
13/2/2010 மாலை கேபிளாரை பார்பதற்காக தொடர்பு கொண்ட பொழுது , discovery book palaceல் இருப்பதாக தெரிவித்தார். அங்கு சென்று பார்த்தால், அந்த புத்தக கடை உரிமையாளருக்கு blog என்றால் என்ன? , பதிவு போடுவது எப்படி ?, திரட்டியில் இணைப்பது எப்ப்டி என விளக்கி கொண்டிருந்தார். இது மாதிரி எனக்கு தெரிந்த வரை 100 பதிவர்களை உருவாக்கியுள்ளார் கேபிள். பின் ஏன் 100 பதிவர்கள் விழாவுக்கு வரமாட்டார்கள்?
விழா அரங்கமே நிறைந்து காணப்பட்டது.கேபிளாரின் குடும்பத்தினர், பரிசலின் குழந்தை, வெண்பூவின் குழந்தை யென குடும்ப விழாவாகவே களை கட்டியது.
பதிவர்களை ஒருவருக்கொருவர் ஏற்கனவே பார்த்தவர்கள், chat ல் பேசி, தொலைபேசியில் பேசி அன்றுதான் நேரில் கண்டவர்கள் என நெகிழ்ச்சியாக காணப்பட்டது.
பதிவர், நாகரத்னா பதிப்பகத்தின் உரிமையாளர் குகன் தொடக்கவுரையாற்ற, கேபிள் வாழ்த்துரை வழங்க,, கேபிள் மகன் தானும் பேச வேண்டும் என கேட்க, அவன் , ஓரே வாக்கியம் பேசினான். ” எங்கப்பா ஒரு காமெடி பீசு ” என சொல்ல மொத்த கைதட்டலில் அதிர்ந்தது அந்த அரங்கம். வீட்டிலும் கேபிள் எத்துனை நகைச்சுவையாளர் என்பது புலப்பட்டது.
லெமன் ட்ரீயும்.. ரெண்டு ஷாட் டக்கீலாவும், நூலை பிரமிட் நடராஜன் வெளியிட அஜயன் பாலா பெற்றுக் கொண்டார்.
பரிசலின் டைரிகுறிப்பும், காதல் மறுப்பும் நூலை அகநாழிகை வாசு வெளீயிட, பிரமிட் நடராஜனும், அஜயன் பாலாவும் பெற்று கொண்டார்கள்.
பிரமிட் நடராஜன், கேபிளின் தந்தைக்கு நெருங்கிய உறவு, தான் சென்னைக்கு வந்த பொழுது, அடைக்கலம் கொடுத்தது, உதவி செய்தது என நினைவுகூர்ந்தார்.நன்றி மறப்பது நன்றன்று.
பிரமிட் நடராஜன் கேபிளின் எழுத்துக்கள் 55 வயது நிரம்பிய எழுத்தாளரின் எழுத்துக்கள் போன்று இருக்கிறது என்றார். கேபிள் தன்னை இனிமேல் யூத்து என சொல்ல மாட்டார் என நினைக்கிறேன்.
தமிழ்ப்படம் இயக்குனர் c.s.அமுதன் , தன்னுடைய படம் வெற்றிக்கு பதிவர்கள் ஒரு காரணம் என நன்றி பாராட்டினார். மிகவும் நேர்த்தியாக விமர்சனம் பதிவர்களால் எழுதப்படுகிறது என தெரிவித்தார்.
அஜயன் பாலா மிக நீண்ட உரை நிகழ்த்தினார், கேபிளின் எழுத்துக்கள் சுஜாதாவை நினைவு படுத்துகின்றன என்றவுடன் கேபிளின் முகத்தில் களிப்பு தென்பட்டது, பின்னே கேபிள் சுஜாதாவின் தீவிர ரசிகர் ஆயிற்றே.
அகநாழிகை வாசுதேவன் , கேபிளையும் , பரிசலையும் பாராட்டி, முக்கியமாக பதிப்பாளர் குகனை வாழ்த்தினார்.
கேபிள் ஏற்புரையில் லே.அவுட் டிசைனருக்கும் (இந்த புத்தகத்திற்காக 20 டிசைன் செய்தார்), பதிவர் சுகுமாரின் flash வேலைகளுக்கும், தமிழ்ப்படம் வ்சனகர்த்தா சந்துருவுக்கும் . , நன்றி கூறினார்.
பரிசலின் ஏற்புரையில் பதிவர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார். தொடர்ந்து எழுதினால் நிச்சயம் நம் எழுத்துக்கள் அங்கீகரிக்கப்படும் என தெரிவித்தார்.
நிகழ்வுகளை பதிவர் சுரேகா அருமையாக தொகுத்து வழங்கினார், தராசு, உண்மைதமிழன்,கார்க்கி ஆகியோர் எழுத்தாளர்களை பாராட்டி பேசினர்.
கலந்து கொண்ட பதிவர்கள் எனக்கு தெரிந்த வரையில்.
ஜ்யோவ்ராம் சுந்தர், பைத்தியகாரன் சிவராமன், அப்துல்லா,நர்சிம், லக்கி லுக், அதிஷா, வெண்பூ, சொல்லரசன், கார்க்கி, உண்மை தமிழன் , பட்டர் பிளை சூர்யா, மயில் ராவணன், பலாப்பட்டறை சங்கர், அன்புடன் மணிகண்டன், ஆதிமூல கிருஷ்ணன், தண்டோரா, டோண்டு ராகவன்,ரோமியோ, பெஸ்கி, ஜெயம் கொண்டான், மார்த்தாண்டன், விநாயக முருகன், சஞ்செய் காந்தி, மோகன் குமார், டி.வி ராதாகிருஷ்ணன், அண்ணாச்சி வடகரை வேலன், ச்ர்புதீன், முரளிகுமார், பத்மநாபன்,வெங்கி, சுகுமார்,அத்திரி, அதி பிரதாபன், சங்கர், வெயிலான்,சுரேகா,ஈரவெங்காயம், ஜெட்லி, சிவகுமார், மற்றும் பலர்.
நிகழ்ச்சி ஆரம்பத்தில் தமிழ்தாய் வாழ்த்து, இறுதியில் தேசியகீதத்துடன் நிறைவு பெற்றது.



































சுகுமார், பட்டர் பிளை சூர்யா அளித்த வாழ்த்து மடல்.
நிகழ்வு பற்றிய சக பதிவர்களின் பதிவுகள்.
http://tvrk.blogspot.com/2010/02/blog-post_14.html
http://veeduthirumbal.blogspot.com/
அன்புடன்
காவேரி கணேஷ்.