மழை வேறு நேற்று மாலை முதல் இப்பொழுது வரை கொட்டுகிறது, இன்று பதிவர் சந்திப்பு என்று நாள் குறித்துள்ளார் கேபிள், சந்தோசமாக மனம் இருந்தது. கொட்டின மழையிலும், ரோட்டில் கிடக்கிற தண்ணியை பார்த்து , பதிவர் சந்திப்பு ரத்து என அறிவிப்பு வந்தது.
சரி, மழையை செல்போனில் புகைப்படம் எடுக்கலாம் என்றால், வீட்டில், வெளீல போன , மவனே,ம், ஹுக்கும் என்று நர்சிம் பாணியில் வேறு, நாம தான் சும்மா இருக்கமாட்டோமெ, சரின்னு குடையை எடுத்து கொண்டு இந்த மொட்டை மாடிக்கு போய்விட்டு, வீட்டை ஒரு சுத்து சுற்றி விட்டு வ்ரேன்னுட்டு , செல்போனில் படம் எடுத்தேன்.காட்சிகள் இங்கே.
சென்ற மாதம் வைத்த கொரியன் புல்லில் மழை நீர்
முழுவதும் தண்ணீரால் கழுவப்பட்ட ரோடு
70 அடியில் இருந்த கிணற்று நீர் 3 நாள் பெய்த மழையில் வெறும் 15 அடியில் நீர்.
மழைக்கு, குட்டியுடன் வந்திருக்கேன்,கொஞ்சம் இடம் கொடுப்பா கேட்கிறார் பூனையார்.
என்னது பதிவர் சந்திப்பா,எதாவது ஏற்பாடு பண்ணே, மிரட்டும் மேகம்.
காவேரி கணேஷ்
10 comments:
இப்படியாவது பதிவெழுத வைத்த பதிவர் சந்திப்புக்கு நன்றி..நன்றி..
படஙக்ள் நல்லாருக்கு கணேஷ்..:)
பதிவர்கள் சந்திப்பை சோ'ன்னு மழைவந்து தள்ளிப் போட்டுடுச்சாமா!
மழை பெஞ்சாப் பசுமை வரும்! பதிவர் சந்திப்பால் என்ன வரும்?
பூனைக்கு இடம் கொடுத்தீங்களா?
மழை பெஞ்சாப் பசுமை வரும்! பதிவர் சந்திப்பால் என்ன வரும்?
ஜயா கிருஷ்ணமூர்த்தி அவர்களே,
நீங்க ஒரு முறை பதிவர் சந்திப்புக்கு வாங்க, அப்புறம் சொல்லுங்க
படங்கள் நல்லாருக்கு கணேஷ்..:)
நன்றி சங்கர் ஜி
Blogger D.R.Ashok said...
பூனைக்கு இடம் கொடுத்தீங்களா?
மூன்று குட்டியுடன் சமத்தாய் இருக்குது.
/ஒரு முறை பதிவர் சந்திப்புக்கு வாங்க, அப்புறம் சொல்லுங்க/
பதிவர் சந்திப்புக்களில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதைப் பதிவர்கள் வாக்குமூலங்களில் நிறையப் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறேன்!
நேரில் வந்தும் பார்க்கணுமா என்ன:-((
படங்கள் அருமை... குறிப்பாய் பூனையாரின் போஸ்...
நன்று.
நன்றி ஆதி
நன்றி மணிகண்டன்.
நன்றி ஊர்சுற்றி
Post a Comment