Showing posts with label கவிதைகள். Show all posts
Showing posts with label கவிதைகள். Show all posts

Monday, August 21, 2017

நாயை போல் அல்ல நாம்...

நாயை போலவே நாமும்

வளைத்தும், வளைந்தும்,

குழைந்தும்

ஆனால்

அரசியல் எதிரிகளை

கடிக்காமலும், குரைக்காமலுமான வாழ்வு.

நாய்கள் வாழ்கின்றனர்.

மனிதர்கள் வாழ்கின்றன.






Monday, January 4, 2010

என்னின் காதலிக்கு........... (உரையாடல் கவிதை போட்டிக்கான கவிதை)


அடியே !
என் கிறுக்கல் ராஜாங்கத்தில்
நீ தானடி எப்பொழுதும் தலைவி.

நான் நிலவை பார்க்க நினைக்கும் பொழுதெல்லாம்
உன் வீட்டு ஜன்னலை தானடி பார்க்கிறேன்.

உன்னை பற்றி எழுதும் பொழுதெல்லாம்
என் பேனா முனை நிமிர்ந்து தானடி எழுதுகிறது.

என் வாழ்க்கை இலையுதிர் காலமாக
இருந்த பொழுது
நீயல்லவாடி வசந்தத்தை வரவழைத்தாய்.

பட்டமரமாய் பரிதவித்து கொண்டிருக்கையில்
நம்பிக்கை பூக்களை பூக்க விட்டவளே.

நான் நெருஞ்சியாய் இருந்த பொழுது
என்னை குறிஞ்சியாய் ஆக்கினவளே.

இந்த சிக்காத காளையை
அந்த சின்ன விழிக்குள் எப்படியடி
சிறை பிடித்தாய்.

சூன்யங்களோடு இருக்கையில்
சூரியனோடு சுகப்படுத்தினியடி.

நட்சத்திரமாக வாழ நினைத்த பொழுது
நிலவாய் ஆக்கியவளே.

எப்படியடி உன் முன்னால் மட்டும்
இரும்பு துண்டாய் போனேன்.
அந்த சின்ன விழிக்குள் காந்தமாடி?

உன் இமைகளின் அழைப்பினால் தானடி
நான் கூட காதல் கடலில் சங்கமித்தேன்.

என் ஹீமோகுளோபின்கள் எல்லாம் கருகியதால்
உன் குளோபின்கள் தானடி
என் இரத்தத்தில் கலந்துள்ளது.
மருத்துவன் பார்த்தவுடன் கேட்டானே!
யாரை காதலிக்கீறீங்க என்று?

அந்த வெள்ளிதிரைக்கு முன்னால்
எத்தனையோ சில்மிஷங்கள்.
ச்சீய்ய் போங்க! என்பாயேடி.
இப்பொழுது உணர்கிறேன்.
உன் மனதை விட்டு போவதற்காடி
அப்படி சொன்னாய்.

இன்றும் கூட நீ எனக்கு தொட்டுவிடும் தூரம் தான்.
அது யாரடி உன் பக்கத்தில் கைகுழந்தையோடு !
உன் கணவனா?

உன்னிடமிருந்து
அந்நியபடுத்தப்பட்ட இந்த ஆத்மாவின்
இதய ஒலியை உற்று கேளடி.
இன்னும் கூட உன் பெயரை தானடி
உச்சரிக்கிறது.


குறிப்பு: உரையாடல் கவிதை போட்டிக்காக

Wednesday, December 16, 2009

பயங்கள்--ஹைக்கூ


என் இருக்கையை
யாரேனும் கேட்டுவிடுவார்களோ
என்ற பயம்.

ரயிலில்
லோயர் பெர்த்.