புத்தகம் வெளியிட்ட சா.கந்தசாமியுடன், 10 புத்தகங்களை பெற்று கொண்டவர்கள்,விழா நாயகன் சாரு
விழா மேடையில் நிகழ்ச்சி தொகுப்பாளர் நிர்மலா பெரியசாமி.
விழாவின் தொகுப்பு:
சாருவை இதற்கு முன்னர் நான் பார்த்திரவில்லை. வெள்ளியன்று நடந்த அகநாழிகை புத்தக வெளியீட்டில் என்னை அறிமுகப்படுத்தி கொண்டு, 1/2 மணி நேரம் பல விசயங்களை விவாதித்தோம், குறிப்பாக புத்தகம் எழுதும் பழக்கம்,வாசிக்கும் பழக்கம் நம் குடும்பத்தினரிடையே எப்படி எடுத்துக்கொள்ளபடுகிறது என்பது விவாதிக்கபட்டது.
மிக எளிமையான, பந்தா இல்லாத எழுத்தாளராக k.k நகர் சாலையில் பேச்சு நீண்டது.அவரின் 10 நூல்களின் வெளியீட்டு விழா அழைப்பிதழை தந்து வரும் படி அழைத்தார்.
10 நூல்களை எழுதுவது என்பது சாதாரணமான விசயமல்ல,அதோடு இந்த வருடம் மொத்தம் 90 நூல்களை வெளியிடும் உயிர்மை பதிப்பகம் பாராட்டதக்கது.
மனுஷ்ய புத்திரன் வரவேற்புரையாற்ற ,முதுபெரும் எழுத்தாளர் சா.கந்தசாமி சாருவின் 10 புத்தகங்களையும் வெளியிட,சிறப்புரையாற்ற வந்தவர்கள் பெற்று கொண்டனர்.(விவரங்கள் புகைப்படங்கள் வாயிலாக).
எழுத்தாளர் s.ராமகிருஷ்ணன், சாருவின் ” மலாவி என்றொரு தேசம் ” என்ற புத்தகத்தை பெற்றுக்கொண்டு, மலாவி என்ற தேசத்திற்கு போகாமல் இங்கிருந்த்படியே அந்த தேசத்தை விவரிக்கும் பாங்கு அதிசயக்கிறது என்றார்.
இயக்குனர் மிஷ்கின் ,நல்ல வாசிப்பு திறன் கொண்ட இயக்குனர் என்பது அவரது பேச்சில் தெரிந்தது. சரளமான நடை, சாரு மேல் கொண்ட மதிப்பு, அவரின் நந்தலாலா படம் வராமல் இருப்பதற்கான தவிப்பு , மேடையின் கீழ் உள்ள வாசகர்களை அறிவு ஜீவிகள் என்பதை சொல்லி, பல திரைப்பட துறையின் உண்மைகளை வெளிப்படுத்தினார்.
இயக்குனர் வசந்தபாலன் ,அமீரை பருத்தி வீரனில் கொண்டாடிய சாரு, தன்னை ஏற்கவில்லை என்ற ஏக்கத்தை வெளிபடுத்தினார்.
கல்கி அவர்கள் திருனங்கைகளின் இன்றைய அவலங்களை சொல்லி, அவர்களுக்கான ஆதரவையும், அங்கீகாரத்தையும் அளிக்கும்படி கேட்டுக்கொண்டார்.
திரு. பாரதி கிருஷ்ணகுமார் பேச்சில் அனல் தெறித்தது. இன்றைய அரசியல் வாதிகளை நம் தலைக்குமேல் சுற்றும் பிணம் தின்னும் கழுகுகளாகவும் , அதை நம் தலை மேல் கூடுகட்ட அனுமதிக்ககூடாது என்று பேச்சை முடித்தார்.
திரு.அழகிய பெரியவனின் பேச்சு தலித் இன மக்களின் அவலநிலைகளையும், அவர்கள் மேல் மேற்கொள்ளபடும் அடக்குமுறைகளையும் சுட்டிக்காட்டினார்.
திரு.ஷாஜி அவர்கள் மொழிபெயர்பின் அவசியத்தையும், சாருவின் தைரியத்தையும் பாராட்டினார்.
பதிவர்கள் துளசி கோபால், உண்மை தமிழன், சிவராமன், லக்கி லுக் , அதிஷா, பட்டர்பிளை சூர்யா, தண்டோரா, நர்சிம், கேபிள் சங்கர், வெண்பூ, முரளி கண்ணன், காவேரி கணேஷ், அப்துல்லா, டாக்டர்.புரூனோ,,D.R.அசோக், உமா ஷக்தி ,ரோமியோ பாய் மற்றும் பல எனக்கு அறிமுகம் இல்லாத பதிவர்கள் வந்தனர்.
நிகழ்ச்சி நிரல்களை திருமதி.நிர்மலா பெரியசாமி தொகுத்து வழங்க ஏற்புரையாற்ற , திரு.சாரு மைக் அருகே வந்தபொழுது இரவு மணி 9.15, இதில் முக்கியமான விசயம் , பிலிம் சேம்பரில் இருக்கையோ 220, ஆனால் வாசகர் கூட்டம் 400 யை தொட்டது. இந்த 400 பேரும் சாருவின் ஏற்புரை 10.00 மணிக்கு முடியும் வரை இருந்தனர். வாசகர் மத்தியில் சாருவிற்கான மரியாதை தெரிந்தது.
இரவு நண்பர்களுக்கான விருந்தில் சாருவே ஒவ்வொருவரிடம் சென்று , அவர்களின் மெனுவை கேட்டு ,வரவழைத்து கொடுத்தார்.அவரின் எளிமை தான் இத்தனை வாசகர் கூட்டத்தை தன்னகத்தே வைத்துக்கொள்ளும் ரகசியம் புலப்பட்டது.
விழா நாயகன் சாரு நிவேதிதா ஏற்புரை
கல்கி உரையாற்றுகிறார்
பதிவர்களின் நடுவில் பிரபல பதிவர் “ லக்கி லுக் யுவ கிருஷ்ணா”
பதிவர் புதுகை. அப்துல்லா
உயிர்மை மனுஷ்ய புத்திரன், இயக்குனர் வசந்த பாலன்.
முன் வரிசையில் பதிவர் உமா ஷக்தி
அய்யனார் கம்மா படைப்பாசிரியர் நர்சிம் ( என்னோட படத்துக்கு நீ தாம்பா ஹீரோ)
பதிவர்கள் வெண்பூ, நீரோடை முரளி கண்ணன், எண்டர் கவிஞர் கேபிள் சங்கர்.
பதிவர்கள் பட்டர் பிளை சூர்யா, எண்டர் கவிஞர் கேபிள் சங்கர், அதிஷா
அரங்கு நிறைந்த கூட்டம், முன் வரிசையில் முதல் ஆளாய் பதிவர் தண்டோரா மணிஜி,மூன்றாவது வரிசையில் முதல் ஆளாய் பதிவர் ரோமியோ பாய்.
” நரகத்திலிருந்து ஒரு குரல்” இயக்குனர் வசந்த பாலன் பெற்று கொள்கிறார்.
” வாழ்வது எப்படி” திருமதி.செல்வி பெற்று கொள்கிறார்.
” அருகில் வராதே” இயக்குனர் மிஷ்கின் பெற்று கொள்கிறார்
” அதிகாரம் அமைதி சுதந்திரம்” திரு.பாரதி கிருஷ்ண குமார் பெற்று கொள்கிறார்.
35 comments:
படங்கள் அருமை.
யப்பா விடாம நம்ம பதிவர்கள் எல்லா விழாவிலும் கலந்துக்கிறாங்க. அடுத்தடுத்த நாள் விழா என்றாலும் எப்படி தான் உங்க House boss-எல்லாம் விடுறாங்களோ.
கேபில்ஜி மேலே என்னங்க அவ்ளோ கோபம்? என்டர் கவிஞர்ன்னு மறுபடி மறுபடி சொல்றீங்க?
நரசிம் சினிமா ஹீரோ ஆக சரியான ஆள் தான்.
படங்களுக்கு நன்றி; விழாவை பார்த்த நிறைவு
thanks for sharing..
இடம் கொடுத்தமைக்கு நன்றி காவேரி.. அங்கும்...இங்கும்...
வருகைக்கு நன்றி மோகன் குமார்.
இன்னும் 15 புகைப்ப்டங்கள் உள்ளது.
கேபில்ஜி மேலே என்னங்க அவ்ளோ கோபம்? என்டர் கவிஞர்ன்னு மறுபடி மறுபடி சொல்றீங்க?
கவிஞர்களிலயே எண்டர் கவிதை என்று கவிதைக்கு புது இலக்கணம் கொடுத்தவர் நம்ம கேபிள்
வருகைக்கு நன்றி கார்த்திகேயன்.
தண்டோரா ஜி, நன்றி
படங்களும் தொகுப்பும் சூப்பர் ( தண்டோரா அண்னணின் கமென்ட்டும் தான்)
படங்களும் தொகுப்பும் சூப்பர்
புகைப்படங்களுக்கும், காவேரேஜூக்கும் மிக்க நன்றி காவேரி..!
நல்லாருக்கு தலைவா..
விஷுவல் தொகுப்பு :)
தோழமையுடன்
பைத்தியக்காரன்
நன்றி
கரிசல்காரன்
T.V.ராதாகிருஷ்ணன்.
புகைப்படங்களுக்கும், காவேரேஜூக்கும் மிக்க நன்றி காவேரி..!
உ.த அண்ணே , உங்க வேலையை நான் செய்தேன்.
நன்றி ராஜூ
விஷுவல் தொகுப்பு :)
தோழமையுடன்
பைத்தியக்காரன்
இதும் போதும் வஷிச்டர் வாயால் பிரம்ம ரிஷி, நன்றி சிவராமன்
அட!
காவேரி நீங்க யாருன்னே 'அங்கே' தெரியலையேப்பா!
இத்தனை பதிவர்கள்? ஆஹா......விட்டுட்டேனே......
உமாவை ஒரு விநாடி பார்த்தேன். நர்சிம் என் இருக்கையைக் கடந்து போனபோது ஒரு .02 விநாடி மின்னல் சட்ன்னு வந்தது.
அருமையான கவரேஜ்.
நன்றி.
துளசி கோபால்,
பட்டர்பிளை சூர்யா நீங்கள் அமர்ந்திருப்பதை தெரிவித்தார்.
உடனே செல்போனில் zoom பண்ணி உங்களை எடுத்துவிட்டேன்.
கலக்கல் காவேரி கணேஷ்.. (க,கா,க!)
சாரு ஆன்லைனில் ஓடுது.
ரொம்ப அருமையான தொகுப்பு, பகிர்வுக்கு மிக்க நன்றி.
நர்சிம்
கலக்கல் காவேரி கணேஷ்.. (க,கா,க!)
நன்றி நர்சிம்
சாரு ஆன்லைனில் ஓடுது.
oops.
நன்றி சாருஜி
நேரில் வரமுடியாத என்னைப் போன்றவர்களின் சார்பில் : Thanks very much KG.
அனுஜன்யா
அய்யய்யோ! மிஸ் பண்ணிட்டேனே....
எஸ்கா
அய்யய்யோ! மிஸ் பண்ணிட்டேனே....
எஸ்கா
அருமையான தொகுப்பு
மிகவும் நல்ல தொகுப்பு. நல்ல புகைப்படங்கள். . அருமையான விவரிப்பு. நானும் அவ்விழாவிற்கு வந்திருந்தாலும், இவ்வளவு பதிவர்கள் வந்ததை இந்தக் கட்டுரையிலிருந்து தான் அறிந்துகொண்டேன். . வாழ்த்துகள்.
நன்றி, கணேஷ்.மேடையில் மனுஷ்யபுத்திரனுடன் வசந்தபாலன் அமர்ந்திருக்கும் படத்தில் ஓரத்தில் நிற்கும் கண்ணாடி அடியேன்.
சாருவின் தளத்திலிருந்து வந்து பார்வை இட்ட எனக்கு இன்ப அதிர்ச்சி..
மீண்டும் தோழமையுடன் நன்றி!!!
ஹஸன் ராஜா.
நன்றி
யாத்ரா.
அனுஜன்யா said...
நேரில் வரமுடியாத என்னைப் போன்றவர்களின் சார்பில் : Thanks very much KG.
உங்களை போன்றவர்கள், வெளிமாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் இருப்பவர்களுக்காக தான் இந்த தொகுப்பே.
yeskha said...
அய்யய்யோ! மிஸ் பண்ணிட்டேனே
அதான் relay பண்ணிட்டோம்ல.
வாங்க முரளி கண்ணன்.
(பெரிய மனுஷங்க வராங்கப்பா)
வாங்க கண்ணாயிரம்.
வாங்க ஹசன் ராஜா. உங்க பக்கத்துல தான் எல்லா பதிவரும் இருந்தாமே.
நல்லது. அப்படியே புத்தகங்களின் விற்பனை குறித்தும் சொல்லியிருக்கலாம். இவ்வளவு பதிவர்கள் வந்திருப்பதால் அரங்கில் அட்லீஸ்ட் ஒரு 1000 புத்தகமாவது விற்றிருக்கும் இல்லையா? hats off
- ராஜேஷ்
தொகுப்பு அருமை நண்பரே . நானும் அந்த விழாவில் கலந்து கொண்டேன் தாங்கள் எடுத்த புகைபடத்தில் நானும் உள்ளேன்.
13வது புகைபடத்தில் அண்ணன் தண்டோரா இருப்பது முதல் வரிசையில் நான் இருப்பதோ முன்றாவது வரிசையில் அதே முதல் சீட்டில் .
வாங்க ராஜேஷ்.
வாங்க ரோமியோ, உங்க பேர போட்டுட்டேன்
நன்றி.. அருமையான கேமரா.. மற்றும் உங்களது கவரேஜ்..
Cable Sankar said...
நன்றி.. அருமையான கேமரா.. மற்றும் உங்களது கவரேஜ்..
தலைவரே நன்றி.
கேமரா N 73 மொபைல் போன்.
பகிர்ந்தமைக்கு நன்றி...
மிஸ் பண்ணியவர்கள் சார்பில் கணேஷுக்கு நன்றி.
உங்களை எழுத வைப்பதற்காகவே அடிக்கடி பங்க்ஷன் நடத்தனும் போலயே!
படங்களுக்கும் செய்தி தொகுப்புக்கும் நன்றி.
இனி வரும் காலங்களில் இது போன்ற நிகழ்ச்சிகளின் வீடியோ பதிவையும் வெளியிடமுடிந்தால் மிகவும் நன்றாக இருக்கும்.
நன்றி
ஆதி.. உங்களுக்காக இடப்பட்ட பதிவு.
வால்.. என் மேல் கொண்ட அக்கறைக்கு நன்றி.
நன்றி யாநிலாவின் தந்தை.
பொறுமையாக ரசித்து பார்க்கவைத்த பதிவு.
நல்ல கோர்வையான தகவல்கள்...
என்ன உங்கள் போட்டோவையும் போட்டிருக்கலாம்தானே...
நன்றி கா.கணேஷ்.
நன்றி கும்க்கி,
பதிவர்கள் கூட்டத்தில் நம்ம போட்டாவ எப்பவும் போடுராங்க
Post a Comment