
இது நான்காவது முறை, இந்த 2010 புத்தகக் கண்காட்சிக்கு செல்ல இருப்பது, சென்னை போக்குவரத்து நெரிசலில் சுமார் 1 மணி நேரம் வண்டி ஓட்டி 12 km கடந்து முதுகுவலியுடன் கண்காட்சியில் நுழைந்து, பதிவர்களை கண்டவுடன் வலி போய், மனமெல்லாம் சந்தோசம் நிறைந்தது.ஏறதாழ 35 பதிவர்கள் வந்திருந்தனர்.
பட்டர்பிளை சூர்யா,கேபிள் சங்கர்,ரோமியோ பாய்,ராஜகோபால் (எறும்பு),சர்புதீன்,பலா பட்டறை, பொன்.வாசுதேவன், சிவராமன், ஜாக்கி சேகர்,கார்க்கி, குகன், கென், நர்சிம், செந்தில், விஷ்ணு,, நிசார் அகமது, சங்கர், லக்கி யுவகிருஷ்ணா, அதிஷா, மயில் ராவணன், வா.மணிகண்டன், வாசகர் திருமுருகன், , அன்புடன் மணிகண்டன், புலவன் புலிகேசி, ஜெட்லி, மீன் துளியான், D.R. அசோக், அப்துல்லா, அவிங்க ராஜா, அ.மு.செய்யது, தண்டோரா மணிஜி, நிலா ரசிகன், செல்வகுமார் பதிவர்கள் கணிசமான எண்ணிக்கையில் வந்திருந்தனர்.
பதிவர்கள் அனைவருக்கும் முக்கியமான லேண்ட் மார்க்காக கிழக்கு பதிப்பகமே அமைந்திருந்தது.கிழக்கை ஒட்டிய பாதையே பதிவர்கள் சந்திக்கும் கூடமாக இருந்தது.
சர்புதீன் தன் மாத இதழான வெள்ளி நிலா குறித்தும், முழுக்கவே இந்த இதழ் பதிவர்களுக்காக வர இருப்பது குறித்தும் பேசினார். பதிவர்கள் தாங்கள் வாங்கிய புத்தகங்கள் குறித்தும், அதன் சிறப்புகளை குறித்தும் பேசினர்.
நான் வாங்கிய புத்தகங்கள்:
தேசாந்திரி-- s.ராமகிருஷ்ணன்,
பூவுலகு---சுற்றுபுறச்சூழல் இதழ்
சேலன்ஞ்--- நக்கீரன் கோபால்
புத்தர், தருமமும், சங்கமும்
இன்னொரு கோணம் -- ஜக்கி வாசுதேவ்
ஜெயமோகன் -- இந்திய ஞானம்
தந்தை பெரியார்--- இனிவரும் உலகம்,, மனிதனும், மதமும்,,, இதுதான் மகாமகம்,, பேய், பில்லி, சூன்யம், ஆவி, சோதிட மோசடிகள்
கூட்டத்திலிருந்து வரும் குரல்-- ஜென்ராம்
ப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க--- கோபி நாத்
சிந்தனை விருந்து--- தென்கச்சி கோ.சுவாமினாதன்
இனி புகைப்படங்கள்:



நான், கலை இயக்குனர் செல்வகுமார்
புத்தகக் கண்காட்சிக்கு நண்பர் கலை இயக்குனர் செல்வகுமார் வந்திருந்தார், இந்த 34 வயதே நிரம்பிய ஆர்ட் டைரக்டர் , இயற்கை, ஈ, தற்பொழுது வெளிவந்த பேராண்மை படங்களின் கலை இயக்குனர். அவரை பதிவர்கள் மத்தியில் அறிமுகப்படுத்தினேன். பதிவர்கள் அனைவரும் நண்பர் செல்வகுமாரை வாழ்த்தினர். ஜாக்கி சேகர், அவரை வெகுவாக பாராட்டி, பேராண்மை படத்தின் செட் காட்சிகளான் பழங்குடியினரின் வாழ்விடங்களை சிலாகித்து பேசினார்.
செல்வகுமாருக்கு கேபிளாரை அறிமுகப்படுத்தினேன். செல்வகுமார் வலையுலகம் பற்றி கேட்டு அறிந்து, கேபிள் சங்கரின் வலைபூ முகவரியை கேட்டு பெற்று கொண்டார். செல்வகுமாருக்கு வருங்கால வாழ்த்துக்களை சொல்ல விடைபெற்றார்.








