Monday, January 4, 2010
என்னின் காதலிக்கு........... (உரையாடல் கவிதை போட்டிக்கான கவிதை)
அடியே !
என் கிறுக்கல் ராஜாங்கத்தில்
நீ தானடி எப்பொழுதும் தலைவி.
நான் நிலவை பார்க்க நினைக்கும் பொழுதெல்லாம்
உன் வீட்டு ஜன்னலை தானடி பார்க்கிறேன்.
உன்னை பற்றி எழுதும் பொழுதெல்லாம்
என் பேனா முனை நிமிர்ந்து தானடி எழுதுகிறது.
என் வாழ்க்கை இலையுதிர் காலமாக
இருந்த பொழுது
நீயல்லவாடி வசந்தத்தை வரவழைத்தாய்.
பட்டமரமாய் பரிதவித்து கொண்டிருக்கையில்
நம்பிக்கை பூக்களை பூக்க விட்டவளே.
நான் நெருஞ்சியாய் இருந்த பொழுது
என்னை குறிஞ்சியாய் ஆக்கினவளே.
இந்த சிக்காத காளையை
அந்த சின்ன விழிக்குள் எப்படியடி
சிறை பிடித்தாய்.
சூன்யங்களோடு இருக்கையில்
சூரியனோடு சுகப்படுத்தினியடி.
நட்சத்திரமாக வாழ நினைத்த பொழுது
நிலவாய் ஆக்கியவளே.
எப்படியடி உன் முன்னால் மட்டும்
இரும்பு துண்டாய் போனேன்.
அந்த சின்ன விழிக்குள் காந்தமாடி?
உன் இமைகளின் அழைப்பினால் தானடி
நான் கூட காதல் கடலில் சங்கமித்தேன்.
என் ஹீமோகுளோபின்கள் எல்லாம் கருகியதால்
உன் குளோபின்கள் தானடி
என் இரத்தத்தில் கலந்துள்ளது.
மருத்துவன் பார்த்தவுடன் கேட்டானே!
யாரை காதலிக்கீறீங்க என்று?
அந்த வெள்ளிதிரைக்கு முன்னால்
எத்தனையோ சில்மிஷங்கள்.
ச்சீய்ய் போங்க! என்பாயேடி.
இப்பொழுது உணர்கிறேன்.
உன் மனதை விட்டு போவதற்காடி
அப்படி சொன்னாய்.
இன்றும் கூட நீ எனக்கு தொட்டுவிடும் தூரம் தான்.
அது யாரடி உன் பக்கத்தில் கைகுழந்தையோடு !
உன் கணவனா?
உன்னிடமிருந்து
அந்நியபடுத்தப்பட்ட இந்த ஆத்மாவின்
இதய ஒலியை உற்று கேளடி.
இன்னும் கூட உன் பெயரை தானடி
உச்சரிக்கிறது.
குறிப்பு: உரையாடல் கவிதை போட்டிக்காக
Subscribe to:
Post Comments (Atom)
22 comments:
அனுபவபூர்வமாய் உணர்ந்து எழுதப்பட்ட கவிதை! நன்றாக உள்ளது..
வெற்றி பெற வாழ்த்துக்கள்..
உதிர்வதற்க்கு தான் பூக்கள். தேய்வதற்க்கு தான் நிலவு.
தோற்று போகத்தான் காதல்.
vetri pera vaazhthukkal
கவிதை நன்று.வெற்றி பெற வாழ்த்துகள்.
vetri umathey...vaazhthukal!!!
வெற்றி பெற வாழ்த்துக்கள்..
அருமைய்யா.. அரும!! வெற்றி பெற வாழ்த்துகள்.
பலே..நல்லா இருக்குயா..?
வணங்க வயதில்லை..வாழ்த்துகிறேன்..( )..இந்த பிராக்கெட்டில் நான் என்ன சொல்ல நினைத்தேன் சொல்லுங்கள்..பரிசு உண்டு!!
வாழ்த்துக்களை தந்த பதிவர்கள்
வெற்றி ( ஏப்பா ஆரம்பமே வெற்றி கவிதை 20 க்குள் வரும் போல கிறுகிறுன்னு வருதப்பா.
நன்றி தமிழ் உதயம்
நன்றி கேபிளாரே
நன்றி பூங்குன்றன்.
நன்றி லக்கி,சிவாஜி சங்கர், கலையரசன், சதிஷ்.
வாங்க தண்டோரா அண்ணே, மிக்க நன்றி. ஆச்சரிய குறியா இருக்குமோ
வெற்றி பெற வாழ்த்துக்கள் காவேரி கணேஷ்!
வாழ்த்துக்கள் நண்பரே..
சந்தித்ததில் மகிழ்ச்சி..:))
வாழ்த்துக்கள் தலைவா..
நன்றி நன்றி நன்றி
பா.ராஜாராம்.
பலாபட்டறை
நர்சிம்.
all the best...
இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள் & வெற்றி பெற வாழ்த்துகள்
மிக்க நன்றி
பத்மா, சக்தி
//இந்த சிக்காத காளையை
அந்த சின்ன விழிக்குள் எப்படியடி
சிறை பிடித்தாய்.//
இந்த வரிகள் நல்லாருக்கு.. வாழ்த்துக்கள்
நன்றி உழவன்.
//அது யாரடி உன் பக்கத்தில் கைகுழந்தையோடு !
உன் கணவனா?
//
இந்தக் கேள்வியை கேட்டீர்களா? கேட்க நினைத்தீர்களா?
கேட்க நினைத்தேன் செல்வா..
Post a Comment