
பதிவர்கள் ஜயா சீனா, தருமி , ஜெர்ரி ஈசானந்தா, கார்த்திகை பாண்டியன், ஸ்ரீ, சரவணன், பிரபு, வெற்றி, தேவன் மாயம், வெளியூர் பதிவர்கள் வால் பையன், ஜாபர், காவேரி கணேஷ், பெண் பதிவர் தேவி கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வை மதுரையில் நடத்த வேண்டும் என எண்ணம் கொண்டு ஜெர்மனி குமார் என்ற பதிவர் மருத்துவரை ஜெர்மனியிலிருந்து தொடர்பு கொண்டு, மருத்துவரை வரவழைத்து, நிகழ்வு முடிந்த பின்பு , கார்த்திகை பாண்டியன், தருமி அவர்களிடம் ஜெர்மனியிலிருந்து 1 மணினேரம் உரையாடி, நிகழ்வு குறித்து கேட்டறிந்தார். அவரின் முயற்சி பாராட்டதக்கது.
மதுரை அமெரிக்கன் கல்லுரி 150 வருட பாரம்பரியங்களை கொண்ட கல்லுரி, பல்வேறு கல்வியாளர்களையும்,அறிஞர்களையும், கலைஞர்களையும் உருவாக்கிய கல்லூரி. நம்முடைய பதிவர்களில் பிரபல சென்னை பதிவர்கூட இந்த கல்லுரியில் படித்தவர்.
விஸ்தாரமான , நூற்றுக்கணக்கான மரங்களை இயற்கை சூழலுடன் கொண்ட இக்கல்லுரியில் படிப்பது மதுரை, சுற்றுவட்டார மாணவர்களின் கனவு. இக்கல்லுரியில் குழந்தைகள் மன நலம், குழந்தைகள் பேணிகாப்பு,குழந்தைகள் வாழும் தற்கால சமூக சூழல் பற்றிய கருத்தரங்கம் மிகவும் சிறப்பாக தொடங்கபெற்றது.
இங்கே மருத்துவர் ஷாலினியைப்பற்றி :
காலை பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் மதுரை வந்திறங்கியவரை, வரவேற்க வேண்டிய நம்பதிவர்கள் பக்கத்து கம்பார்ட்மெண்டில் தேடி கொண்டிருந்தனர். மருத்துவர் ஷாலினியோ யாரையும் எதிர்பார்காமல் விடுவிடுவென இறங்கி , ரயில்னிலையத்தை விட்டு நடந்து கொண்டிருந்தார்..பின்பு பதிவர்கள் கண்டறிந்து, அவருக்கு தேவையான வசதிகள் செய்துகொடுத்தனர்.
மாலை 3.30 மணியளவில் அரங்கில் 100 பேர் கூடியிருக்க ,நம் மூத்த பதிவர் சீனா அறிமுக உரையாற்ற , நண்பர் கார்த்திகை பாண்டியன் வரவேற்புரையாற்ற , மருத்துவர் ஷாலினி மேடையேறாமல், வந்திருந்த மக்களோடு இணைந்து, ஒரு கேள்வி பதில் பகுதியாக சுமார் 3 மணி நேரம் பேசினார். மிகவும் எளிமை, கலந்து கொண்டவர்களின் அருகே சென்று நட்புடன் பேசியது, எல்லா கேள்விகளுக்கும் இன்முகத்துடன் பதில், மக்களிடையே இருக்கும் தயக்கங்களை உடைத்தெறிந்து, ஆழ்மனத்தில் இருக்கும் எல்லா கேள்விகளுக்கும் மிகவும் விளக்கமாக பதிலளித்தார் .
இன்றைய வளர்ந்து வரும் பன்னாட்டு நாகரீக சூழலில் ஒவ்வாரு பெண், ஆண் குழந்தைகள் பல்வேறு வயதினரிடையே பழக வேண்டியுள்ளது. அதில் ஏறப்டும் சங்கடங்கள், வக்கிரகாரர்களின் தொடுகைகள், அந்த தொடுகைகளின் மூலம் வித்தியாசம் அறிந்து கொள்வது என்பன போன்ற குழந்தைகள் நலம் பற்றிய உரையை சுமார் 45 நிமிடம் நிகழ்த்தினார். இதிலும் முக்கியமாக ஆண்களின் வயது 25 க்குள், 65 க்கு மேல் உள்ளவர்களின் உணர்வுகளின் உந்துதல் வடிகால்கள் குழந்தைகளிடத்திலோ, பெண்களிடத்திலோ செல்வதை சரி செய்யப்படவேண்டும் என தெரிவித்தார்.
முக்கியமாக பெண்கள் அச்சம், மடம், நாணம் , பயிர்ப்பு போன்றவற்றை தங்கள் வீட்டில் வைத்துக்கொள்ளுங்கள் என்றும் , வெளிசூழலில் திமிர்தல் கொள்கையை கடைபிடிக்குமாறு கேட்டுக்கொண்டார். பெண்கள் வெளியில் தைரியமாக இருக்க வேண்டும்மென்றும், எந்த சூழலிலும் ஆண்கள் தவறாக முயற்சி செய்தால் , ஆரம்பத்திலயே தட்டி கேட்டுவிட்டால் நெருங்க மாட்டார்கள் என்றும், எந்த பெண் தங்கள் மேல் காட்டப்படும் வக்கிரங்களை தட்டிகேட்காமல், அமைதியாக இருப்பவர்கள் திரும்ப, திரும்ப பல்வேறு சங்கடங்களுக்கு ஆளாகின்றனர் என்பதை தெரிவித்தார்.
45 நிமிட உரைக்குபின், 10 நிமிட தேனீர் இடைவேளை, பின்பு கேள்வி-பதில் பகுதி மக்கள் எழுதிக்கொடுத்த கேள்விகளை தொகுத்து, மருத்துவரிடம் கேட்கும் பொறுப்பு எனக்கு கொடுக்கப்பட்டது.
ஒவ்வொரு கேள்விக்கும் அழகாக, பல உதாரணங்களுடன் விளக்கமளித்தார். பின்பு நம் பதிவர்கள், மகளிருக்கான பிரத்யேக சந்தேகங்களை தீர்க்க எல்லா ஆடவரையும் அறையை விட்டு வெளியே வரசொல்லி , மருத்துவர்-மகளிர் உரையாடல் தொடங்கியது.
தருமி ஜயா நன்றியுரையாற்ற, வெளியூர் பதிவர்கள் வால் பையன், மருத்துவர் தேவன் மாயம் நினைவு பரிசு வழங்க நிகழ்வு நிறைவுபெற்றது. அதன் பின்னும் மருத்துவர் ஷாலினி 4 பெண்களுக்கு அவர்களின் சோகங்களுக்கு கவுன்சலிங் கொடுத்து கொண்டிருந்தார்.
இரவு மணி 7.15 , மருத்துவருக்கு இரவு 8.45 மணிக்கு பாண்டியன் எக்ஸ்பிரஸில் டிக்கெட், அப்ப்டியும் தருமி ஜயாவிடம் , மதுரை கிருத்தவ மிஷின் மருத்தவமனையில் தனக்காக ஒரு நோயாளி காத்துக்கொண்டிருக்கிறார் என்று தெரிவிக்க , ஜயா தருமி தன்னுடைய காரில் ஏற்றி கொண்டு புறப்படுகிறார்.
இதோ வால்பையன் , மார்ச் மாதம் ஈரோட்டிற்கு, கருத்தரங்குக்கு வரவேண்டுமென மருத்துவர் ஷாலினியிடம் கேட்கிறார், அவரும் அடுத்த் நொடியே சரி என்கிறார்.
சென்னை மருத்துவர்கள் பணம் என்ற விசயத்துக்கு பின்னால் ஒடிகொண்டிருக்கையில் , சேவை மனநலம் கொண்ட மருத்துவர்கள் நம்கண்ணில் பட்டிருப்பது ஆச்சரியம் தான்.
இனி புகைப்படங்கள்:














