Tuesday, December 29, 2009

கிராமத்து நினைவலைகள்---புகைப்படங்கள்

சூரியனை காதலித்த “ சூரியகாந்தி’’
கிராமத்தில் எங்களின் வீடு
அந்தி சாயும் வேளையில் கம்மா--ஓ அய்யனார் கம்மாவாக இருக்குமோ ?
ஆவாரம் பூவூ-- ஆறேழு நாளா நீ போகும் பாதையில் பூத்திருக்கு.
தான் என்ன செய்கிறோம் என்றே தெரியாத வாழ்க்கை வாழும் மனநலம் பாதித்த சிறுவன்.
கிராமத்து “ பசங்க”

பாரம் சுமந்த காளை பணி முடித்து பட்டியில் கட்ட போறான் எங்க ஊர் ராஜா--கேட்டரிங் மாணவன்.
மாடுவும், கன்றும் மாலை வேளையில் பசியாறும் காட்சி.
கோழியின் பின்னே சேவல்கள் --புணர்ச்சியின் காலமோ
அறுவடை முடிந்தபின் எஞ்சியுள்ள வைக்கோல் படப்பு, கால்நடைக்கு வருடத்தின் வாழ்வாதாரம்.
சோளம் விதக்கையிலேலேலேலே..............இளையராசாவின் குரல் காற்றில் ஒலிக்கிறது.
பட்டணத்து அவசர கதியில் மறந்தே போன கள்ளி செடி

இவ்வருட கருணை காட்டாத வருண பகவானால் அடி மட்டத்தில் கிணற்று நீர்

மாடு கன்ணு மேய்க்க, மேய்கறத பாக்க
வளர்ந்த நெற்பயிரினருகே வீசும் காற்றை , சுவாசிக்க ,பட்டணத்து கார்பன் காற்று வெளியேறியது.

Wednesday, December 16, 2009

பயங்கள்--ஹைக்கூ


என் இருக்கையை
யாரேனும் கேட்டுவிடுவார்களோ
என்ற பயம்.

ரயிலில்
லோயர் பெர்த்.

Sunday, December 13, 2009

சாரு நிவேதிதாவின் 10 நூல்களின் வெளியீட்டின் தொகுப்பும்,புகைப்படங்களும்

L வரிசையில் முதலாவது இருக்கையில் அயல்நாட்டு பதிவர் துளசி கோபால் அவர்கள்
புத்தகம் வெளியிட்ட சா.கந்தசாமியுடன், 10 புத்தகங்களை பெற்று கொண்டவர்கள்,விழா நாயகன் சாரு
விழா மேடையில் நிகழ்ச்சி தொகுப்பாளர் நிர்மலா பெரியசாமி.


விழாவின் தொகுப்பு:

சாருவை இதற்கு முன்னர் நான் பார்த்திரவில்லை. வெள்ளியன்று நடந்த அகநாழிகை புத்தக வெளியீட்டில் என்னை அறிமுகப்படுத்தி கொண்டு, 1/2 மணி நேரம் பல விசயங்களை விவாதித்தோம், குறிப்பாக புத்தகம் எழுதும் பழக்கம்,வாசிக்கும் பழக்கம் நம் குடும்பத்தினரிடையே எப்படி எடுத்துக்கொள்ளபடுகிறது என்பது விவாதிக்கபட்டது.
மிக எளிமையான, பந்தா இல்லாத எழுத்தாளராக k.k நகர் சாலையில் பேச்சு நீண்டது.அவரின் 10 நூல்களின் வெளியீட்டு விழா அழைப்பிதழை தந்து வரும் படி அழைத்தார்.

10 நூல்களை எழுதுவது என்பது சாதாரணமான விசயமல்ல,அதோடு இந்த வருடம் மொத்தம் 90 நூல்களை வெளியிடும் உயிர்மை பதிப்பகம் பாராட்டதக்கது.


மனுஷ்ய புத்திரன் வரவேற்புரையாற்ற ,முதுபெரும் எழுத்தாளர் சா.கந்தசாமி சாருவின் 10 புத்தகங்களையும் வெளியிட,சிறப்புரையாற்ற வந்தவர்கள் பெற்று கொண்டனர்.(விவரங்கள் புகைப்படங்கள் வாயிலாக).

எழுத்தாளர் s.ராமகிருஷ்ணன், சாருவின் ” மலாவி என்றொரு தேசம் ” என்ற புத்தகத்தை பெற்றுக்கொண்டு, மலாவி என்ற தேசத்திற்கு போகாமல் இங்கிருந்த்படியே அந்த தேசத்தை விவரிக்கும் பாங்கு அதிசயக்கிறது என்றார்.

இயக்குனர் மிஷ்கின் ,நல்ல வாசிப்பு திறன் கொண்ட இயக்குனர் என்பது அவரது பேச்சில் தெரிந்தது. சரளமான நடை, சாரு மேல் கொண்ட மதிப்பு, அவரின் நந்தலாலா படம் வராமல் இருப்பதற்கான தவிப்பு , மேடையின் கீழ் உள்ள வாசகர்களை அறிவு ஜீவிகள் என்பதை சொல்லி, பல திரைப்பட துறையின் உண்மைகளை வெளிப்படுத்தினார்.

இயக்குனர் வசந்தபாலன் ,அமீரை பருத்தி வீரனில் கொண்டாடிய சாரு, தன்னை ஏற்கவில்லை என்ற ஏக்கத்தை வெளிபடுத்தினார்.

கல்கி அவர்கள் திருனங்கைகளின் இன்றைய அவலங்களை சொல்லி, அவர்களுக்கான ஆதரவையும், அங்கீகாரத்தையும் அளிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

திரு. பாரதி கிருஷ்ணகுமார் பேச்சில் அனல் தெறித்தது. இன்றைய அரசியல் வாதிகளை நம் தலைக்குமேல் சுற்றும் பிணம் தின்னும் கழுகுகளாகவும் , அதை நம் தலை மேல் கூடுகட்ட அனுமதிக்ககூடாது என்று பேச்சை முடித்தார்.


திரு.அழகிய பெரியவனின் பேச்சு தலித் இன மக்களின் அவலநிலைகளையும், அவர்கள் மேல் மேற்கொள்ளபடும் அடக்குமுறைகளையும் சுட்டிக்காட்டினார்.

திரு.ஷாஜி அவர்கள் மொழிபெயர்பின் அவசியத்தையும், சாருவின் தைரியத்தையும் பாராட்டினார்.

பதிவர்கள் துளசி கோபால், உண்மை தமிழன், சிவராமன், லக்கி லுக் , அதிஷா, பட்டர்பிளை சூர்யா, தண்டோரா, நர்சிம், கேபிள் சங்கர், வெண்பூ, முரளி கண்ணன், காவேரி கணேஷ், அப்துல்லா, டாக்டர்.புரூனோ,,D.R.அசோக், உமா ஷக்தி ,ரோமியோ பாய் மற்றும் பல எனக்கு அறிமுகம் இல்லாத பதிவர்கள் வந்தனர்.

நிகழ்ச்சி நிரல்களை திருமதி.நிர்மலா பெரியசாமி தொகுத்து வழங்க ஏற்புரையாற்ற , திரு.சாரு மைக் அருகே வந்தபொழுது இரவு மணி 9.15, இதில் முக்கியமான விசயம் , பிலிம் சேம்பரில் இருக்கையோ 220, ஆனால் வாசகர் கூட்டம் 400 யை தொட்டது. இந்த 400 பேரும் சாருவின் ஏற்புரை 10.00 மணிக்கு முடியும் வரை இருந்தனர். வாசகர் மத்தியில் சாருவிற்கான மரியாதை தெரிந்தது.

இரவு நண்பர்களுக்கான விருந்தில் சாருவே ஒவ்வொருவரிடம் சென்று , அவர்களின் மெனுவை கேட்டு ,வரவழைத்து கொடுத்தார்.அவரின் எளிமை தான் இத்தனை வாசகர் கூட்டத்தை தன்னகத்தே வைத்துக்கொள்ளும் ரகசியம் புலப்பட்டது.
விழா நாயகன் சாரு நிவேதிதா ஏற்புரை

கல்கி உரையாற்றுகிறார்


பதிவர்களின் நடுவில் பிரபல பதிவர் “ லக்கி லுக் யுவ கிருஷ்ணா”பதிவர் புதுகை. அப்துல்லா
உயிர்மை மனுஷ்ய புத்திரன், இயக்குனர் வசந்த பாலன்.

முன் வரிசையில் பதிவர் உமா ஷக்தி


அய்யனார் கம்மா படைப்பாசிரியர் நர்சிம் ( என்னோட படத்துக்கு நீ தாம்பா ஹீரோ)பதிவர்கள் வெண்பூ, நீரோடை முரளி கண்ணன், எண்டர் கவிஞர் கேபிள் சங்கர்.
பதிவர்கள் பட்டர் பிளை சூர்யா, எண்டர் கவிஞர் கேபிள் சங்கர், அதிஷா

அரங்கு நிறைந்த கூட்டம், முன் வரிசையில் முதல் ஆளாய் பதிவர் தண்டோரா மணிஜி,மூன்றாவது வரிசையில் முதல் ஆளாய் பதிவர் ரோமியோ பாய்.


” நரகத்திலிருந்து ஒரு குரல்” இயக்குனர் வசந்த பாலன் பெற்று கொள்கிறார்.” வாழ்வது எப்படி” திருமதி.செல்வி பெற்று கொள்கிறார்.
” அருகில் வராதே” இயக்குனர் மிஷ்கின் பெற்று கொள்கிறார்

” அதிகாரம் அமைதி சுதந்திரம்” திரு.பாரதி கிருஷ்ண குமார் பெற்று கொள்கிறார்.


“ மலாவி என்றொரு தேசம் “ எஸ். ராமகிருஷ்ணன் பெற்று கொள்கிறார்.”ஒழுங்கின்மையின் வெறியாட்டம் “ பெற்று கொள்கிறார் திருமதி. அவந்திகா சாரு.
” ரெண்டாம் ஆட்டம் “ கல்கி பெற்று கொள்கிறார்.

” கனவுகளின் மொழிபெயர்ப்பாளன்” ஷாஜி பெற்று கொள்கிறார்.


” தாந்தேயின் சிறுத்தை “ பெற்று கொள்கிறார் திரு.அழகிய பெரியவன்.சாருவின் “ கெட்ட வார்தை “ புத்தகம் மதன் பாப் பெற்றுக்கொள்கிறார்.
மேடையில் சா.கந்தசாமி, மதன் பாப், மிஷ்கின், பாரதி கிருஷ்னகுமார், சாரு

விழா மேடையில் மனுஷ்ய புத்திரன், ஷாஜி, அழகிய பெரியவன், ராமகிருஷ்ணன்,கல்கி, சா.கந்தசாமி.

நன்றி
அன்புடன்
காவேரி கணேஷ்

Saturday, December 12, 2009

அகநாழிகை-புத்தக வெளியீட்டு விழா-புகைப்படங்கள்

மூத்த பதிவர்கள் பட்டர் பிளை சூர்யா, கவிஞர் கேபிள் சங்கர், தண்டோரா மணிஜி


கோவில் மிருகம் கவிதை படைப்பாசிரியர்--என்.விநாயக முருகன்
அகநாழிகை வெளீயிட்டாளர் பொன்.வாசுதேவன் தொகுப்புரை
மருத்துவர் புரூனோ, யுவகிருஷ்ணா
உமா சக்தி அய்யனார் கம்மா நாயகன் நர்சிம், ஜ்யாவரம்சுந்தர், யுவகிருஷ்ணா,யாத்ரா,டி.வி.ராதாகிருஷ்ணன்,
விழா மேடையில் ஞானி,பாஸ்கர் சக்தி.
சாருவின் கனிவான பேச்சு.

Saturday, November 28, 2009

படித்ததில் பிடித்தது--இப்படியும் ஒரு கலெக்டர்

லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து! இப்படியும் ஒரு கலெக்டர்

''என்னை கோயம்புத்தூருக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணியிருந்த நேரம். என் பொண்ணு யாழினிக்கு அப்போ மூணு வயசு. திடீர்னு ஒருநாள் ராத்திரி அவ மூச்சுவிட சிரமப்பட்டா. ஹாஸ் பிடலுக்குத் தூக்கிட்டுப் போனா உடனே அட்மிட் பண்ணச் சொல்லிட் டாங்க. மாசக் கடைசிங்கிறதால கையில ஆயிரம் ரூபாய்கூட இல்லை. புது ஊரு. அறிமுகம் இல்லாத மனுசங்க. எனக்குக் கீழே வேலை பார்க்குறவங்ககிட்ட கடன் கேட்கவும் சங்கடமா இருந்துச்சு. காஞ்சிபுரத்துல நான் வேலை பார்த்துட்டு இருந்தப்ப, எனக்கு நண்பரான ஒரு ஸ்கூல் டீச்சரும் அப்ப கோவைக்கு டிரான்ஸ்ஃபர் ஆகி வந்திருந்தாரு. அவர்கிட்ட தயங்கிட்டே நாலாயிரம் ரூபாய் கடன் கேட்கவும், அரை மணி நேரத்துல கொண்டுவந்து கொடுத்தார். உடனே, குழந்தைக்கு ட்ரீட்மென்ட் ஆரம்பிச்சுட்டோம். ஆனா, சம்பளம் வாங்கினதும் அந்தக் கடனை அடைச்சதும்தான் என் மனசுல இருந்த பாரம் இறங்குச்சு!''

சகாயம் ஐ.ஏ.எஸ்., நாமக்கல் மாவட்ட ஆட்சியர். மதுரையில் ஒன்பது லட்ச ரூபாய் மதிப்பில் எல்.ஐ.சி. ஹவுஸிங் லோன் மூலம் கட்டப்பட்ட ஒரு வீடு, வங்கியில் 7,172 ரூபாய் சேமிப்பு எனப் பகிரங்கமாகத் தனது சொத்துப் பட்டியலை வெளியிட்ட இந்தியாவின் முதல் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம். 'லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து' வாசகத்துக்குக் கீழ் தலை நிமிர்ந்து அமர்ந்திருக்கிறார் சகாயம்.

''நான் அந்த கோயம்புத்தூர் சம்பவத்தை ஏன் சொல்றேன்னா... அப்ப என் கன்ட்ரோல்ல 650 மதுபானக் கடைகள் இருந்தன. லைசென்ஸ் புதுப்பிக்க கடைக்குத் தலா 10 ஆயிரம் ரூபாய்னு கொடுக்கத் தயரா இருந்தாங்க. நான் ஒரு வார்த்தை சொல்லியிருந்தா, அடுத்த அஞ்சாவது நிமிஷம் 65 லட்ச ரூபாய் என் வீடு தேடி வந்திருக்கும். ஆயிரம் ரூபாய்கூட கையில் இல்லாத, மகளுக்கு உடம்பு சரியில்லாத சூழ்நிலையில் மனநிலை என்ன மாதிரி இருக்கும்னு யோசிச்சுப்பாருங்க. ஆனா, அதெல்லாம்தான் ஓர் அரசு அதிகாரியின் நேர்மைக்கான சோதனை. நேர்மையா இருக்குறதுல ஒரே ஒரு சிக்கல் மட்டும்தான். நாளுக்கு நாள் நமக்கு எதிரிகள் அதிகரிச்சுட்டே போவாங்க. அவங்களை மட்டும் சமாளிச்சுட்டாப் போதும்!'' - தடதடக்கும் வார்த்தைகளில் கொப்பளிக்கிறது உற்சாகம்.


புதுக்கோட்டை மாவட்டம் பெருஞ்சுனை குக்கிராமம்தான் என் ஊரு. 'மத்தவங்க தோட்டத்து மாங்காய் தெருவுல கிடந்தாக்கூட எடுத்துட்டு வரக் கூடாது'ன்னு சொல்ற அம்மா. 'நீ படிச்சு கலெக்டர் ஆகி, உதவின்னு கேட்டு வர்றவங்களுக்கு எல்லாம் உதவணும்டா'ன்னு சொல்லிட்டே இருக்குற அப்பா. 'கலெக்டர்தானே... ஆயிடுவோம்'னு படிச்சேன். ஆயிட்டேன். வேலைக்குச் சேர்ந்த முதல் நாள் நம்ம மனசு எந்தளவுக்குப் புத்துணர்ச்சியோடவும் புனிதமாகவும் இருக்கோ... கடைசி நாளின்போதும் அதே உணர்ச்சியோடு ஓய்வு பெறணும்னு மட்டும் முடிவு பண்ணேன்.

காஞ்சிபுரத்துல டி.ஆர்.ஓ-வா இருந்தப்ப ஒரு பெரியவர் தான் வாங்கிய பெப்சியில் அழுக்குப் படலம் இருந்ததாகப் புகார் கொடுத்தார். சாம்பிளை லேப் டெஸ்ட்டுக்கு அனுப்பினதுல, 'மனிதர்கள் குடிக்க ஏற்ற பானமில்லை'ன்னு ரிப்போர்ட் வந்தது. சட்டப்படி அந்த நிறுவனம் மேல என்ன நடவடிக்கை எடுக்கணும்னு ஒரு அறிக்கை தயாரிச்சேன். ரொம்ப யோசனைக்குப் பிறகு தாசில்தார்கிட்ட எட்டு பூட்டு மட்டும் வாங்கிட்டு வரச் சொன்னேன். எதுக்குன்னு புரியாம வாங்கிட்டு வந்தவரைக் கூட்டிக்கிட்டு மதுராந்தகத்துல இருக்குற பெப்சி கம்பெனிக்குப் போனேன்.

நான் தயாரித்த அறிக்கையின் ஒரு நகலை கம்பெனி மேனேஜர்கிட்ட கொடுத்துட்டு, 'கம்பெனியைப் பூட்டி சீல்வைக்கப் போறோம். எல்லாரையும் வெளியே வரச் சொல்லுங்க'ன்னு சொன்னோம். அந்த மேனேஜரைவிட என்கூட வந்த தாசில்தார் ஆடிப் போயிட்டாரு. 'சார்... பெரிய பிரச்னை ஆயிடும். எதுக்கும் கலெக்டரை ஒரு வார்த்தை கேட்டுக்கலாம்'னு பதறுனாரு. 'கலெக்டரைக் கேட்டா சீல்வைக்க விட மாட்டாரு. சட்டப்படி இந்தக் கம்பெனியை மூட நமக்கே அதிகாரம் இருக்கு. நீங்க தைரியமா உங்க கடமையைச் செய்யுங்க'ன்னு அவரை உள்ளே அனுப்பினேன். ஒரு மணி நேரம் கழிச்சு இன்னும் பதற்றத்தோடு வெளியே வந்தவரு, 'சார்... அவங்க அமெரிக்கா வரைக்கும் பேசுறாங்க சார். சி.எம்-கிட்ட பேசுறதாச் சொல்றாங்க சார். என்ன பண்ணலாம்?'னு கேட்டாரு. 'உள்ளே இருக்கிறவங்களை அரெஸ்ட் பண்ணிட்டு சீல்வைக்க வேண்டியதுதான்'னு நான் சொல்லவும்தான் எல்லாரும் பயந்து வெளியே வந்தாங்க. கம்பெனியை இழுத்து மூடி, எட்டு பூட்டுகளையும் போட்டு சீல்வெச்சுட்டோம்.

நான் உடனே அலுவலகத்துக்குப் போகாம ஒரு குக்கிராமத்துக்குப் போயி ரேஷன் கடை, பள்ளிக்கூடத்தை எல்லாம் ஆய்வு பண்ணி முடிச்சுட்டு, ராத்திரி எட்டு மணிக்கு வீட்டுக்கு வந்தேன். என் மனைவி வாசல்லயே காத்துட்டு இருந்தாங்க. கலெக்டர், சீஃப் செக்ரெட்டரி, உள்துறைச் செயலாளர்னு பலரும் என்னைக் கேட்டு வீட்டுக்கு போன் பண்ணிஇருக்காங்க. நான் திரும்ப எல்லோருக்கும் போன் பண்ணா, 'யாரைக் கேட்டு சீல்வெச்சீங்க? என்ன காரியம் பண்ணியிருக்கீங்க தெரியுமா?'ன்னு எல்லாரும் கேள்வி கேட்டாங்க. 'நான் என் கடமை யைத் தான் சார் செஞ்சேன். மக்களுக்கு நல்லது செஞ்சதுக்காக சஸ்பெண்ட் பண்ணா, தாராளமாப் பண்ணிக்கோங்க'ன்னு சொல்லிட்டேன்.

மறு நாள் எந்தப் பத்திரிகைலயும் பெட்டிச் செய்தியாக்கூட பெப்சிக்கு சீல்வெச்ச சம்பவம் ரிப்போர்ட் செய்யப்படவே இல்லை.ரெண்டு நாள் கழிச்சு ஜூனியர் விகடன்ல மட்டும் அந்தச் செய்தி விரிவா வந்திருந்தது. அதுக்குப் பிறகுதான் பெப்சிக்கு நான் சீல்வெச்ச விஷயமே வெளி உலகத்துக்குத் தெரிஞ்சது.
இதுவரை 15 இடங்களுக்கு என்னை மாத்தி மாத்திப் பந்தாடிட்டாங்க. இப்போதான் முதன்முதலா நாமக்கல் மாவட்டத்துக்கு கலெக்டர் ஆகியிருக்கேன். மாவட்டம் முழுக்க ஒரு கோடி மரக் கன்றுகள் நடத் திட்டமிட்டு, ஏழு லட்சம் மரக் கன்றுகளை நட்டாச்சு. அவற்றின் முறையான பராமரிப்புக்கும் ஏற்பாடு பண்ணியாச்சு. இன்னும் 10 வருஷத்துல அதிக மரங்கள் உள்ள மாவட்டமாக நாமக்கல் இருக்கும். ஏற்கெனவே நொந்து போயிருக்கும் விவசாயிகளை, 'குறை தீர்க்கும் கூட்டத்துக்கு வா'ன்னு ஒவ்வொரு மாசமும் கலெக்டர் ஆபீசுக்கு அலைக்கழிக்கிறது நல்லாவா இருக்குன்னு நானே விவசாயிகளைத் தேடிப் போக ஆரம்பிச்சேன். ஒருநாள் ராத்திரி முழுக்க அந்தந்த கிராமத்துலயே தங்கி, அவங்க குறைகளை வாழ்ந்து பார்த்துட்டு வருவேன். அப்பதான் அவங்க சொல்றதுக்கு முன்னாடியே அவங்க குறைகள் என்னன்னு நாமளே உணர முடியும்!'' என்கிற சகாயம், தன் மகள் யாழினியை மடியில் வைத்துக்கொண்டு, ''சொல்லுடா குட்டி... உயர உயரப் பற... வானம் வசப்படும்!'' என சொல்லிக் கொடுக்கிறார்.

''உயர உயரப் பற... வானம் ஒரு நாள் வசப்படும்'தான் கரெக்ட்!'' - திருத்திச் சிரிக்கிறாள் கலெக்டர் மகள்!

Saturday, November 7, 2009

பதிவர் சந்திப்பு ரத்தும், நான் எடுத்த புகைப்படங்களும்


மழை வேறு நேற்று மாலை முதல் இப்பொழுது வரை கொட்டுகிறது, இன்று பதிவர் சந்திப்பு என்று நாள் குறித்துள்ளார் கேபிள், சந்தோசமாக மனம் இருந்தது. கொட்டின மழையிலும், ரோட்டில் கிடக்கிற தண்ணியை பார்த்து , பதிவர் சந்திப்பு ரத்து என அறிவிப்பு வந்தது.

சரி, மழையை செல்போனில் புகைப்படம் எடுக்கலாம் என்றால், வீட்டில், வெளீல போன , மவனே,ம், ஹுக்கும் என்று நர்சிம் பாணியில் வேறு, நாம தான் சும்மா இருக்கமாட்டோமெ, சரின்னு குடையை எடுத்து கொண்டு இந்த மொட்டை மாடிக்கு போய்விட்டு, வீட்டை ஒரு சுத்து சுற்றி விட்டு வ்ரேன்னுட்டு , செல்போனில் படம் எடுத்தேன்.காட்சிகள் இங்கே.

சென்ற மாதம் வைத்த கொரியன் புல்லில் மழை நீர்முழுவதும் தண்ணீரால் கழுவப்பட்ட ரோடு
70 அடியில் இருந்த கிணற்று நீர் 3 நாள் பெய்த மழையில் வெறும் 15 அடியில் நீர்.


ஒரு வருடமாக மழையை பார்க்காத 50 வருட‌ மாமரம் மனம் குளிர்ந்த மகிழ்ச்சியில்.


தேங்கிய மழை நீரில் தேரோட்டம்.


இருண்ட வானமும், எழும்பி நிற்கும் தென்னையும்.மொட்டை மாடியில் மழை நீர்.


குளமாய் தேங்கி நிற்கும் நீர்.


மழையில் குளித்த மாமர இலைகள்.


மழைக்கு, குட்டியுடன் வந்திருக்கேன்,கொஞ்சம் இடம் கொடுப்பா கேட்கிறார் பூனையார்.


என்னது பதிவர் சந்திப்பா,எதாவது ஏற்பாடு பண்ணே, மிரட்டும் மேகம்.

அன்புடன்

காவேரி கணேஷ்