Monday, February 15, 2010

கேபிள், பரிசலின் புத்தக வெளியீடும், பதிவர் சந்திப்பும்--புகைப்படங்கள்-தொகுப்பும்

வணக்கம். ஒரு பதிவரின் புத்தக விழாவில் 150 பேர் கலந்து கொண்டார்கள் என்றால் அந்த பதிவரின் மேல் கொண்ட பாசமும், நேசமும், நட்பும் வெளிப்பட்ட தருணம் தான் கேபிளாரின் புத்தக வெளியீட்டு விழா.


13/2/2010 மாலை கேபிளாரை பார்பதற்காக தொடர்பு கொண்ட பொழுது , discovery book palaceல் இருப்பதாக தெரிவித்தார். அங்கு சென்று பார்த்தால், அந்த புத்தக கடை உரிமையாளருக்கு blog என்றால் என்ன? , பதிவு போடுவது எப்படி ?, திரட்டியில் இணைப்பது எப்ப்டி என விளக்கி கொண்டிருந்தார். இது மாதிரி எனக்கு தெரிந்த வரை 100 பதிவர்களை உருவாக்கியுள்ளார் கேபிள். பின் ஏன் 100 பதிவர்கள் விழாவுக்கு வரமாட்டார்கள்?


விழா அரங்கமே நிறைந்து காணப்பட்டது.கேபிளாரின் குடும்பத்தினர், பரிசலின் குழந்தை, வெண்பூவின் குழந்தை யென குடும்ப விழாவாகவே களை கட்டியது.
பதிவர்களை ஒருவருக்கொருவர் ஏற்கனவே பார்த்தவர்கள், chat ல் பேசி, தொலைபேசியில் பேசி அன்றுதான் நேரில் கண்டவர்கள் என நெகிழ்ச்சியாக காணப்பட்டது.

பதிவர், நாகரத்னா பதிப்பகத்தின் உரிமையாளர் குகன் தொடக்கவுரையாற்ற, கேபிள் வாழ்த்துரை வழங்க,, கேபிள் மகன் தானும் பேச வேண்டும் என கேட்க, அவன் , ஓரே வாக்கியம் பேசினான். ” எங்கப்பா ஒரு காமெடி பீசு ” என சொல்ல மொத்த கைதட்டலில் அதிர்ந்தது அந்த அரங்கம். வீட்டிலும் கேபிள் எத்துனை நகைச்சுவையாளர் என்பது புலப்பட்டது.

லெமன் ட்ரீயும்.. ரெண்டு ஷாட் டக்கீலாவும், நூலை பிரமிட் நடராஜன் வெளியிட அஜயன் பாலா பெற்றுக் கொண்டார்.

பரிசலின் டைரிகுறிப்பும், காதல் மறுப்பும் நூலை அகநாழிகை வாசு வெளீயிட, பிரமிட் நடராஜனும், அஜயன் பாலாவும் பெற்று கொண்டார்கள்.

பிரமிட் நடராஜன், கேபிளின் தந்தைக்கு நெருங்கிய உறவு, தான் சென்னைக்கு வந்த பொழுது, அடைக்கலம் கொடுத்தது, உதவி செய்தது என நினைவுகூர்ந்தார்.நன்றி மறப்பது நன்றன்று.

பிரமிட் நடராஜன் கேபிளின் எழுத்துக்கள் 55 வயது நிரம்பிய எழுத்தாளரின் எழுத்துக்கள் போன்று இருக்கிறது என்றார். கேபிள் தன்னை இனிமேல் யூத்து என சொல்ல மாட்டார் என நினைக்கிறேன்.



தமிழ்ப்படம் இயக்குனர் c.s.அமுதன் , தன்னுடைய படம் வெற்றிக்கு பதிவர்கள் ஒரு காரணம் என நன்றி பாராட்டினார். மிகவும் நேர்த்தியாக விமர்சனம் பதிவர்களால் எழுதப்படுகிறது என தெரிவித்தார்.

அஜயன் பாலா மிக நீண்ட உரை நிகழ்த்தினார், கேபிளின் எழுத்துக்கள் சுஜாதாவை நினைவு படுத்துகின்றன என்றவுடன் கேபிளின் முகத்தில் களிப்பு தென்பட்டது, பின்னே கேபிள் சுஜாதாவின் தீவிர ரசிகர் ஆயிற்றே.

அகநாழிகை வாசுதேவன் , கேபிளையும் , பரிசலையும் பாராட்டி, முக்கியமாக பதிப்பாளர் குகனை வாழ்த்தினார்.

கேபிள் ஏற்புரையில் லே.அவுட் டிசைனருக்கும் (இந்த புத்தகத்திற்காக 20 டிசைன் செய்தார்), பதிவர் சுகுமாரின் flash வேலைகளுக்கும், தமிழ்ப்படம் வ்சனகர்த்தா சந்துருவுக்கும் . , நன்றி கூறினார்.

பரிசலின் ஏற்புரையில் பதிவர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார். தொடர்ந்து எழுதினால் நிச்சயம் நம் எழுத்துக்கள் அங்கீகரிக்கப்படும் என தெரிவித்தார்.

நிகழ்வுகளை பதிவர் சுரேகா அருமையாக தொகுத்து வழங்கினார், தராசு, உண்மைதமிழன்,கார்க்கி ஆகியோர் எழுத்தாளர்களை பாராட்டி பேசினர்.

கலந்து கொண்ட பதிவர்கள் எனக்கு தெரிந்த வரையில்.
ஜ்யோவ்ராம் சுந்தர், பைத்தியகாரன் சிவராமன், அப்துல்லா,நர்சிம், லக்கி லுக், அதிஷா, வெண்பூ, சொல்லரசன், கார்க்கி, உண்மை தமிழன் , பட்டர் பிளை சூர்யா, மயில் ராவணன், பலாப்பட்டறை சங்கர், அன்புடன் மணிகண்டன், ஆதிமூல கிருஷ்ணன், தண்டோரா, டோண்டு ராகவன்,ரோமியோ, பெஸ்கி, ஜெயம் கொண்டான், மார்த்தாண்டன், விநாயக முருகன், சஞ்செய் காந்தி, மோகன் குமார், டி.வி ராதாகிருஷ்ணன், அண்ணாச்சி வடகரை வேலன், ச்ர்புதீன், முரளிகுமார், பத்மநாபன்,வெங்கி, சுகுமார்,அத்திரி, அதி பிரதாபன், சங்கர், வெயிலான்,சுரேகா,ஈரவெங்காயம், ஜெட்லி, சிவகுமார், மற்றும் பலர்.

நிகழ்ச்சி ஆரம்பத்தில் தமிழ்தாய் வாழ்த்து, இறுதியில் தேசியகீதத்துடன் நிறைவு பெற்றது.






கேபிளின் குழ்ந்தைகள்
பதிவர்கள் உ.த, பலாபட்டறை சங்கர், ரோமியோ பாய்.
நர்சிம், கார்க்கி
பதிவர்கள் அறிமுகம் , வெள்ளி நிலா சர்புதீன்
அன்புடன் மணிகண்டன் அறிமுக உரை, பராம்பரிய உடையுடன் நர்சிம், ஆதிமூலகிருஷ்ணன், பரிசல்.
அமர்ந்திருக்கும் ஜ்யோவ்ராம் சுந்தர்
எழுத்தாளர் பரிசலுடன், வெண்பூ தன் மகனுடன்.
கோவை வடகரை வேலன், டி.வி.ராதாகிருஷ்ணன்.
மேடையில் வாசுதேவன், குகன், பிரமிட் நடராஜன், அஜயன்பாலா
வந்திருந்த மக்கள்.
கேபிளின் புத்தகத்தை பிரமிட் நடராஜன் வெளியீடுகிறார்.
நின்றாவாறே பரிசல், பரிசலின் பெண் புகைப்படங்களை எடுத்து தள்ளுகிறாள்.
பரிசலின் டைரிகுறிப்பும், காதல் மறுப்பும் நூலை அகநாழிகை வாசு வெளீயிட, பிரமிட் நடராஜனும், அஜயன் பாலாவும் பெற்று கொண்டார்கள்
கேபிளாரின் ஏற்புரை.
பிரமிட் நடராஜனின் வாழ்த்துரை.
ப்ளாஷ் வெள்ளத்தில் விழா
தொகுப்பாளர், பதிவர் சுரேகா, சிவப்பு சட்டையில் தமிழ்ப்படம் இயக்குனர் c.sஅமுதன்.
இயக்குனர் அமுதனுக்கு வடகரை வேலன் பொன்னாடை அணிவித்தார்.
c.s அமுதனின் வாழ்த்துரை
அண்ணன் தண்டோரா அஜயன் பாலாவுக்கு பொன்னாடை போர்த்தி, வாழ்த்து தெரிவித்தார்.
மூத்த பதிவர் டோண்டு ராகவன்.
நின்றவாறே மஞ்சள் உடையில் சிவராமன்.

நர்சிமின் அய்யனார் கம்மா வெளியிட்ட பொன், வாசுதேவனுக்கு நர்சிம் பொன்னாடை அணிவிக்கிறார்.
பொன்.வாசுதேவனின் வாழ்த்துரை.
திருப்பூர் பதிவர்கள் பரிசலுக்கு நினைவுபரிசு வழங்குகின்றனர்.
கேபிளாருக்கு சூர்யாவின் அழகும், வண்ணமும் கொண்ட வாழ்த்து மடல்
பரிசலுக்கு சுகுமாரின் அழகும், வண்ணமும் கொண்ட வாழ்த்து மடல்.
பரிசலின் ஏற்புரை.

தமிழ்ப்படம் வ்சனகர்த்தா, பாடலாசிரியர், பதிவர் சந்துரு
புதுகை அப்துல்லாவின் வாழ்த்துரை
அண்ணன் தராசுவின் வாழ்த்துரை
தம்பி கார்க்கியின் வாழ்த்துரை
உண்மை தமிழன் வாழ்த்துரை.

சுகுமார், பட்டர் பிளை சூர்யா அளித்த வாழ்த்து மடல்.

நிகழ்வு பற்றிய சக பதிவர்களின் பதிவுகள்.

http://tvrk.blogspot.com/2010/02/blog-post_14.html

http://veeduthirumbal.blogspot.com/


அன்புடன்

காவேரி கணேஷ்.

23 comments:

மணிஜி said...

நல்ல கவரேஜ் கணேஷ்.

அகநாழிகை said...

நல்ல பகிர்வு, காவேரி கணேஷ். உங்கள் எழுத்திலேயே அன்பும் நேசமும் இருக்கிறது. நன்றி.

butterfly Surya said...

அருமையான படங்களும் பகிர்வும்.

சூப்பர் கவரேஜ்.

CS. Mohan Kumar said...

வழக்கம் போல் அசத்தல்

விழியன் said...

அருமையான படங்கள். வரமுடியாமல் போயிற்று.

Unknown said...

அங்க இருக்கமுடியலன்னு வருத்தமா இருக்கு அடுத்து பதிவர் விழா எப்போ வரும் என்று மனது நினைக்கிறது.

வெள்ளிநிலா said...

சிறிய அழகான பதிவு ! வாழ்த்துக்கள் !

Kumky said...

உ.த..அண்ணன் பேசும்போது பக்கத்துல யாருங்க அது தலயில அடிச்சுக்கறது...?

நிகழ்ச்சி பற்றிய பதிவுகளிலேயே உங்களின் படங்கள்தான் தெளிவாக இருக்கிறது.
நல்ல தொகுப்பு.
வராதவர்களுக்கு உடன் இருந்ததுபோன்ற எண்ணம் தந்த பதிவு.
நன்றி கணேஷ்.

வால்பையன் said...

பகிர்வுக்கு நன்றி!

சிவப்ரியன் said...

படங்களுக்கும் பகிர்வுக்கும் நன்றி!

Unknown said...

அருமையான கவரேஜ்.அருமையான புகைப்படங்கள்.

நேரில் வராத குறை தீர்ந்தது.

Sukumar said...

Virivaana mattru Arumaiyaana COverage sir.. !! Ungalai sandhithadhil magizchi....!

Ganesan said...

மிக்க நன்றிகள்.

அண்ணன் தண்டோரா,

வாசு
சூர்யா
மோகன் குமார்
விழியன்
ஆண்டாள்மகன்
சர்புதீன்

அண்னே கும்க்கி, தலையில் அடிக்கல, முகம் துடைக்கிறார் சூர்யா.

நன்றி வால்,
சிவபிரியன்
ரவிஷங்கர், நன்றிகள்.

வாங்க சுகுமார், உங்களின் flash அழைப்பிதழை கேபிள் பாராட்டி பேசியது மன நிறைவை தந்தது.

Thenammai Lakshmanan said...

பகிர்வும் படங்களும் அருமை காவேரி கணேஷ்

Unknown said...

கேபிள் பதிவுப் பார்த்து இங்கு மீண்டும் வந்தேன்.அது உங்கள் profileக்கு போச்சு. profile பாத்தா.......!

ஆகா! ராஜா ரசிகர்.

நம்ம ராஜா பதிவுகள படிக்கிறதுண்டா?

உண்மைத்தமிழன் said...

மி்கக நன்றி காவேரி..!

creativemani said...

ஆஹா.. பிரமாதம்.. கலக்கிட்டீங்க சார்.. :)

shortfilmindia.com said...

அருமையான கவ்ரேஜ் தலைவரே..

கேபிள் சங்கர்

பரிசல்காரன் said...

படங்கள் தெளிவாகவும், மேக்ஸிமம் எல்லாவற்றையும் கவர் செய்தும் இருக்கிறது!

நன்றி நண்பரே..

Ganesan said...

வணக்கம் , நன்றி தேனம்மை.

ஆமாம், ராஜாவின் ரசிகன் என்பதைவிட நேசிப்பவன் அவரின் பாடல்களை.

அண்ணே , உ.த மிக்க நன்றி.

நன்றி மணிகண்டன்.
நன்றி கேபிள்.

Romeoboy said...

தொகுப்பு மற்றும் படங்கள் அருமை தலைவரே

Unknown said...

நல்ல விளக்கம்..,

Ganesan said...

நன்றி
ரோமியோ
பேநாமூடி