
உடைந்து சிதறிய
முகக்கண்ணாடியின்
சில்லு ஒன்று
அவள் இதழில்…
கரத்தில் எடுத்தால்
வலி பொறுக்க மாட்டாளெண்னி
என் இதழால்
சில்லை எடுத்து
உயிர்ந்து கிளம்பிய
குருதியை சுவைத்தால்
ச் சீய்.. போடா..
ரத்த காட்டேரி என்கிறாள்..
குளமாய் , குட்டையாக தேங்க நினைக்காமல், பிரவாகத்தோடு அறிவை தேடி ஆறாய், நதியாய் எப்பொழுதும் ஓட நினைப்பவன்.
அன்பான பதிவர்களே,
டிசம்பர் சீஸன் இசைக்கச்சேரி போல டிசம்பர் மாதம் நம் பதிவர்களின் புத்தக வெளியீடு நிகழ்வுகளாய் இருந்ததினால் பதிவர் சந்திப்பு நடத்த முடியாமல் போனது.
இதோ, பதிவர் சந்திப்பு இந்த வாரம் 26/2/2011 சனிக்கிழமை மாலை 6 மணியளவில் சென்னை K.K. நகர் முனுசாமி சாலையில் உள்ள டிஸ்கவரி புக்பேலஸில் நடைபெற உள்ளது.
அவ்வமயம், தமிழ் திரையுலகில் தென்மேற்கு பருவகாற்றாய் வீசிய இப்பட்த்தின் இயக்குனர் திரு.சீனுராமசாமி, நம் பதிவர்களை சந்திக்க மிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.
சிங்கை பதிவர் சகோதரர் ஜோசப் பால்ராஜ் சென்னையில் உள்ளார், பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ள இருக்கிறார்.
மேலும், நம் பதிவர்கள் ,
சென்னையில் இந்த பிப்ரவரி மாத்தில் மழை பெய்கிறது , அப்படியானல் அண்ணன் கேபிள் சங்கர் ஏதேனும் நாவல் எழுதுகிறாரா? ,
மயில் ராவணனால் உருவாக்கப்பட்ட ஜெய் ஜாக்கி சங்கத்தின் நோக்கம் என்ன ?
பிரபல பதிவர் சட்டமன்ற உறுப்பினருக்கான நேர்காணலில் கலந்து கொள்கிறாரா?
கவுதம் பீட்டர் மேன்னின் நடுநிசி நாய்கள் படம் பார்த்த நம் பதிவர் அதிஷா, மிக்க மனநலம் பாதித்துள்ளார் , அதற்கான காரணம் என்ன ?
பட்டர் பிளை சூர்யா எங்கே போனார் ?
கிழக்கின் டிஸ்கவுண்ட் சேல்ஸ் ஒரு பார்வை.
இவற்றை பற்றி தெரிந்து கொள்வதற்கான பதிவர்களின் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெறவுள்ளது. அனைத்து பதிவர்களும், வாசகர்களும் கலந்து கொள்ள வேண்டுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இடம் : டிஸ்கவரி புக் பேலஸ்
நேரம் : மாலை 6 மணி
தேதி : 26/02/11
கிழமை: சனிக்கிழமை
சிறப்பு விருந்தினர் : இயக்குனர் திரு. சீனு ராமசாமி.
அன்புடன் ,
காவேரி கணேஷ்