Monday, January 11, 2010

பதிவர் சந்திப்பும், புத்தகக் கண்காட்சியும் EXCLUSIVE புகைப்படங்கள் --PART 2

சந்தோசங்கள் என்றுமே சலிப்பதில்லை, அதே போல தான் பதிவர் சந்திப்பும். கேபிளார் பதிவர் சந்திப்பு குறித்தும், அவ்வமயம் பதிவர் சர்புதீன் வெள்ளி நிலா என்ற மாத இதழ் வெளியீடு குறித்தும் ஒரு சந்திப்புக்கு இந்த 2010 புத்தகக் கண்காட்சியில் ஏற்பாடு செய்திருந்தார்.

இது நான்காவது முறை, இந்த 2010 புத்தகக் கண்காட்சிக்கு செல்ல இருப்பது, சென்னை போக்குவரத்து நெரிசலில் சுமார் 1 மணி நேரம் வண்டி ஓட்டி 12 km கடந்து முதுகுவலியுடன் கண்காட்சியில் நுழைந்து, பதிவர்களை கண்டவுடன் வலி போய், மனமெல்லாம் சந்தோசம் நிறைந்தது.ஏறதாழ 35 பதிவர்கள் வந்திருந்தனர்.

பட்டர்பிளை சூர்யா,கேபிள் சங்கர்,ரோமியோ பாய்,ராஜகோபால் (எறும்பு),சர்புதீன்,பலா பட்டறை, பொன்.வாசுதேவன், சிவராமன், ஜாக்கி சேகர்,கார்க்கி, குகன், கென், நர்சிம், செந்தில், விஷ்ணு,, நிசார் அகமது, சங்கர், லக்கி யுவகிருஷ்ணா, அதிஷா, மயில் ராவணன், வா.மணிகண்டன், வாசகர் திருமுருகன், , அன்புடன் மணிகண்டன், புலவன் புலிகேசி, ஜெட்லி, மீன் துளியான், D.R. அசோக், அப்துல்லா, அவிங்க ராஜா, அ.மு.செய்யது, தண்டோரா மணிஜி, நிலா ரசிகன், செல்வகுமார் பதிவர்கள் கணிசமான எண்ணிக்கையில் வந்திருந்தனர்.

பதிவர்கள் அனைவருக்கும் முக்கியமான லேண்ட் மார்க்காக கிழக்கு பதிப்பகமே அமைந்திருந்தது.கிழக்கை ஒட்டிய பாதையே பதிவர்கள் சந்திக்கும் கூடமாக இருந்தது.

சர்புதீன் தன் மாத இதழான வெள்ளி நிலா குறித்தும், முழுக்கவே இந்த இதழ் பதிவர்களுக்காக வர இருப்பது குறித்தும் பேசினார். பதிவர்கள் தாங்கள் வாங்கிய புத்தகங்கள் குறித்தும், அதன் சிறப்புகளை குறித்தும் பேசினர்.

நான் வாங்கிய புத்தகங்கள்:

தேசாந்திரி-- s.ராமகிருஷ்ணன்,
பூவுலகு---சுற்றுபுறச்சூழல் இதழ்
சேலன்ஞ்--- நக்கீரன் கோபால்
புத்தர், தருமமும், சங்கமும்
இன்னொரு கோணம் -- ஜக்கி வாசுதேவ்

ஜெயமோகன் -- இந்திய ஞானம்

தந்தை பெரியார்--- இனிவரும் உலகம்,, மனிதனும், மதமும்,,, இதுதான் மகாமகம்,, பேய், பில்லி, சூன்யம், ஆவி, சோதிட மோசடிகள்

கூட்டத்திலிருந்து வரும் குரல்-- ஜென்ராம்

ப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க--- கோபி நாத்
சிந்தனை விருந்து--- தென்கச்சி கோ.சுவாமினாதன்

இனி புகைப்படங்கள்:


கிழக்கின் பாதையை அடைத்து, பதிவர்கள் சந்திப்பு. நர்சிம், வா.மணிகண்டன், சர்புதீன்,ராஜகோபால் (எறும்பு),கேபிள் சங்கர், குகன், பலாபட்டறை சங்கர், அடலேறு, நிலா ரசிகன்.


நடுவில் ஜாக்கி சேகர்.

நான், கலை இயக்குனர் செல்வகுமார்

புத்தகக் கண்காட்சிக்கு நண்பர் கலை இயக்குனர் செல்வகுமார் வந்திருந்தார், இந்த 34 வயதே நிரம்பிய ஆர்ட் டைரக்டர் , இயற்கை, ஈ, தற்பொழுது வெளிவந்த பேராண்மை படங்களின் கலை இயக்குனர். அவரை பதிவர்கள் மத்தியில் அறிமுகப்படுத்தினேன். பதிவர்கள் அனைவரும் நண்பர் செல்வகுமாரை வாழ்த்தினர். ஜாக்கி சேகர், அவரை வெகுவாக பாராட்டி, பேராண்மை படத்தின் செட் காட்சிகளான் பழங்குடியினரின் வாழ்விடங்களை சிலாகித்து பேசினார்.
செல்வகுமாருக்கு கேபிளாரை அறிமுகப்படுத்தினேன். செல்வகுமார் வலையுலகம் பற்றி கேட்டு அறிந்து, கேபிள் சங்கரின் வலைபூ முகவரியை கேட்டு பெற்று கொண்டார். செல்வகுமாருக்கு வருங்கால வாழ்த்துக்களை சொல்ல விடைபெற்றார்.
வெள்ளி நிலாவை மும்முரமாக படிக்கும் கார்க்கி, பலா பட்டறை சங்கர், தண்டோரா, சர்புதீன்
ரோமியோ பாய்,, ஜாக்கி சேகர்.
அரங்கு நிறைந்த கூட்டம்.
ஜாக்கி சேகர், பட்டர் பிளை சூர்யா, கேபிள், கென், சிவராமன், ராஜகோபால் (எறும்பு), பலா பட்டறை சங்கர், சர்புதீன்
லக்கிலுக் யுவகிருஷ்ணா, அதிஷா
கிழக்கையே வெளுக்க வைக்கும் வாசகர் கூட்டம்.
நர்சிமும் , கார்கியும் பதிவர் அய்யனாரின் உரையாடலினி புத்தகம் வாங்கிய மகிழ்ச்சியில்.
பட்டறையை போட்ட பதிவர்கள்
பதிவர் குகனின் ” என்னை எழுதிய தேவதைக்கு” பதிவர் காவேரி கணேஷ் பரிசளிக்க தண்டோரா பெற்று கொள்ள, தண்டோரா நம் பதிவர் பா.ராஜாராம் எழுதிய ”கருவேல நிழல் “ எனக்கு பரிசளித்தார்.









23 comments:

butterfly Surya said...

பதிவர்களை கண்டவுடன் வலி போய், மனமெல்லாம் சந்தோசம் நிறைந்தது///// உண்மையான வார்த்தைகள்.

போக்குவரத்து நெரிசலால் சிறிது தாமதாகி விட்டது. கலைஇயக்குநர் செல்வகுமாரை சந்திக்காமல் போனது வருத்தமே.

புகைப்படங்கள் அருமை.

பகிர்விற்கு நன்றி கணேஷ்.

Paleo God said...

அசதி உங்கள் முகத்தில் தெரிந்தது..சந்திப்பின் மகிழ்ச்சி முடிவில் எல்லோருக்கும் மருந்தானது..

படங்கள் அருமை..
மிக்க நன்றி நண்பரே..:)

Cable சங்கர் said...

உங்க போனை சுடணும்யா..:))

நர்சிம் said...

கலக்கல்..மொபைல் போனில் இவ்வளவு க்ளியர் ஆச்சர்யம்.

Anbu said...

கைப்பேசியை சுத்தி போடுங்க!.

திஷ்டி சுத்தி போடுங்கன்னு சொன்னேன்

--
அன்புடன்,
அன்பு

CS. Mohan Kumar said...

கலக்கலான படங்கள்; நன்றி ! என்னால் அன்று வர முடியலை.

மணிஜி said...

உங்கள் கண்ணான கண்..அந்த போன்

ஜெனோவா said...

நம்ம கூட்டத்துல ஒருத்தர கூட இன்னும் பார்த்தது இல்லையே என்ற வருத்தத்துக்கு நடுவுல ... எல்லாரையும் புகைப்படம் மூலம் அறிமுகப்படுத்திய உங்களுக்கு நன்றிண்ணே !

creativemani said...

சூப்பர் கவரேஜ்... :)

கலையரசன் said...

எல்லோரையும் சந்தித்த நிறைவு..
அப்படியே உங்களுக்கு என்..
இனிய பொங்கல், பூரி, இட்லி, வடை, சாம்பார் வாழ்த்துக்கள் தலைவா! :-)

Romeoboy said...

படங்கள் நன்றாக இருக்கிறது. லேட்டா கமெண்ட் போடுறேன் மன்னிக்கவும்

Ganesan said...

வாங்க சூர்யா மிக்க நன்றி.

பலாபட்டறை சங்கர், அசதிகள், வலிகள் எல்லாம் பதிவர்களை பார்க்கும் வரை.

வாங்க கேபிள் , போன் இன்சூர் செய்யனும் போல.

நன்றி நர்சிம்.

அன்பு , திஷ்டி சுத்திபோடவா, நான் கொடுத்த பெரியார் புத்தகங்களை படிங்க.

நன்றி, மோகன் குமார், வரமுடியாத் உங்களை போன்றவர்களுக்காக தான் இந்த பதிவு.

உண்மை தான் தண்டோரா அண்ணே.

வாங்க ஜெனோவா, உங்களுக்காகவது இந்த மாதிரி புகைப்படங்களை எடுத்து பதிவில் போடவேண்டும் .நன்றி.

Ganesan said...

நன்றி நன்றி நன்றி

மணிகண்டன், கலையரசன், ரோமியோ பாய்.

பதிவர்கள் அனைவருக்கும் பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

மரா said...

பட்டர்ஃபிளைக் கூட வந்ததால் லேட்டாயிருச்சு.......நிழற்படங்கள் அருமை.இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

butterfly Surya said...

போக்குவரத்து நெரிசலால் சிறிது தாமதாகி விட்டது.அப்படின்னு சொல்லியிருக்கேன்.

அட.. ராவணா, இப்படி போட்டு கொடுக்கலாமா...???

மீன்துள்ளியான் said...

//இந்த 2010 புத்தகக் கண்காட்சிக்கு செல்ல இருப்பது, சென்னை போக்குவரத்து நெரிசலில் சுமார் 1 மணி நேரம் வண்டி ஓட்டி 12 km கடந்து முதுகுவலியுடன் கண்காட்சியில் நுழைந்து, பதிவர்களை கண்டவுடன் வலி போய், மனமெல்லாம் சந்தோசம் நிறைந்தது.ஏறதாழ 35 பதிவர்கள் வந்திருந்தனர்.//

உண்மை அண்ணே உண்மை .. ஆனா உங்களை எல்லாம் சந்தித்ததில் அது மறந்து போச்சு .. சந்தித்ததில் ரெம்ப மகிழ்ச்சி .. அடிக்கடி சந்திக்கணும் அண்ணே ..

வெள்ளிநிலா said...

இதயம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்

வெள்ளிநிலா said...

dear ganesh , i want your mail id ( vellinila@gmail.com)

வெள்ளிநிலா said...

dear ganesh , i want your mail id ( vellinila@gmail.com)

Ganesan said...

வருகைக்கு நன்றி
மயில்ராவணன், மீன் துளியான், சர்புதீன்

பத்மா said...

naangal ellam eppidi intha kuzhuvil servathu?

Ganesan said...

padma said...
naangal ellam eppidi intha kuzhuvil servathu ?

குழு எல்லாம் ஒன்றும் கிடையாது. பதிவர்கள் , அடுத்த பதிவர்களின் பதிவுகளில் போடும் பின்னுட்டம் மூலமாக கிடைக்கும் நட்பே..

பதிவர் சந்திப்பு பற்றிய அறிவிப்புகள் நண்பர் கேபிள் சங்கர் பதிவில் வரும்பொழுது கலந்து கொள்ளலாம்.

cablesankar.blogspot.com

CS. Mohan Kumar said...

என்ன கணேஷ் அப்புறம் பதிவே காணும்? வழக்கம் போல் போட்டாக்களுடன் கலக்குங்க