Monday, January 11, 2010

பதிவர் சந்திப்பும், புத்தகக் கண்காட்சியும் EXCLUSIVE புகைப்படங்கள் --PART 2

சந்தோசங்கள் என்றுமே சலிப்பதில்லை, அதே போல தான் பதிவர் சந்திப்பும். கேபிளார் பதிவர் சந்திப்பு குறித்தும், அவ்வமயம் பதிவர் சர்புதீன் வெள்ளி நிலா என்ற மாத இதழ் வெளியீடு குறித்தும் ஒரு சந்திப்புக்கு இந்த 2010 புத்தகக் கண்காட்சியில் ஏற்பாடு செய்திருந்தார்.

இது நான்காவது முறை, இந்த 2010 புத்தகக் கண்காட்சிக்கு செல்ல இருப்பது, சென்னை போக்குவரத்து நெரிசலில் சுமார் 1 மணி நேரம் வண்டி ஓட்டி 12 km கடந்து முதுகுவலியுடன் கண்காட்சியில் நுழைந்து, பதிவர்களை கண்டவுடன் வலி போய், மனமெல்லாம் சந்தோசம் நிறைந்தது.ஏறதாழ 35 பதிவர்கள் வந்திருந்தனர்.

பட்டர்பிளை சூர்யா,கேபிள் சங்கர்,ரோமியோ பாய்,ராஜகோபால் (எறும்பு),சர்புதீன்,பலா பட்டறை, பொன்.வாசுதேவன், சிவராமன், ஜாக்கி சேகர்,கார்க்கி, குகன், கென், நர்சிம், செந்தில், விஷ்ணு,, நிசார் அகமது, சங்கர், லக்கி யுவகிருஷ்ணா, அதிஷா, மயில் ராவணன், வா.மணிகண்டன், வாசகர் திருமுருகன், , அன்புடன் மணிகண்டன், புலவன் புலிகேசி, ஜெட்லி, மீன் துளியான், D.R. அசோக், அப்துல்லா, அவிங்க ராஜா, அ.மு.செய்யது, தண்டோரா மணிஜி, நிலா ரசிகன், செல்வகுமார் பதிவர்கள் கணிசமான எண்ணிக்கையில் வந்திருந்தனர்.

பதிவர்கள் அனைவருக்கும் முக்கியமான லேண்ட் மார்க்காக கிழக்கு பதிப்பகமே அமைந்திருந்தது.கிழக்கை ஒட்டிய பாதையே பதிவர்கள் சந்திக்கும் கூடமாக இருந்தது.

சர்புதீன் தன் மாத இதழான வெள்ளி நிலா குறித்தும், முழுக்கவே இந்த இதழ் பதிவர்களுக்காக வர இருப்பது குறித்தும் பேசினார். பதிவர்கள் தாங்கள் வாங்கிய புத்தகங்கள் குறித்தும், அதன் சிறப்புகளை குறித்தும் பேசினர்.

நான் வாங்கிய புத்தகங்கள்:

தேசாந்திரி-- s.ராமகிருஷ்ணன்,
பூவுலகு---சுற்றுபுறச்சூழல் இதழ்
சேலன்ஞ்--- நக்கீரன் கோபால்
புத்தர், தருமமும், சங்கமும்
இன்னொரு கோணம் -- ஜக்கி வாசுதேவ்

ஜெயமோகன் -- இந்திய ஞானம்

தந்தை பெரியார்--- இனிவரும் உலகம்,, மனிதனும், மதமும்,,, இதுதான் மகாமகம்,, பேய், பில்லி, சூன்யம், ஆவி, சோதிட மோசடிகள்

கூட்டத்திலிருந்து வரும் குரல்-- ஜென்ராம்

ப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க--- கோபி நாத்
சிந்தனை விருந்து--- தென்கச்சி கோ.சுவாமினாதன்

இனி புகைப்படங்கள்:


கிழக்கின் பாதையை அடைத்து, பதிவர்கள் சந்திப்பு. நர்சிம், வா.மணிகண்டன், சர்புதீன்,ராஜகோபால் (எறும்பு),கேபிள் சங்கர், குகன், பலாபட்டறை சங்கர், அடலேறு, நிலா ரசிகன்.


நடுவில் ஜாக்கி சேகர்.

நான், கலை இயக்குனர் செல்வகுமார்

புத்தகக் கண்காட்சிக்கு நண்பர் கலை இயக்குனர் செல்வகுமார் வந்திருந்தார், இந்த 34 வயதே நிரம்பிய ஆர்ட் டைரக்டர் , இயற்கை, ஈ, தற்பொழுது வெளிவந்த பேராண்மை படங்களின் கலை இயக்குனர். அவரை பதிவர்கள் மத்தியில் அறிமுகப்படுத்தினேன். பதிவர்கள் அனைவரும் நண்பர் செல்வகுமாரை வாழ்த்தினர். ஜாக்கி சேகர், அவரை வெகுவாக பாராட்டி, பேராண்மை படத்தின் செட் காட்சிகளான் பழங்குடியினரின் வாழ்விடங்களை சிலாகித்து பேசினார்.
செல்வகுமாருக்கு கேபிளாரை அறிமுகப்படுத்தினேன். செல்வகுமார் வலையுலகம் பற்றி கேட்டு அறிந்து, கேபிள் சங்கரின் வலைபூ முகவரியை கேட்டு பெற்று கொண்டார். செல்வகுமாருக்கு வருங்கால வாழ்த்துக்களை சொல்ல விடைபெற்றார்.
வெள்ளி நிலாவை மும்முரமாக படிக்கும் கார்க்கி, பலா பட்டறை சங்கர், தண்டோரா, சர்புதீன்
ரோமியோ பாய்,, ஜாக்கி சேகர்.
அரங்கு நிறைந்த கூட்டம்.
ஜாக்கி சேகர், பட்டர் பிளை சூர்யா, கேபிள், கென், சிவராமன், ராஜகோபால் (எறும்பு), பலா பட்டறை சங்கர், சர்புதீன்
லக்கிலுக் யுவகிருஷ்ணா, அதிஷா
கிழக்கையே வெளுக்க வைக்கும் வாசகர் கூட்டம்.
நர்சிமும் , கார்கியும் பதிவர் அய்யனாரின் உரையாடலினி புத்தகம் வாங்கிய மகிழ்ச்சியில்.
பட்டறையை போட்ட பதிவர்கள்
பதிவர் குகனின் ” என்னை எழுதிய தேவதைக்கு” பதிவர் காவேரி கணேஷ் பரிசளிக்க தண்டோரா பெற்று கொள்ள, தண்டோரா நம் பதிவர் பா.ராஜாராம் எழுதிய ”கருவேல நிழல் “ எனக்கு பரிசளித்தார்.









Monday, January 4, 2010

என்னின் காதலிக்கு........... (உரையாடல் கவிதை போட்டிக்கான கவிதை)


அடியே !
என் கிறுக்கல் ராஜாங்கத்தில்
நீ தானடி எப்பொழுதும் தலைவி.

நான் நிலவை பார்க்க நினைக்கும் பொழுதெல்லாம்
உன் வீட்டு ஜன்னலை தானடி பார்க்கிறேன்.

உன்னை பற்றி எழுதும் பொழுதெல்லாம்
என் பேனா முனை நிமிர்ந்து தானடி எழுதுகிறது.

என் வாழ்க்கை இலையுதிர் காலமாக
இருந்த பொழுது
நீயல்லவாடி வசந்தத்தை வரவழைத்தாய்.

பட்டமரமாய் பரிதவித்து கொண்டிருக்கையில்
நம்பிக்கை பூக்களை பூக்க விட்டவளே.

நான் நெருஞ்சியாய் இருந்த பொழுது
என்னை குறிஞ்சியாய் ஆக்கினவளே.

இந்த சிக்காத காளையை
அந்த சின்ன விழிக்குள் எப்படியடி
சிறை பிடித்தாய்.

சூன்யங்களோடு இருக்கையில்
சூரியனோடு சுகப்படுத்தினியடி.

நட்சத்திரமாக வாழ நினைத்த பொழுது
நிலவாய் ஆக்கியவளே.

எப்படியடி உன் முன்னால் மட்டும்
இரும்பு துண்டாய் போனேன்.
அந்த சின்ன விழிக்குள் காந்தமாடி?

உன் இமைகளின் அழைப்பினால் தானடி
நான் கூட காதல் கடலில் சங்கமித்தேன்.

என் ஹீமோகுளோபின்கள் எல்லாம் கருகியதால்
உன் குளோபின்கள் தானடி
என் இரத்தத்தில் கலந்துள்ளது.
மருத்துவன் பார்த்தவுடன் கேட்டானே!
யாரை காதலிக்கீறீங்க என்று?

அந்த வெள்ளிதிரைக்கு முன்னால்
எத்தனையோ சில்மிஷங்கள்.
ச்சீய்ய் போங்க! என்பாயேடி.
இப்பொழுது உணர்கிறேன்.
உன் மனதை விட்டு போவதற்காடி
அப்படி சொன்னாய்.

இன்றும் கூட நீ எனக்கு தொட்டுவிடும் தூரம் தான்.
அது யாரடி உன் பக்கத்தில் கைகுழந்தையோடு !
உன் கணவனா?

உன்னிடமிருந்து
அந்நியபடுத்தப்பட்ட இந்த ஆத்மாவின்
இதய ஒலியை உற்று கேளடி.
இன்னும் கூட உன் பெயரை தானடி
உச்சரிக்கிறது.


குறிப்பு: உரையாடல் கவிதை போட்டிக்காக

Sunday, January 3, 2010

சென்னை புத்தகக் கண்காட்சி --EXCLUSIVE புகைப்படங்கள்


புத்தகக் கண்காட்சியின் முகப்பு வாயில்
பதிவர் உழவன், கேபிள் சங்கர் ( சங்கர் 2 புத்தகம் எழுதுகிறார்)
உயிர்மையில் வாசகர்கள்
அகநாழிகை பதிப்பகம் பொன்.வாசுதேவன்
எழுத்தாளர் S.ராமகிருஷ்ணன், கேபிள் சங்கர்
இந்த வருடம் புத்தகக்கண்காட்சி 500 அரங்குகளுடன் களை கட்டுகிறது. பல பதிவர்களின் கன்னி புத்தகங்கள் வெளியாகியுள்ளன. வாகனங்கள் நிறுத்துவதற்கு விசாலாமான இடங்கள். புத்தகங்களின் அணிவகுப்பு மலையென் குவிந்து கிடக்கிறது. சிறியவர் முதல் பெரியவர்களுக்கான புத்தகங்கள் கொட்டி கிடக்கிறது. மொத்த குடும்பத்திற்கேற்றார் போல் அவரவர் விருப்பதிற்கேற்ப விட்டுவிட்டால் கணிசமான நல்ல புத்தகங்கள் உங்கள் குடும்பத்தினர் கையில்.

கண்ணாடி அணிந்திருப்பவர் “ பைத்தியகாரன்” சிவராமன். பதிவர் சுரேஷ் கண்ணன் (வெள்ளை சட்டையில்)
பத்திரிக்கையாளர், எழுத்தாளர் அஜயன் பாலா.
இடமிருந்து வலமாக அய்யனார் கம்மா நர்சிம், வத்தலக்குண்டு காசி, வசனகர்த்தா, எழுத்தாளர் பாஸ்கர் சக்தி
கூட்டம் கூடியிருக்கும் பதிவர்கள் இடம் to வலம் பதிவர் அதியமான், மருத்துவர் புருனோ, நம்ம ஹீரோ நர்சிம், எழுத்தாளர் , கிழக்கின் எழுச்சி பா.ராகவன், பின்னால் பதிவர் அன்பு, பதிவர் ரவிஷங்கர்.
கிழக்கு பதிப்பகம் அரங்கு
நக்கீரன் கோபாலுடன் பதிவர் காவேரி கணேஷ் ( அட நாந்தாங்க)
தோளோடு தோள் சாய்ந்த பதிவர் ரவிசங்கர், நர்சிம்
அனலாய் பா.ராகவன், புதிய தலைமுறை யுவகிருஷ்ணா
எழுத்தாளர் ”ரஜினி” ராம்கி
அரங்கினுள் வாசகர்கள்
இங்கேயும் விட்டேனா பார், மினி பதிவர் சந்திப்பு
அணி வகுத்த கார்கள் எண்ணிக்கை ஆயிரம் தாண்டும்

Friday, January 1, 2010

வலையுலகப்படைப்பாளிகள்-- தினமணி கட்டுரை

இன்று புத்தாண்டு, வலைபதிவர்களுக்கு நல்ல சந்தோசம் தரக்கூடிய காலை செய்தியாக இன்றைய தினமணி நாளிதழில் நம் வலைபதிவர்களை பற்றியும்,அவர்களின் வலை பூக்களைப்பற்றியும் சிறப்பான கட்டுரை வந்துள்ளது.
அதன் தொகுப்பு: