Thursday, December 30, 2010

கவிஞர் யாத்ராவின் “மயிரு ”- கவிதை தொகுப்பு வெளியீடு-புகைப்படங்கள்.


நண்பர், பதிவர், யாத்ராவின் “மயிரு” , கவிதை தொகுப்பு அகநாழிகை பதிப்பகத்தால் மிகச்சிறப்பாக , சென்னை K.K.நகர் , டிஸ்கவரி புக் பேலஸில்,நடந்தது.

சுமார் 50 பேருடன் நடந்த இந்த விழா , வந்திருந்தவர்களின் கருத்து, பரிமாற்றத்துடன் நடந்த நிகழ்வு என சொல்லலாம்.

அகநாழிகை பதிப்பகத்தால் , நேர்த்தியாக வடிவமைக்கபட்ட தாளில்,
லேமினேட் செய்யப்பட்டு, “ மயிரு ”, கவிதை தொகுப்பு,
கவிஞர் ராஜ சுந்தரராஜன் அவர்களால் வெளியிடப்பட்டு,
பதிவர், கவிஞர் ஜ்யோவ்ரம் சுந்தர் அவர்களால் பெற்றுக்கொள்ளப்பட்டது.

அகநாழிகை பொன்.வாசுதேவன் வரவேற்புரையாற்ற,கவிஞர் ராஜ சுந்தரராஜன், ஜ்யோவ்ரம் சுந்தர் சிறப்புரையாற்றினர்.

கவிதை தொகுப்பின் நூலாசிரியர் யாத்ரா அவர்கள் கவிதை தொகுப்பையும், தான் கடந்து வந்த பாதையையும் எடுத்துரைத்தார்.

முடிவில், பொன்.வாசுதேவன் நன்றியுரையாற்ற விழா இனிதே முடிந்தது.

வந்திருந்த பதிவர்கள் ,

மணிஜி, கேபிள் சங்கர், சிவராமன், ஜ்யோவ்ரம் சுந்தர், பொன்.வாசுதேவன் ,
மயில் ராவணன், ஷங்கர், வசுமித்ரன், உயிரோடை லாவண்யா, நர்சிம், லக்கிலுக், அதிஷா, விமலாதித்த மாமல்லன், பெஸ்கி, சாம்ராஜ்ய பிரியன், முத்துவேல், குகன், அசோக், விஜய மகேந்திரன், புரூனோ,உழவன், இன்னும் சிலர்.

விழாவின் புகைப்படங்கள்.

அகநாழிகை பொன்.வாசுதேவன் வரவேற்புரை.
கவிஞர் ராஜ.சுந்தரராஜன் கவிதை தொகுப்பினை வெளியிட, திரு,ஜ்யோவ்ரம் சுந்தர் பெற்றுக்கொள்கிறார்

கவிஞர் ராஜசுந்தரராஜன் சிறப்புரை.

ஜ்யோவ்ரம் சுந்தர் அவர்களின் சிறப்புரை.




யாத்ரா அவர்களின் ஏற்புரை.

மயில்ராவணனுடன் , எழுத்தாளர் விமலாதித்த மாமல்லன்.


அன்புடன்,

காவேரி கணேஷ்.




Tuesday, December 14, 2010

சாரு நிவேதிதாவின் 7 புத்தக வெளியீடு--EXCLUSIVE புகைப்படங்கள்

எழுத்தாளர் சாரு நிவேதிதாவின் 7 புத்தகங்களின் நூல் வெளியீடு மிக சிறப்பாகவும், விமர்சையாகவும் சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது.
மாலை 5.45 மணிக்கு சென்றால் , நம் பதிவர்கள் 30 பேர் வரை வந்திருந்தார்கள்.
சாருவும், அவர் மனைவி அவந்திகாவும் வந்திருந்தவர்களை உபசரித்து, மாலை நேரத்து காபியும், சமோசாவையும் சாப்பிடுமாறு மிகவும் பணித்தார்கள்.

காமராஜர் அரங்கம் போன்ற மிகபெரிய அரங்கத்தில், புத்தக வெளியீடு நடத்துவது என்பது ஒரு எந்திரன் திரைப்பட வெளியீட்டை போல செய்யவேண்டிய விசயம், அதையும் சாரு வெற்றி கொண்டிருக்கிறார் என்றே சொல்லலாம்.அரங்கம் 60 சதம் நிரம்பியிருந்தது, அதிலும் முக்கியம் இரவு 10 மணி வரை வாசகர்கள் இருந்தனர் என்பது சாருவுக்கு வாசகர்கள் கொடுத்த முக்கியத்துவம் என்பதே சான்று.

எழுத்தாளர் பாலகுமாரன் தொடக்கம் முதல் இறுதி வரை இருந்தார், அவரின் கடலோர குருவிகள் நாவலை 100 முறையாவது படித்திருப்பேன்.


உயிர்மைப்பதிப்பகத்தின் மனுஷ்யபுத்திரன் வரவேற்புரையாற்ற,

நல்லி குப்புசாமி செட்டி அவர்கள் வாழ்த்துரை வழங்க , நல்லி அவர்கள் புத்தகம் வெளீயிட, புத்தகங்களை சாருவின் வாசக நண்பர்கள் பெற்று கொண்டது மிகச்சிறப்பு.

அதிலும், நம் நண்பர், பதிவர் நர்சிம் அவர்கள், சாருவின் சரசம், சல்லாபம், சாமியார் நித்தியானந்தர் பற்றிய புத்தகத்தை பெற்று கொண்ட பொழுது கைத்தட்டலும், விசிலும் பறந்தது.

நம் பதிவர்களின் கைத்தட்டலும், விசிலும் சாருவின் விழாவிற்கு மெருகூட்டியது எனலாம், பேச்சாளர்களின் பேச்சுகளை அவ்வளவு உற்சாகப் படுத்தினார்கள்.

வந்திருந்த பதிவர்கள்:



மணிஜி,அகநாழிகை வாசு,நித்யகுமாரன்,உண்மைதமிழன்,நர்சிம்,லக்கி,நிலாரசிகன்,அதிஷா,சாம்ராஜ்யபிரியன்,ராஜபிரியன்,ஜியரோம்சுந்தர்,
வண்ணத்து பூச்சி சூர்யா, மயில்ராவணன்,கேபிள்,கேஆர்பி செந்தில், காவேரிகணேஷ்,ஊர்சுற்றி,ரமேஷ்வைத்யா, பஸ்சில் தனது உயிர் மூச்சை வைத்து இருக்கும் ஈஸ்வரி,அசோக்,லதா மகன் இன்னும் நிறைய பேர்..


மேலும், விழா பற்றிய விபரம் அறிய நண்பர் ஜாக்கியின் தளத்தை பார்க்கலாம்.



இனி, புகைப்படங்கள்:

பதிவர் பட்டர் பிளை சூர்யா.
பதிவர், தற்பொழுதைய சமகால கவிஞர் நர்சிம்..
அகநாழிகை வாசு.
மணிஜி தண்டோரா, உண்மை தமிழன்.
பதிவர்கள் லக்கிலுக், அதிஷா, எழுத்தாளர் ஷோபாசக்தி.

பின் வரிசையில் பதிவர்கள் அஷோக், மயில் ராவணன்.
பதிவர் ஜாக்கி,சேகர், நித்யா, உண்மை தமிழன்.

பின் வரிசை கே.ஆர்.பி செந்தில், கேபிள் சங்கர்
பதிவர் நர்சிம் , லக்கிலுக்
பத்திரிக்கையாளர் கவின் மலர், எழுத்தளார் சோபா சக்தி.


உயிர்மை மனுஷ்யபுத்திரன் வரவேற்புரை
சாருவின் வாசக நண்பர்கள் புத்தக்தை பெற்று கொண்ட நிகழ்வு.
பதிவர் நர்சிம் புத்தக்த்தை பெற்று கொண்டார்.




சாருவின் மனைவி அவந்திகா அவர்கள் புத்தகம் பெற்று கொண்டார்.
நல்லி அவர்கள் வரவேற்புரை
சட்ட மன்ற உறுப்பினர் ரவிகுமார் புத்தக அறிமுக உரை
கவிஞர் தமிழச்சி தங்க பாண்டியன் புத்தக விமர்சன உரை.
கவிஞர் கனிமொழி அவர்கள் சிறப்புரை.
மதன் அவர்களின் உரை, மிக சிறப்பாகவும், அவரின் படிப்பாற்றல் மிகவும் வெளிப்பட்டது.
நந்தலாலா மிஷ்கின் உரை.


சாரு அவர்களின் புத்தக வெளீயிடு விழா, டிசம்பர் மாத இசை கச்சேரி போன்று , செவிக்கும், சிந்தனைக்கும் விருந்து வைத்த விழா என்றே சொல்லலாம்.

எழுத்தாளர் S.ராமகிருஷ்ணன் புத்தக விமர்சன உரை.

Saturday, August 21, 2010

கேபிள் சங்கரின் புத்தக வெளியீட்டு விழா--சினிமா வியாபாரம்--புகைப்படங்கள்-தொகுப்பு

அண்ணன் கேபிள் சங்கரின் புத்தக வெளியீட்டு விழா , இன்று சனிக்கிழமை மாலை தி.நகர் தக்கர் பாபா வித்யாலயாவில் சிறப்புற நடைப்பெற்றது.



கேபிளாருக்கும் , இயற்கைக்கும் என்ன ஏழாம் பொருத்தமோ? எப்பொழுது எந்த நிகழ்வினை கேபிள் ஏற்பாடு செய்தாலும் மழை கொட்டும் போல,

சென்னையில் கடந்த ஒரு வாரமாக அமைதி காத்த மழை , விழாவினையொட்டி மழையும் பெய்தது. மழையும் பொருட்ப்படுத்தாமல் 50 பேர் வந்திருந்தனர்.


தயாரிப்பாளர் பிரமிட் நடராஜன், கவிஞர் நா.முத்துகுமார், ஒளிப்பதிவாளர் மதி, கிழக்கு பதிப்பகம் பத்ரி மேடையேற , வெளியீட்டு விழா ஆரம்பமாகியது.

பிரமிட் நடராஜன் கேபிளின் குடும்பத்தை புகழ்ந்து கூறினார்,
தான் சென்னைக்கு வந்த பொழுது தனக்கு கேபிள் சங்கரின் குடும்பம் அடைக்கலம் கொடுத்ததை நினைவு கூர்ந்தார்,

இதே நினைவு கூர்தலை ஏற்கனவே கேபிளின் முதல் புத்தக வெளியீட்டிலும் கூறினார். நன்றிகளை மறக்கும் காலத்தில், இரண்டு முறை மேடையேறி நன்றிகளை தெரிவிப்பது பாராட்ட தக்கது.

மேலும் நடராஜன், பதிவர்களையும் , பதிவுகளையும் மிகவும் பாராட்டினார், வலையுலக பதிவுகள் இப்பொழுதைய டிரெண்டு என்பதை, கேபிள் சங்கரின் ஜெயா டி.வியில் நேர்காணலின் போது பதிவுகள், பதிவர்கள் பற்றி அதிகம் தெரிந்து கொண்டதாக குறிப்பிட்டார்.


மேலும் புத்தகம் குறித்தான அவரின் பார்வைகளை வெகுவாக பதிந்தார்,

அதுவும் தான் தயாரித்த சங்கமம் படம் சேட்டிலைட் ரைட்ஸ் கொடுக்கபடாத காலத்தில், தன்னுடைய படத்தை சன் டிவிக்கு வழங்கியது அப்பொழுது பரபரப்பாக பேசப்பட்ட விசயத்தை, அதன் சூட்சமத்தை , வெளியில் வராத விசயங்களை கேபிள் தன்னுடைய புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பதை கூறினார்.


கேபிள் சங்கர் மிகவிரைவில் திரைப்படம் இயக்கவேண்டும் என வாழ்த்துக்கள் கூறி விடைப்பெற்றார்.

ஒளிப்பதிவாளர் மதி அவர்கள் சுருக்கமாக சினிமா வியாபாரம் புத்தகம் குறித்தான
பார்வையை விவரித்தார். தம்மை போன்ற டெக்னிசியன்கள் , அதற்கு மேலும் உள்ள சினிமா வியாபார நுணுக்கங்களை இந்த புத்தகம் தெரிவிப்பதாக குறிப்பிட்டார்.


கவிஞர் நா.முத்துகுமார், கேபிளாரின் புத்தகத்தை பற்றி சிலாகித்து பேசினார்,

வெளியூரிலிருந்து படம் எடுப்பதற்காக ஒவ்வொரு ஊரிலிருந்து வரும் தயாரிப்பாளர்கள் கையில் இருக்க வேண்டிய புத்தகம் என்றும்,

மேலும் இந்த புத்தகம் பல பிரதிகள் விற்ற பின்னர் நடைபெறும் வெளியீட்டு விழா என்றும், இதே மாதிரி தன்னுடைய பட்டாம் பூச்சி விற்பவன் கவிதை தொகுப்பு , புத்தக கண்காட்சியில் விற்பனைக்கு வைக்கப்பட்ட பின் ,போட்ட 800 பிரதிகளில் 750 விற்றுபோக , மீதி 50 யை வைத்து கொண்டு , பாலுமகேந்திரா அவர்களை கொண்டு வெளியிட்ட விழாவில் 300 புத்தகத்திற்கு ஆர்டர் வந்த விசயத்தை சுவைப்பட கூறினார். அதே போல் கேபிளின் புத்தகம் விற்கும் என கூறினார்.


மேலும் புத்தகம் குறித்தான பார்வையில் பல நுட்பமான தகவல்களை இந்த புத்தகம் தெரிவிப்பதாக குறிப்பிடார். ஒரு படத்திற்கு விளம்பரம் எவ்வளவு முக்கியம், கலைப்புலி தாணு கூலிக்காரன் தொடங்கி கந்தசாமி படங்கள் வரை அவர் பண்ணிய விளம்பரங்கள், அதனால் அவர் பெற்ற வெற்றி,


ஜெமினி அதிபர் S.S வாசன் திரைப்பட வியாபாரம் செய்வதற்கு அந்த காலத்திலயே மும்பை சென்ற விதம்,

மேலும் கேபிள் சங்கர் அவர்களே விநியோகத்தில் ஈடுப்பட்டது,” சேது ”படத்தை விநியோகம் செய்ய ப்ரிவியூவில் பலமுறை சேது படத்தை பார்த்து, அதை வாங்கமால் கஷ்டப்பட்டது, “ உயிரிலே” என்ற படத்தை வாங்கி கஷ்டப்பட்டது என பல விசயங்களை இந்த புத்தகம் தெரிவிப்பதாக கவிஞர் நா.முத்துகுமார் தெரிவித்தார்.


கேபிள் சங்கர் தன்னுடைய ஏற்புரையில் , வந்திருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துவிட்டு, இந்த புத்தகத்தின் பங்களிப்பில் நம்முடைய பதிவர் ஹாலிவுட் பாலா முக்கியம் இடம் பெறுவதாக தெரிவித்தார்,

இந்த புத்தகத்தில் ஹாலிவுட் பகுதியில் எழுதுவதற்கு நிறைய விசயங்கள் தேவைப்பட்டதாகவும், இணையத்தில் தேடியும் கிடைக்காமல், நண்பர் பதிவர் ஹாலிவுட் பாலா உதவிக்கு வந்தார் எனவும், ஒவ்வொரு சனி, ஞாயிறுகளில் அமெரிக்காவில் உள்ள multiplex மேனேஜர்களிடம் appointment வாங்கி, தான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் பெற்று, பேட்டி எடுத்து 350 பக்கம் டேட்டாவாக கொடுத்தவர் பாலா என்றும், அவருக்கு மிகவும் நன்றி தெரிவிப்பதாக கூறினார்.


நன்றியுரையில் கிழக்கு பதிப்பகம் பத்ரி அவர்கள், இந்த துறையின் வியாபாரம் குறித்து சங்கர் தொடர்ந்து ஆரம்பத்தில் தகவல்களாக எங்களிடம் தெரிவித்தார், அதன் பின்பு புத்தகமாக போடலாம் என ஜடியா உதித்தது எனவும்,

இந்த புத்தகம் ஆண்டிற்கு 5000முதல்--8000 வரை விற்கும் எனவும், தங்களுடைய good list ல் இந்த புத்தகம் இருக்கும் என தெரிவித்தார்.


பதிவர்களிடம் , என்னிடம் திறமை இருக்கிறது, என்னிடம்கொடுத்தால் நல்ல படத்தை எடுக்க முடியும் என்பது மாதிரி புத்தகம் எழுத ஆர்வமுள்ளவர்கள் ,தன்னை தொடர்பு கொள்ளலாம் என்று பத்ரி கூறியவுடன்

நம்முடைய பதிவர் , குறும்பட இயக்குனர் ஆதிமூல கிருஷ்ணனை எல்லா பதிவர்கள் பார்த்தனர், அதன் அர்த்தம் ஆதியார் புத்தகம் எழுத போகிறார் என்பதாகவே புலப்பட்டது.

விழாவினை கிழக்கு பதிப்பகத்தார் சிறப்புடன் ஏற்பாடு செய்திருந்தனர், கிழக்கின் ஹரன் பிரசன்னா தொகுத்து வழங்கினார்.




வந்திருந்த பதிவர்கள்: கார்க்கி, அகநாழிகை பொன்.வாசுதேவன், மணிஜி தண்டோரா, சங்கர்,பெஸ்கி,குகன், சுகுமார் சுவாமிநாதன்,,லத்திப், அன்பு, சென், ஆதிமுலகிருஷ்ணன், ஜெட்லி, லக்கிலுக், அதிஷா, அதியமான், K.R.P. செந்தில்,நர்சிம், அப்துல்லா, மறத்தமிழன், பலாப்பட்டறை சங்கர், விஜய மகேந்திரன், மயில் ராவணன், எறும்பு ராஜகோபால் , காவேரி கணேஷ், புதிய பதிவர் என்னது நான் யாரா? ( பெயரெ வித்தியாசமாக இருக்கிறது).

இனி புகைப்படங்கள்:


சங்கர், சுகுமார் சுவாமிநாதன், தண்டோரா மணிஜி.

பதிவர் லக்கிலுக்


கவிஞர் நா.முத்துகுமார் “ சினிமா வியாபாரம் “ புத்தக வெளியிட பிரமிட் நடராஜன் பெற்று கொள்கிறார்.


ஒளிப்பதிவாளர் மதி பெற்று கொள்கிறார்.


கையில் புத்தகங்களோடு கூடவே புன்னகையும்


பதிவர்கள் ஜெட்லி, சங்கர், கார்க்கி, பின்னால் k.r.p செந்தில், சுகுமார் சுவாமிநாதன்.


பதிவர்கள் லக்கிலுக், அகநாழிகை பொன்.வாசுதேவன், குகன்


அதிஷா, அதியமான்.


திரு.பிரமிட் நடராஜன் சிறப்புரை





பதிவர் வெண்பூ, சகோதரர் அப்துல்லா.


ஒளிப்பதிவாளர் மதி சிறப்புரை



கவிஞர் நா.முத்துகுமார் அவர்களின் நூல் அறிமுகம் உரை


கேபிள் சங்கரின் ஏற்புரை





கிழக்கு பதிப்பகம் பத்ரி அவர்களின் நன்றியுரை.


நூலாசிரியர் கேபிள் சங்கருடன், ஒளிப்பதிவாளர் மதி.


கவிஞர் நா.முத்துகுமாருடன்.


நானும், ஒளிப்பதிவாளர் மதியும்.


சகோதரர் அப்துல்லா, காவேரி கணேஷ், நா.முத்துகுமார், நர்சிம்.


இரவின் ஒளியில் பதிவர்கள் மயில் ராவணன், எறும்பு ராஜகோபால், மறத்தமிழன், பலாப்பட்டறை சங்கர்.

அகநாழிகை, கேபிள் சங்கர், குகன்.


அன்புடன்
காவேரி கணேஷ்