Monday, January 12, 2009

வீரதளபதியின் வெற்றி காவியம் "நாயகன்"கலைஞர் தொலைகாட்சியில்









வீரம் வெளஞ்ச மண் ராமனாதபுரம் பெற்றேடுத்த சிங்கம், அனாத ரட்சகன், ஆபத்பாந்தவன், வடபழனி ஆட்டோ டிரைவர்களின் வள்ளல் பெருமான்.


தென்னகத்தின் ஆர்னால்டு.
தான் தயாரித்த படத்திற்கு தன் வசூலை பார்க்காமல் தன் ரசிகர்களுக்கு இலவச பிரியாணியும், இலவச டிக்கெட்டும் கொடுத்து படம் பார்க்க வைக்கும் தன்னலமற்ற பொதுநலவாதி.

கானல் நீராய் போய்விடுவார் என எண்ணியிருந்த தமிழ் கதானாயகர்களுக்கு தான் என்றூமே தமிழ் நெஞ்சங்களில் ஒரு நாயகன் என நீருபித்து காட்டியவர்.


அமெரிக்காவில் நாயகன் படத்தை வெளியிட்டு ,எங்கே தனக்கு போட்டியாக வருவாரோ? என தேர்தல் நேரத்தில் ஜான் மெக்யைனையும், பராக் ஓபாமாவையும் ஸ்தம்பிக்க வைத்தவர்.

இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த‌
எங்களின் வீர தளபதி

அகிலாண்ட நாயகன்

J.K.ரீத்திஷ்


அவர்களின் வெற்றி காவியம் " நாயகன் " திரைப்படம் கலைஞரின் தமிழ் புத்தாண்டு தை திங்கள், பொங்கல் திருநாளில் கலைஞர் டிவி யில் இந்திய தொலைகாட்சி வரலாற்றில், புவியியலில், அறிவியலில் முதன்முறையாக காண்பிக்கபடுகிறது.


அன்பு வலைபதிவர்களே, வலை பதிவு படிப்பவர்களே வரலாற்றின் பொன் எழுத்துக்களால் பொறிக்கபட வேண்டிய நாயகன் திரைப்படத்தை கண்டு பூர்வ ஜென்ம புண்ணியத்தை அடையுங்கள்.

இப்படிக்கு
காவேரி கணேஷ்
தலைவர்
அகில உலக JKR ரசிக மன்றம்‌.

மன்றத்து நிர்வாகிகள்
தலை வி ராப்

துணைத்தலைவர் ச்சின்னப்பையன்

செயலாளர் :
வால்பையன்

பொருளாளர் புதுகை.அப்துல்லா

கொள்கை.ப.செயலாளர் வித்யா
போர்படை தள‌பதி கார்க்கி.

மற்ற நாட்டு நிர்வாகிகள்
சிங்கப்பூர்
ஜோஸப் பால்ராஜ்

சவூதி
தமிழ்பிரியன்

ஆஸ்திரேலியா
சின்ன அம்மினி


தமிழ் மக்களுக்கு எம்.ஜி.ஆரு

தமிழுக்கு கலைஞரு

தமிழ் கவிதைக்கு பாரதியாரு

அடுக்கு மொழிக்கு டி.ஆரு


ஆந்திராவுக்கு என்.டி.ஆரு

அந்த அமெரிக்காவுக்கே

இனி இந்த ஜெ. கே .ஆரு.





















Thursday, January 8, 2009

திருமங்கலம் இடைதேர்தலும் , நான் போட்ட ஓட்டும்.















ஐயா வணக்கமுங்க சாமி, என் பேரு கருப்பசாமி, திருமங்கலம் பக்கத்துல வளையங்குளம் ண்ற ஊரு சாமி, நாலாப்பு நாலு தடவ படிச்சதுனால, அதுக்கு அப்புறம் பள்ளிகூடத்துக்கு போகல.விவசாய கூலி நானு.போன மாசம் எங்கூர்ல தேர்தல் அறிவிச்சுபுட்டாங்க. மொத்த திருமங்கலமே திருவிழா மாதிரி ஜெ ஜெ ந்னு கூட்டம் சாமி. மொத்த எளந்தாரி பயலுங்க, எம்மாதிரி கூலி வேல செய்ரவங்க எல்லாம் இங்கிட்டு, அங்கிட்டு ஓடுறான்.

நம்ப கூலிகார நண்பன் இருளாண்டிட்ட கேக்கிறேன், என்னாட பத்து நாளா நீயும் வேலைக்கு போகாம, என்னாட செய்யுறே கேட்டா , போடா முட்டா பயலெ,கிறுக்கு பய தான் வேலைக்கு போவான், தேர்தல் திருவிழால்ல நீயும் கலந்துக்குடானு என்னைய வேற கூப்பிட்டான்.

வாடா திருமங்கலத்துக்கு போலாம்ன்ட்டு, அந்த உசர பஸ்ல , சாமி டிக்கெட் ஏழு ரூபாய்ம்ல,இருளாண்டி கூட்டிட்டு போறான்..சாமி... ஊர் எல்லையை தாண்டல, கொடியும், தோரணமும், கம்பும், கட்டையுமா லாரி, லாரியா கட் அவுட்டும் போற இடத்திலெ இறங்குது. ஆமாண்டா,இருளாண்டி நம்ம ஊரு கூலு மாரியம்மன் திருவிழா மாதிரி இருக்குதுடா ந்னு நான் சொல்ல,திருமங்கலம் வந்திருச்சு.



இருளாண்டி ஒரு பெரிய மனுசன்ட்ட கூட்டி போனான், தலைவரெ,இவன் நம்ம ஆளூன்னு சொல்ரான்,டபக்குன்னு 1000 ரூபா நோட்டு எடுத்து நீட்டிட்டார்,பக்குனு ஆயிருச்சு எனக்கு பத்து ரூபாய்க்கு பஸ்ல ஏற வழியில்லாத எனக்கு1000 ரூபாயா,; வாங்கி சட்டை பையிலெ பின்னம் பக்கமா பத்திரமா வைச்சுகிட்டேன்.பெரிய மனுசன், ஓட்ட நம்ம கட்சிக்கு போட்டுருன்னாரு.எங்கூடவே ஒரு ஆயிரம் எலந்தாரி பயலுக 1000 ரூபாய் நோட்ட வாங்குறான்.

அப்ப முடிவு பண்ணேன் சாமி, இன்னும் ஒரு மாசத்துக்கு கூலி வேலைக்கு போககூடாதுன்னு, அப்புறம் அந்த உசர பஸ்ல காலு மேல காலு போட்டுக்கிட்டு வந்தேன்.வரும் பொழுது வயிரு முட்ட சாராயம் போட்டுகிட்டு வீட்டுக்கு வந்தா, என் குத்த வெச்ச சிறுக்கி அதாங்க என் பொண்டாட்டி அன்னகிளி ,குத்த வெச்ச பொழுது எப்படி உக்காந்து இருந்தாலோ ,அப்படியே இப்பவும் இலவச கலர் டிவி முன்னால் உட்கார்ந்து சீரியல் பார்க்கிரா.

அடுத்த‌ நாள் காலைல‌ இருந்து , ந‌ம்ம‌ ஊருக்கு கார், காரா வ‌ருது, ஒவ்வொரு க‌ட்சிகார‌னா வாரான், சாமி என‌க்கு ஒட்டு போடுங்க‌ன்னு ஆளுங்க‌ட்சிகார‌ன் ஒவ்வொரு வீட்டுக்கும் 1000 ரூபாய் தாரான், இதை பாத்திட்டு அடுத்த நாளே எதிர்க‌ட்சி கார‌ன் 2000 ரூபாய் தாரான். நான் விடுவேனா, எல்லாத்தையும் வாங்கிபுட்டேன்ல‌.ஒரு வார‌ம் க‌ழிச்சு வீடு, வீடா வ‌ந்து ரேஸன் கார்டு வ‌ச்சுருக்க‌வ‌ங்க‌ வீட்டுக்கு த‌லைக்கு 2000 ரூபாய் கொடுத்தார் எங்க‌ த‌ர்ம‌ பிர‌பு ஒன்றிய‌ செய‌ளாளர்.

அப்புறம் ராசு ம‌க‌ன் ராசெந்திர‌ன் வ்ந்து, க‌ருப்பு ஊர் எல்லையிலெ நாலைக்கு க‌டா விருந்து வ‌ந்துடுடா சொல்றான். குடும்ப‌மே முத நாள்லருந்து கொல‌ ப‌ட்டினி தான். அடுத்த‌ நாள் பார்த்தா ஊரே விருந்துக்கு வ‌ந்திருக்கு, நூறூ ஆடு வெட்டி, 1000 கிலோ கறி சாப்பாடு போடுது ஆளூங்க‌ட்சி ஒன்றிய‌ம்.வ‌யிரு முட்ட‌ நானும்,என் பொண்டாட்டியும், என் புள்ளயும் சாப்பிட்டு, இலையை மூடுனா, இலைக்கு அடியிலெ 1000 ரூபாய் இருக்கு சாமி....சாப்பிட்ட‌ கார‌ சாப்பாட்டுல்ல‌ க‌ண்ணுல‌ வ‌ந்த‌ உப்பு க‌ண்ணீர் கூட‌ இனிப்பா மாறீருச்சு சாமி...


பிறவு, ஒன்றியம் வந்து, கருப்பசாமி ,தண்ணீர் பார்ட்டியும் இருக்கு, சாப்பிட்டு போன்னு சொன்னார் மனுசன்.கறி சாப்பாடு போட்டு, 1000 ரூபாயும் கொடுத்து,தண்ணீ பார்ட்டிக்கு வா ன்னு கூப்பிடுறார்னு ஆடி போய்ட்டேன், தெய்வம்யா நீ.

நாலு நாள் கழிச்சு, நம்ம அமைச்சரு தார, தப்பட்டை முழங்க, முழங்காலுக்கு மேல வேட்டிய மடிச்சுக்கிட்டு 50 பேரோட வந்தார். நம்ம வீட்டு அன்னகிளீ ஆரத்தி எடுத்துச்சு அமைச்சருக்கு, அவர் முன்னால வந்த எடுபிடி அன்னகிளீ கையிலெ ஒரு சேலையை கொடுத்திட்டு போய்ட்டான். வீட்டுக்குள்ளே போய் சேலையை விரிச்சு பார்த்தா ,சேலைக்குள்ளே ரெண்டு 1000 ரூபாய் நோட்டு இருக்கு சாமி.

பிறகு ஒரு நாள் நம்ம கருப்பு எம்.ஜி.ஆரு,பொண்டாட்டியுடன் வீதி, வீதியா வந்தார்,என்னைய பார்த்தவுடன் தம்பி நம்ம கட்சிக்கு ஒட்டு போடுங்கனு கேட்டார்.அப்புறம் சரத்குமார் அண்ணாச்சியும், சித்தி ராதிகாவும் ஒண்ணூ சேர வந்து , என்னைய பாத்து கும்பிட்டு, வோட்டு எனக்கு போடுப்பான்னு கேட்டாரு.அதிர்ச்சியிலே ஆடி போய்டேன், எம்மாம் பெரிய மனுசங்க ரெண்டு பேரும், நம்மளே பாத்து கும்பிடு போடுரானென்று எனக்கு அளூகையெ வந்திருச்சு சாமி.



தேர்தலுக்கு ரெண்டு நா முந்தி,ராவு 10 மணி இருக்கும், தட தடன்னு கதவு தட்டும் சத்தம் கேட்டுச்சு, யாருன்னு கதவு தொரந்து பார்த்தா எங்க ஊர் சுயேட்சை வேட்பாளர் சந்தானம்,கூட 100 பேரும் இருந்தாங்க. கருப்பசாமி, கூலு மாரியம்மன் கோயில்கிட்ட நீ வான்னு சொல்ரார்.சரி பணம் தான் தர போறார்ன்னு போணேன்.




மாரியம்மன் கோயில் முன்னாடி ஊர்காரங்க அத்தனை பேரும் இருக்காங்க, ‌சந்தானம், இந்த ஊர்காரன் நான் தேர்தல்ல நிக்கிறேன், நீங்க எல்லோரும் எனக்கு ஓட்டு போடனும் சொல்லி கையெடுத்து கும்பிடுறான்.சரின்னு ஊர் சொல்லிச்சு. அதுக்கு சாட்சியா இந்த மாரியம்மன் முன்னால சத்தியம் பண்ணி கொடுங்கன்னு சந்தானம் கேட்டான். வேற வழியில்லாம நானும் கூலு மாரியம்மன் முன்னால சந்தானத்துக்கு ஒட்டு போடுறேன்னு சத்தியம் பண்ணேன்.


நாளைக்கு தேர்தல்,ராத்திரி 11 மணி இருக்கும்,எந்திருச்சு நின்னு எனக்கு கெடச்ச காச எண்ணி பார்த்தேன், சுளூவா 12000 ரூபாய் தேருச்சு, இந்த மாதிரி மாதம் ஒரு தேர்தல் வரகூடாதான்னு ஓரே கிறு கிறுப்பு.யாருக்கு ஓட்டு போடலாம்னு ஓரே குழப்பம். என் பொண்டாட்டி அன்னகிளிகிட்ட கேட்டேன்,எம்புள்ள யாருக்கு ஓட்டு போடலாம்னு? அது ஓரே வார்த்தையிலெ சொல்லிபிடுச்சு, இப்பிடி கேட்டுபிட்ட, சித்தி ராதிகாவுக்கு தான் போடனும்னு எனக்கு ஆர்டரே போட்டாள்.அவ ஒரு சீரியல் பைத்தியமுங்க;;;.

முடிவு பண்ணிட்டேன் சாமி.


மறு நா காலைல 8.30 மணிகெல்லாம் ஓட்டு போட போய்ட்டேன், சாவடியிலுருந்த போலீசு என்னைய மொறச்சு பார்த்தான்,அவன் கிடக்கிறான் ,என்ட இருக்கிற 12000 ரூபாய் அவன்ட கூட இருக்காதுனு மிதப்புல உள்ளே போணேன்.அங்க இருந்த ஆபிசரு எங்கையில மை தடவி, அடப்புக்குள்ள இருந்த ஓட்டு பெட்டிக்கு போக சொல்லி பட்டன அமுக்க சொன்னார்.

விடுவேனா சாமி.........

8000 ரூபாய் கொடுத்த ஆளுங்கட்சிக்கும், 4000 ரூபாய் கொடுத்த எதிர்கட்சிக்கும், வீடு தேடி வந்த கருப்பு எம்.ஜி.ஆருக்கும், எம் பொண்டாட்டி ஆசையா சொன்ன சித்தி ராதிகாவுக்கும், கூலு மாரியம்மன் கோயில்ல சத்தியம் வாங்குன எங்க ஊரு சந்தானத்துக்கும் ஓட்டு போட்டுட்டேன்.


சரி போகலாம்னு முடிவு பண்ணா ,அப்ப தான் ஞாபகம் வருது, பக்கத்து ஊரு பாரபத்தி காரன் சுயேட்சையாக நின்னு, நாலு நாளைக்கு முன்னால என் வீட்டு வாசல்ல கால்ல விழுந்து ஓட்டு கேட்டான்.சரி அவனுக்கும் ஓட்டு போட்ருவோம்னு அவனுக்கும் ஓட்டு போட்டேன் சாமி...


இப்ப தான் சாமி என் மனசு குளூந்து போச்சு:::

வீட்டுகிட்ட வந்தவுடன் பக்கத்து வீடு ராசு கேட்டான், மாப்ளே யாருக்கு ஓட்டு போட்டேன்னு?நான் எல்லோருக்கும் தான் ஓட்டு போட்டேன்னு சொன்னா, போடா மட பய மவணேனு சொல்றான்.

எனக்கு ரோசம் வந்திருச்சு, நீ என்னடா எங்கப்பார திட்டுரேன்னு சொல்லி,என் முதுகுல இருந்த அரிவாள எடுத்துப்புட்டேன்.அப்புறம் பங்காளி இருளாண்டி வந்து சமாதானம் பண்ணினான்.




எஞ்சாமிக‌ளா? நீங்கெல்லாம் ப‌டிச்சவ‌ங்க‌ தாணே? நான் ஓட்டு போட்ட‌து ச‌ரி தாணே? அதெப்ப‌டி சாமி, காசையும் வாங்கிபுட்டு, க‌றி சோறும் சாப்பிட்டு,கோயில்ல‌ ச‌த்திய‌மும் ப‌ண்ணி, ந‌ம்ம‌ கால்ல‌ விழறவனுக்கும் நாம துரோகம் பண்லாங்களா, நீங்களே சொல்லுங்க.