Wednesday, October 23, 2024

BLACK -தமிழ் திரைப்படம் -- என் பார்வையில்

என் பார்வையில்: ப்ளாக் திரைப்படம் : Science Fiction Movie பேய், பிசாசு படங்கள் ஹாரர் என்ற வகையில் திரையை கொடுமைப்படுத்தி கொண்டிருக்கின்ற வேளையில், தரமான SCINECE –FICTION படமாக வந்திருக்கிறது, ப்ளாக் .. நாயகன் –ஜீவா வெகு சில ஆண்டுகளுக்கு பிறகு புது இயக்குனர் பாலசுப்பிரமணி தயவில், சிறந்த come back.. ECR சாலையில் உள்ள புது Gated community villa வில் , 4 நாட்கள் ஒய்வு எடுக்க போகும் தம்பதி சந்திக்கும் பிரச்சனைகள்.. ஆனால் , எல்லா பிரச்சனைகளும் எந்தவொரு அனுமான்ஷ்ய சக்தியாலும் நடைபெறமால், முழுக்க நாயகன் நோக்கும் , சிந்திக்கும் விதத்தில் காரணமாக நடைபெறுகிறது.. 3 டைம் லூப்களில் நாயகன் பார்க்கும் கோணம் ரொம்பவே வித்தியாசம்.. Super Moon, Parallel Reality, Quantum Physics , Worm Hole Theory போன்ற அறிவியலோடு கலந்து கட்டி, எடுத்த படம்.. 1964 ஆம் ஆண்டில் super Moon நிகழ்வில்,இதே இடத்தில் விவேக் பிரச்சன்னா சந்த்தித்த பிரச்சனைகளை கேட்க்கும் ஜீவா வை, Grandfather Parodox என்ற தியரியோடு, இயக்குனர் சம்பந்தபடுத்தி விடுவாரோ என்று நினைத்த பொழுது, அந்த மாதிரி எதுவும் நடக்கவில்லை.. Good. இதில் Parallel Reality மட்டுமே , படம் முழுக்க முக்கியத்துவம் பெறுகிறது.. மொத்தபடமே 2 மணி நேரத்தில் முடிவடைகிறது.. 2 மணி நேரம் சீட் நுனியில் உட்கார வைக்கும் திரைக்கதை.. படம் பார்த்து,அடுத்த 24 மணி நேரம் Parallel Reality யோடு.,நம்மை சம்பந்தப்படுத்தி பார்க்கும் எண்ணம் நமக்கு தோன்றுவதே படத்தின் வெற்றியாக பார்க்கிறேன்.. Music: Sam CS . Editing: Philomin Raj, Cinematographer: Gokul Benoy, மூவரும் இணைந்து பெரு வெற்றியை கொடுத்திருக்கிறார்கள்.. படம் வந்து 10 நாட்களுக்கு பிறகு சென்னையில் 100+ ஸ்கீரின்களாக திரையிடலை அதிகப்படுத்தியிருக்கிறார்கள்.. தரமான Science Fiction படத்தை ரசிக்கும் மக்கள் , பார்க்க வேண்டிய படம்.. well done ”BLACK “ Team..