Monday, January 12, 2009

வீரதளபதியின் வெற்றி காவியம் "நாயகன்"கலைஞர் தொலைகாட்சியில்

வீரம் வெளஞ்ச மண் ராமனாதபுரம் பெற்றேடுத்த சிங்கம், அனாத ரட்சகன், ஆபத்பாந்தவன், வடபழனி ஆட்டோ டிரைவர்களின் வள்ளல் பெருமான்.


தென்னகத்தின் ஆர்னால்டு.
தான் தயாரித்த படத்திற்கு தன் வசூலை பார்க்காமல் தன் ரசிகர்களுக்கு இலவச பிரியாணியும், இலவச டிக்கெட்டும் கொடுத்து படம் பார்க்க வைக்கும் தன்னலமற்ற பொதுநலவாதி.

கானல் நீராய் போய்விடுவார் என எண்ணியிருந்த தமிழ் கதானாயகர்களுக்கு தான் என்றூமே தமிழ் நெஞ்சங்களில் ஒரு நாயகன் என நீருபித்து காட்டியவர்.


அமெரிக்காவில் நாயகன் படத்தை வெளியிட்டு ,எங்கே தனக்கு போட்டியாக வருவாரோ? என தேர்தல் நேரத்தில் ஜான் மெக்யைனையும், பராக் ஓபாமாவையும் ஸ்தம்பிக்க வைத்தவர்.

இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த‌
எங்களின் வீர தளபதி

அகிலாண்ட நாயகன்

J.K.ரீத்திஷ்


அவர்களின் வெற்றி காவியம் " நாயகன் " திரைப்படம் கலைஞரின் தமிழ் புத்தாண்டு தை திங்கள், பொங்கல் திருநாளில் கலைஞர் டிவி யில் இந்திய தொலைகாட்சி வரலாற்றில், புவியியலில், அறிவியலில் முதன்முறையாக காண்பிக்கபடுகிறது.


அன்பு வலைபதிவர்களே, வலை பதிவு படிப்பவர்களே வரலாற்றின் பொன் எழுத்துக்களால் பொறிக்கபட வேண்டிய நாயகன் திரைப்படத்தை கண்டு பூர்வ ஜென்ம புண்ணியத்தை அடையுங்கள்.

இப்படிக்கு
காவேரி கணேஷ்
தலைவர்
அகில உலக JKR ரசிக மன்றம்‌.

மன்றத்து நிர்வாகிகள்
தலை வி ராப்

துணைத்தலைவர் ச்சின்னப்பையன்

செயலாளர் :
வால்பையன்

பொருளாளர் புதுகை.அப்துல்லா

கொள்கை.ப.செயலாளர் வித்யா
போர்படை தள‌பதி கார்க்கி.

மற்ற நாட்டு நிர்வாகிகள்
சிங்கப்பூர்
ஜோஸப் பால்ராஜ்

சவூதி
தமிழ்பிரியன்

ஆஸ்திரேலியா
சின்ன அம்மினி


தமிழ் மக்களுக்கு எம்.ஜி.ஆரு

தமிழுக்கு கலைஞரு

தமிழ் கவிதைக்கு பாரதியாரு

அடுக்கு மொழிக்கு டி.ஆரு


ஆந்திராவுக்கு என்.டி.ஆரு

அந்த அமெரிக்காவுக்கே

இனி இந்த ஜெ. கே .ஆரு.

10 comments:

கார்க்கி said...

அண்ணே இந்தப் பதிவ நம்ம சங்கத்து வலையுல போட்டுக்கலாமா?

SUREஷ் said...

//ஆந்திராவுக்கு என்.டி.ஆரு

அந்த அமெரிக்காவுக்கே

இனி இந்த ஜெ. கே .ஆரு.//


முதல்பத்தி நூறு சதவீதம் உண்மையாகிவிட்டதே.. இந்தப் பத்தியும் உண்மையாகும் நாள் வெகுதூரத்தில் இல்லை.

KaveriGanesh said...

வாங்க கார்க்கி, இதென்ன கேள்வி, ஓரு கொ.ப.செ யா இருந்துட்டு இப்படி கேட்கலாமா?


தாராளாமா எடுத்து போடுங்க, நம் JKR n புகழ் பரப்புங்கள்

KaveriGanesh said...

முதல்பத்தி நூறு சதவீதம் உண்மையாகிவிட்டதே.. இந்தப் பத்தியும் உண்மையாகும் நாள் வெகுதூரத்தில் இல்லை.


வாங்க சுரேஷ்

வரும் 2013 ம் ஆண்டில் நிச்சயம் நடக்கும்

அன்புடன் சிவா said...

whats the procedure to join JKR fanclub?

நிலா பிரியன் said...

Focus Lanka திரட்டியில் உங்களையும் இணைக்க
http://www.focuslanka.com

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் சேர்த்துள்ளோம்.

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்

வால்பையன் said...

தலைவா உங்க நம்பர் சொல்லுங்க
மிஸ்ஸாகிடுச்சு!

9994500540

விக்னேஷ்வரி said...

ஹாஹாஹா.....

:)))))))) ROTFL

எம்.எம்.அப்துல்லா said...

கணேஷ் அண்ணா ஏன் இப்பல்லாம் நீங்க எழுதுறது இல்லை??