களை நம்பதிவர்களிடம் கேட்கிறார்கள்.


விருப்பபடும் பதிவர்கள் பதிவர் பாலபாரதியையும் , லக்கி யுவகிருஷ்ணாவையும் தொடர்பு கொள்ளலாம்.


மேலும் வரும் தமிழ் ஆர்வலர்களில் இணைய வசதி இல்லாதவர்களிடம் , தமிழ் சாப்ட்வேர்கள் உள்ள குறுந்தட்டுகளை இலவசமாக வழங்க உள்ளார்கள். நம்பதிவர்கள் குறுந்தட்டுகளில் தமிழ் சாப்ட்வேர்களை பதிய செய்து இலவசமாக வழங்கலாம்.



நம்பதிவர் ஜாக்கி சேகர் , மூத்த பதிவர் மா.சிவகுமார் தம்மிடம் கொடுத்த தமிழ் எழுத்துக்கள் கொண்ட கீ.போர்டு ஸ்டிக்கர்களை வழங்குவதாக அறிவித்தார்..


கூட்டம் இனிமையாகவும் , அமைதியாகவும் நிறைவு பெற்று, தேனீர்கடை நோக்கி பயணித்தது.


இனி, புகைப்படங்கள்:




பதிவர்கள் டாக்டர் புரூனோ, ஜாக்கி, பலாபட்டறை ஷங்கர், தண்டோரா, ஜயா டி.வி.ராதாகிருஷ்ணன்,ரவிஷங்கர், அன்பு.


பதிவர்கல் விக்கி,சிறில் அலெக்ஸ்,டாக்டர் புரூனோ, ஜாக்கி


பதிவர்கள் கலந்துரையாடல்


இடமிருந்து , பதிவர் அன்பு,விக்கி, சிறில் அலெக்ஸ், புதிய பதிவர்கள்


புதிய பதிவர்கள் வருகை


சந்தோச வெள்ளத்தில் நம் பதிவர்கள்


பதிவர் ஜாக்கி சேகர், பலாபட்டறை ஷங்கர், சங்கர், ஜயா டி.வி.ராதாகிருஷ்ணன்


வெள்ளையுடையில் தண்டோரா


விரிவான கலந்துரையாடலில் பாலபாரதி, டாக்டர் புருனோ, அதிஷா, ரவிசங்கர்

கேபிளார்


இளம் பதிவர் சுகுமார்


மின்னொளியில் மெரினா


பதிவர்கள் சாம்ராஜ்ய பிரியன், அப்துல்லா


நடுவில் பலாபட்டறை சங்கர்


பதிவர்கள் சுகுமார், ஷ்ரி, ஜாக்கி சேகர்


ஜ்யோவரம் சுந்தர், டோண்டு ராகவன், லக்கிலுக்


தேனீர் கடையில் பதிவர்கள்


தல பாலபாரதி


பதிவர் அப்துல்லா சிங்கை பதிவர் ஜோசப் பால்ராஜுடன் தொலைபேசியில் பதிவர் சந்திப்பு குறித்து வர்ணனை

Monday, April 5, 2010

வேண்டாம் இனி பூமி வெப்பமயமாதல் : விடை கொடுக்கும் இன்போசிஸ் --






இன்றைய தினமலர் நாளிதழில் வந்த கட்டுரை, இப்படிப்பட்ட முயற்சியை ஒவ்வொரு நிறுவனமும் எடுக்குமாயின் பசுமை இந்தியா, வெப்பம் குறைதல் சாத்தியமாகும்.
இந்திய பன்னாட்டு நிறுவனங்கள் இன்போசிஸ் முயற்சியை பின்பற்றுவார்களா?

இனி கட்டுரை:

பூமி வெப்பமயமாதலை குறைக்கும் உலகளாவிய முயற்சியில் தன் பங்காக பெங்களூரு இன்போசிஸ் சாப்ட்வேர் நிறுவனம் பல்வேறு புதிய முயற்சிகளை எடுத்து. மற்ற தொழில் நிறுவனங்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறது.

'உலகில் வளர்ந்து வரும் முன்னணி நிறுவனம், இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் நிறுவனம்' என மற்ற நாடுகளால் மதிக்கப்படுவது, இன்போசிஸ் நிறுவனம். கம்ப்யூட்டர் சாப்ட்வேர்களை உருவாக்கி, உழைப்புக்கு உதாரணமாய் கூறப்படும் நிறுவனம், தற்போது நவீன தொழில்நுட்பங்களால் பூமி சூடாவதைக் கண்டு, அதைக் குறைக்க தன் பங்குக்கு ஏதாவது செய்ய வேண்டும் என யோசித்தது. அதில் உதயமானது தான், 'கிரீன் இனிஷியேட்டிவ்' என்ற 'பசுமை முனைப்பு' திட்டம்.

இத்திட்டத்தின் தலைவர் ரோஹன் பரேக், எக்ஸ்கியூட்டிவ் திகு ஆறுச்சாமி ஆகியோர் நமது நிருபரிடம் கூறியதாவது:வெப்பமயமாதலுக்கு எங்கள் அலுவலக கட்டடங்களில் உள்ள மின் சாதனங்களில் இருந்து வெளியேறும் வெப்பம், மாசு போன்றவையும் ஒரு காரணம் என நினைக்கிறோம். எங்களது பெங்களூரு அலுவலக கட்டடங்களில் மட்டும் 22 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். இவர்கள் பயன்படுத்தும் வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையும் ஒரு காரணம். எனவே, வெப்பமயமாதலை தடுக்க, ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்த வேண்டும்.எங்கள் நிறுவன தலைவராக நந்தன் நிகலேனி இருந்தபோது, 2008ல் இத்திட்டம் துவக்கப் பட் டது. மைசூருவில் உள்ள எங்கள் கட்டடங்கள் முற்றிலும் 'பசுமை கட்டடங்களாக' வடிவமைக்கப் பட்டது. இப்போது நாட்டின் எந்த பகுதியில் இன்போசிஸ் கட்டடம் உருவாக்கினாலும் அவை வெப்பமயமாதலை கட்டுப்படுத்தும் விதத்தில் அமைக்கப்படுகிறது.

மின் சேமிப்பு: மின்சாரத்தை சேமிக்க மின் விளக்குகளை 'எல்.இ.டி.,' விளக்குகளை மாற்றுகிறோம். இதனால், மின் சேமிப்பு அதிகரிக்கும். பகல் நேரங்களில் அதிக அளவு சூரிய வெளிச்சம் அறைகளுக்குள் நுழையும் விதமாக கட்டடம் கட்டப்படுகிறது. எனவே மின் விளக்கு தேவைப்படாது. போதிய வெளிச்சம் இருந்தால், இயல்பாகவே மின்விளக்கு எரியாத வகையில் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துகிறோம். அதே போல, அறையில் ஆட்கள் இல்லாவிட்டால் தானாகவே அணையும் விளக்குகளை பொருத்துகிறோம்.

தண்ணீர்: வெப்பமயமாதலால் தண்ணீர் பற்றாகுறையும் ஏற்படுகிறது. இனிமேலும் தண்ணீரை வீணாக்க கூடாது. அனைத்து தண்ணீர் தேவையையும் மழை நீர் சேகரிப்பு மூலம் நிறைவேற்ற உள்ளோம். கழிவு நீரை சுத்திகரித்து, கழிப்பறை, தோட்டங்களுக்கு மீண்டும் பயன்படுத்துகிறோம். மைசூரு வளாகத்தில் மழை நீரை சேகரிக்க, மூன்று செயற்கை ஏரிகளை உருவாக்கி உள்ளோம். மொத்த தண்ணீர் தேவையில் 40 சதவீதத்தை இந்த ஏரிகள் நிறைவேற்றும். ஐதராபாத் வளாகத்தில் மொத்தம் 19 குளங்களை வெட்ட உள்ளோம். இவற்றில் நான்கு முடிந்துள்ளன. அந்த வளாகத்தில் மட்டும் 30 ஆயிரம் பேர் பணிபுரிவர். சென்ற ஆண்டு ஒரு நாள் பெய்த மழையிலேயே நான்கு குளங்களும் நிரம்பி விட்டன.

பசுமை மின்சாரம்: பசுமை மின்சாரம் என்பது, நிலக்கரி, அணுசக்தி போன்றவற்றை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படாமல், மாசு ஏற்படுத்தாத நீர் மற்றும் காற்றாலை மின்சாரத்தை பயன்படுத்துவது. இதை நாங்கள் ஊக்கப்படுத்துகிறோம். அலுவலக வளாகத்திற்கு உள்ளேயே சிறு காற்றாலைகளை வைத்து, மின்சாரம் தயாரிக்கும் திட்டமும் பரிசீலனையில் உள்ளது. சக்தியை வீணாக்கும் கலாசாரத்தை மாற்ற வேண்டும். ஒரு சதவீத மக்களின் மனம் மாறினால் கூட பெரிய சேமிப்பு கிடைக்கும். சக்தியை சேமிப்பதில் நாங்கள் ஏராளமான ஆராய்ச்சிகள் செய்கிறோம். இதற்காக வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள், நிறுவனங்களுடன் பேசுகிறோம்.

கட்டடங்களில் வெப்பத்தை குறைக்க பல தொழில் நுட்பங்களை பயன்படுத்துகிறோம். குளிர்ச்சியை ஏற்படுத்துவது என்பதே, 'ஒரு பொருளில் உள்ள வெப்பத்தை வெளியே எடுப்பது தான்'. கட்டட சுவர்களுக்குள் ராக் உல், கிளாஸ் உல், ஸ்டைரோபோம் போன்ற பொருட்களை வைத்து கட்டினால், வெளி வெப்பம் உள்ளே வராது. அறையில் வெப்பம் குறைவாக இருந்தால், 'ஏசி' அதிகம் தேவைப்படாது.ரசாயன பூச்சு உள்ள கண்ணாடிகளை ஜன்னல்களில் பயன்படுத்தினால் சூடு உள்ளே வராது. புறஊதா மற்றும் அகச்சிவப்பு கதிர்களை இவை தடுத்து விடும். இதனால் வெளிச்சம் மட்டுமே அறைக்குள் ஊடுருவும்.

கட்டட சுவர்களில் நேரடியாக சூரிய கதிர்கள் படுவது போல் கட்டக் கூடாது. கட்டடத்தின் மேலே, பளபளப்பான பூச்சு பூசப்பட்ட தடுப்பு வைக்கிறோம். இதில் பட்டு தெறிக்கும் ஒளி, மேலே சென்று இன்னொரு தடுப்பின் மீது பட்டு, திரும்பும். இப்படியே ஒளியை திருப்பி, அறைகளுக்குள் அனுப்பலாம். இந்த ஒளியில் வெப்பத்திற்குப் பதில் வெளிச்சம் மட்டுமே இருக்கும். இப்படி எல்லாம் கட்டடங்கள் கட்ட ஆரம்பத்தில் சற்று செலவு அதிகமானாலும், பின் சில ஆண்டுகளில் மின்சேமிப்பால் அதிக பலன் கிடைக்கும்.

கம்ப்யூட்டர்கள்: கம்ப் யூட் டர்கள் வெப்பத்தை உமிழுவதை தடுக்க, 10 நிமிடங்களுக்கு தொடர்ந்து பயன்பாட்டில் இல்லாவிட்டால் கம்ப்யூட்டர்களின் மானிட்டர்கள் தானாகவே அணைந்து விடும் வகையில், அமைத்துள்ளோம். இதன் மூலமும் மின்சாரம் சேமிக்கப்படும். ஊழியர்களுக்குள் 'ஈகோ கிளப்' (சுற்றுச்சூழல் சங்கம்) ஏற்படுத்தி உள்ளோம். இவர்களின் துணையுடன் நாடு முழுவதும் சென்ற ஆண்டு மட்டும் 40 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டுள்ளோம். பறவைகளை ஈர்ப்பதற்காக எங்கள் வளாகங்களில் இப்போது உள்ளூர் மரக்கன்றுகளைத் தான் நடுகிறோம். மங்களூரு வளாகத்தில், அழிந்து வரும் தாவர இனங்களை காப்பாற்றி வளர்க்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

பேட்டரி கார்: மாசுக் கட்டுப் பாடு சான்றிதழ் இல்லாத வாகனங்களை இவர்கள், வளாகத்தின் உள்ளே அனுமதிப்பதில்லை. வளாகத்தின் உள்ளே, வாகனங்களை தொழிலாளர்கள் பயன்படுத்த அனுமதி இல்லை. ஏராளமான சைக்கிள்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. இவற்றை எடுத்துக்கொண்டு வளாகத்திற்கு உள்ளேயே சுற்றிவிட்டு, எங்கு வேண்டுமானாலும் நிறுத்தலாம். புகை மாசை கட்டுப்படுத்த இந்த ஏற்பாடு. கட்டடம் கட்டும் போது, ஏதாவது மரத்தை அகற்ற வேண்டி வந்தால், அதை வெட்டாமல், வேரோடு அகற்றி, வேறு இடத்தில் மீண்டும் நட்டு, உயிர் கொடுக்கின்றனர். இதனால் மரங்கள் வெட்டப்படுவது தடுக்கப்படுகிறது.இப்படி சுற்றுச்சூழலை எந்த வழியில் எல்லாம் பாதுகாக்கலாமோ, அத்தனை வழிகளையும் உலகின் முன்னணி நிறுவனமான இன்போசிஸ் செய்து வருகிறது.

புதிதாக கட்டடங்கள் கட்டும் தொழில் நிறுவனங்கள் இவர்களை பின்பற்றினால் சுற்றுச்சூழல் மாசுபடாது. குடிநீர், மின்சாரம் தட்டுப்பாடு ஏற்படாது. இதனால் நிறுவனங்களுக்கும் லாபம்; நாட்டின் எதிர்காலத் திற்கும் நல்லது. வெப்பமயமாதலுக்கு எதிரான இந்தியாவின் முயற்சிக்கு இன்போசீஸ் வழிகாட்டுகிறது. எல்லா தொழில் நிறுவனங்கள் மட்டுமல்லாமல் தனி மனிதர்களும் விழிப்புணர்வு பெற்றால், 'பசுமை இந்தியா' என்ற நமது கனவு நிறைவேறும்.

Monday, February 15, 2010

கேபிள், பரிசலின் புத்தக வெளியீடும், பதிவர் சந்திப்பும்--புகைப்படங்கள்-தொகுப்பும்

வணக்கம். ஒரு பதிவரின் புத்தக விழாவில் 150 பேர் கலந்து கொண்டார்கள் என்றால் அந்த பதிவரின் மேல் கொண்ட பாசமும், நேசமும், நட்பும் வெளிப்பட்ட தருணம் தான் கேபிளாரின் புத்தக வெளியீட்டு விழா.


13/2/2010 மாலை கேபிளாரை பார்பதற்காக தொடர்பு கொண்ட பொழுது , discovery book palaceல் இருப்பதாக தெரிவித்தார். அங்கு சென்று பார்த்தால், அந்த புத்தக கடை உரிமையாளருக்கு blog என்றால் என்ன? , பதிவு போடுவது எப்படி ?, திரட்டியில் இணைப்பது எப்ப்டி என விளக்கி கொண்டிருந்தார். இது மாதிரி எனக்கு தெரிந்த வரை 100 பதிவர்களை உருவாக்கியுள்ளார் கேபிள். பின் ஏன் 100 பதிவர்கள் விழாவுக்கு வரமாட்டார்கள்?


விழா அரங்கமே நிறைந்து காணப்பட்டது.கேபிளாரின் குடும்பத்தினர், பரிசலின் குழந்தை, வெண்பூவின் குழந்தை யென குடும்ப விழாவாகவே களை கட்டியது.
பதிவர்களை ஒருவருக்கொருவர் ஏற்கனவே பார்த்தவர்கள், chat ல் பேசி, தொலைபேசியில் பேசி அன்றுதான் நேரில் கண்டவர்கள் என நெகிழ்ச்சியாக காணப்பட்டது.

பதிவர், நாகரத்னா பதிப்பகத்தின் உரிமையாளர் குகன் தொடக்கவுரையாற்ற, கேபிள் வாழ்த்துரை வழங்க,, கேபிள் மகன் தானும் பேச வேண்டும் என கேட்க, அவன் , ஓரே வாக்கியம் பேசினான். ” எங்கப்பா ஒரு காமெடி பீசு ” என சொல்ல மொத்த கைதட்டலில் அதிர்ந்தது அந்த அரங்கம். வீட்டிலும் கேபிள் எத்துனை நகைச்சுவையாளர் என்பது புலப்பட்டது.

லெமன் ட்ரீயும்.. ரெண்டு ஷாட் டக்கீலாவும், நூலை பிரமிட் நடராஜன் வெளியிட அஜயன் பாலா பெற்றுக் கொண்டார்.

பரிசலின் டைரிகுறிப்பும், காதல் மறுப்பும் நூலை அகநாழிகை வாசு வெளீயிட, பிரமிட் நடராஜனும், அஜயன் பாலாவும் பெற்று கொண்டார்கள்.

பிரமிட் நடராஜன், கேபிளின் தந்தைக்கு நெருங்கிய உறவு, தான் சென்னைக்கு வந்த பொழுது, அடைக்கலம் கொடுத்தது, உதவி செய்தது என நினைவுகூர்ந்தார்.நன்றி மறப்பது நன்றன்று.

பிரமிட் நடராஜன் கேபிளின் எழுத்துக்கள் 55 வயது நிரம்பிய எழுத்தாளரின் எழுத்துக்கள் போன்று இருக்கிறது என்றார். கேபிள் தன்னை இனிமேல் யூத்து என சொல்ல மாட்டார் என நினைக்கிறேன்.



தமிழ்ப்படம் இயக்குனர் c.s.அமுதன் , தன்னுடைய படம் வெற்றிக்கு பதிவர்கள் ஒரு காரணம் என நன்றி பாராட்டினார். மிகவும் நேர்த்தியாக விமர்சனம் பதிவர்களால் எழுதப்படுகிறது என தெரிவித்தார்.

அஜயன் பாலா மிக நீண்ட உரை நிகழ்த்தினார், கேபிளின் எழுத்துக்கள் சுஜாதாவை நினைவு படுத்துகின்றன என்றவுடன் கேபிளின் முகத்தில் களிப்பு தென்பட்டது, பின்னே கேபிள் சுஜாதாவின் தீவிர ரசிகர் ஆயிற்றே.

அகநாழிகை வாசுதேவன் , கேபிளையும் , பரிசலையும் பாராட்டி, முக்கியமாக பதிப்பாளர் குகனை வாழ்த்தினார்.

கேபிள் ஏற்புரையில் லே.அவுட் டிசைனருக்கும் (இந்த புத்தகத்திற்காக 20 டிசைன் செய்தார்), பதிவர் சுகுமாரின் flash வேலைகளுக்கும், தமிழ்ப்படம் வ்சனகர்த்தா சந்துருவுக்கும் . , நன்றி கூறினார்.

பரிசலின் ஏற்புரையில் பதிவர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார். தொடர்ந்து எழுதினால் நிச்சயம் நம் எழுத்துக்கள் அங்கீகரிக்கப்படும் என தெரிவித்தார்.

நிகழ்வுகளை பதிவர் சுரேகா அருமையாக தொகுத்து வழங்கினார், தராசு, உண்மைதமிழன்,கார்க்கி ஆகியோர் எழுத்தாளர்களை பாராட்டி பேசினர்.

கலந்து கொண்ட பதிவர்கள் எனக்கு தெரிந்த வரையில்.
ஜ்யோவ்ராம் சுந்தர், பைத்தியகாரன் சிவராமன், அப்துல்லா,நர்சிம், லக்கி லுக், அதிஷா, வெண்பூ, சொல்லரசன், கார்க்கி, உண்மை தமிழன் , பட்டர் பிளை சூர்யா, மயில் ராவணன், பலாப்பட்டறை சங்கர், அன்புடன் மணிகண்டன், ஆதிமூல கிருஷ்ணன், தண்டோரா, டோண்டு ராகவன்,ரோமியோ, பெஸ்கி, ஜெயம் கொண்டான், மார்த்தாண்டன், விநாயக முருகன், சஞ்செய் காந்தி, மோகன் குமார், டி.வி ராதாகிருஷ்ணன், அண்ணாச்சி வடகரை வேலன், ச்ர்புதீன், முரளிகுமார், பத்மநாபன்,வெங்கி, சுகுமார்,அத்திரி, அதி பிரதாபன், சங்கர், வெயிலான்,சுரேகா,ஈரவெங்காயம், ஜெட்லி, சிவகுமார், மற்றும் பலர்.

நிகழ்ச்சி ஆரம்பத்தில் தமிழ்தாய் வாழ்த்து, இறுதியில் தேசியகீதத்துடன் நிறைவு பெற்றது.






கேபிளின் குழ்ந்தைகள்
பதிவர்கள் உ.த, பலாபட்டறை சங்கர், ரோமியோ பாய்.
நர்சிம், கார்க்கி
பதிவர்கள் அறிமுகம் , வெள்ளி நிலா சர்புதீன்
அன்புடன் மணிகண்டன் அறிமுக உரை, பராம்பரிய உடையுடன் நர்சிம், ஆதிமூலகிருஷ்ணன், பரிசல்.
அமர்ந்திருக்கும் ஜ்யோவ்ராம் சுந்தர்
எழுத்தாளர் பரிசலுடன், வெண்பூ தன் மகனுடன்.
கோவை வடகரை வேலன், டி.வி.ராதாகிருஷ்ணன்.
மேடையில் வாசுதேவன், குகன், பிரமிட் நடராஜன், அஜயன்பாலா
வந்திருந்த மக்கள்.
கேபிளின் புத்தகத்தை பிரமிட் நடராஜன் வெளியீடுகிறார்.
நின்றாவாறே பரிசல், பரிசலின் பெண் புகைப்படங்களை எடுத்து தள்ளுகிறாள்.
பரிசலின் டைரிகுறிப்பும், காதல் மறுப்பும் நூலை அகநாழிகை வாசு வெளீயிட, பிரமிட் நடராஜனும், அஜயன் பாலாவும் பெற்று கொண்டார்கள்
கேபிளாரின் ஏற்புரை.
பிரமிட் நடராஜனின் வாழ்த்துரை.
ப்ளாஷ் வெள்ளத்தில் விழா
தொகுப்பாளர், பதிவர் சுரேகா, சிவப்பு சட்டையில் தமிழ்ப்படம் இயக்குனர் c.sஅமுதன்.
இயக்குனர் அமுதனுக்கு வடகரை வேலன் பொன்னாடை அணிவித்தார்.
c.s அமுதனின் வாழ்த்துரை
அண்ணன் தண்டோரா அஜயன் பாலாவுக்கு பொன்னாடை போர்த்தி, வாழ்த்து தெரிவித்தார்.
மூத்த பதிவர் டோண்டு ராகவன்.
நின்றவாறே மஞ்சள் உடையில் சிவராமன்.

நர்சிமின் அய்யனார் கம்மா வெளியிட்ட பொன், வாசுதேவனுக்கு நர்சிம் பொன்னாடை அணிவிக்கிறார்.
பொன்.வாசுதேவனின் வாழ்த்துரை.
திருப்பூர் பதிவர்கள் பரிசலுக்கு நினைவுபரிசு வழங்குகின்றனர்.
கேபிளாருக்கு சூர்யாவின் அழகும், வண்ணமும் கொண்ட வாழ்த்து மடல்
பரிசலுக்கு சுகுமாரின் அழகும், வண்ணமும் கொண்ட வாழ்த்து மடல்.
பரிசலின் ஏற்புரை.

தமிழ்ப்படம் வ்சனகர்த்தா, பாடலாசிரியர், பதிவர் சந்துரு
புதுகை அப்துல்லாவின் வாழ்த்துரை
அண்ணன் தராசுவின் வாழ்த்துரை
தம்பி கார்க்கியின் வாழ்த்துரை
உண்மை தமிழன் வாழ்த்துரை.

சுகுமார், பட்டர் பிளை சூர்யா அளித்த வாழ்த்து மடல்.

நிகழ்வு பற்றிய சக பதிவர்களின் பதிவுகள்.

http://tvrk.blogspot.com/2010/02/blog-post_14.html

http://veeduthirumbal.blogspot.com/


அன்புடன்

காவேரி கணேஷ்.