நன்றியுரை அஜயன் பாலா.
ஜீவா எழுத்துரு ஜி.முருகன்
மலேயா வாழ் தமிழர் பாலா பிள்ளை
அமெரிக்கா வாழ் தமிழர் மணிவண்ணன்
திரைப்பட இயக்குனர் செல்வகுமார்
பதிவர் கேபிள் சங்கர்.
பதிவர் ஆசிப் மீரான்
பதிவர் உமாஷக்தி
பதிவர் லக்கி லுக்
ஓசை செல்லா
பதிவர் பயோ-டேட்டா செந்தில் குமார்.
டி.சர்டில் பதிவர் ஜாக்கி சேகர்.
கவிஞர் பத்ரி நாராயணன்.
தடாகம்.காம் நிறுவனர்.
சிக்கிமுக்கி.காம் தாரா கணேசன்
பதிவர் ஆசிப் மீரான்.
தண்டோரா மணிஜி, கேபிள்
சிக்கி முக்கி.காம், தடாகம்.காம் , ஓசைசெல்லா, அஜயன் பாலா முயற்சியில் உருவாக்கப்பட்ட நிகழ்வு சனிகிழமை காலை அண்ணா பல்கலைகழகம் அலுமினி கிளப்பில் நடைப்பெற்றது.
சென்னையில் காலிமனை விலை என்றுமே மிக அதிகப்பட்ச விலையில் உள்ள போட்கிளப்பில் ரோட்டில் இந்த அரங்கம் அமைந்துள்ளது.
மிக குறுகிய காலத்தில் உருவாக்கப்பட்ட இந்த நிகழ்வுக்கு சுமார் 30 பேர் வந்திருந்தனர்.இணையத்தின் முந்தைய காலம், நிகழ் காலம், எதிர்காலத்தில் நாம் செய்யவேண்டிய முயற்சிகள் விரிவாக எடுத்துரைக்கபட்டது.
முக்கிய விருந்தினர்களாக மலேயா வாழ் தமிழர் , தமிழ்.நெட் நிறுவனர் பாலா பிள்ளை, அமெரிக்காவில் நெடுங்காலம் வாழ்ந்து திரும்பிய மணிவண்ணன், ஜீவா எழுத்துரு முருகன், மற்றும் பதிவர்கள் வரிசையில் பேச்சளார்களாக லக்கிலுக், மூத்த பதிவர் கேபிள் சங்கர், நம்ம அண்ணாச்சி ஆசிப் மீரான் பேசினர்.
ஓசைசெல்லா ஒருங்கிணைக்க, அஜயன் பாலா இணைய வளர்ச்சி குறித்து பேசினார்.
சிக்கிமுக்கி.காம் தாரா கணேசன் வரவேற்புரையாற்ற , தாரா அவர்கள் இணையத்தை பயன்படுத்துவோர் உலக அளவில் ஒப்பிட்டார்.1995-ல் வெறும் 16 மில்லியனாக இருந்த பயனுற்றோர் தற்பொழுது 1000 மில்லியானாக உயர்ந்துள்ளது.உலக மொத்த தொகையில் 26 சதவீதமாக உள்ளது, மேலும் தன்னின் சிக்கிமுக்கி.காம் ஏழு மாத குழந்தை என்றும், தன் தளத்தில் எழுதுவதற்கு விருப்பம் உள்ளவர்கள் அணுகலாம் என தெரிவித்தார்.
தடாகம்.காம் நிறுவனர் CTS ல் வேலை செய்து, இந்த தளத்தை உருவாக்கியுள்ளார்.
இயக்குனர் செல்வகுமார் , wizq.com மற்றும் secondlife.com தளங்களின் பயன்பாடு குறித்து தெரிவித்தார்.நம்முடைய சொந்த வகுப்பறைகளை இந்த தளத்தில் உருவாக்கி கொள்ள முடியும்.
அடுத்து, நம்ம பதிவர்கள், லக்கிலுக், வலை என்பதே பிரிண்ட் மீடியாவுக்கு நல்ல மாற்று எனவும்,நம்முடைய மாற்று பார்வைகளை தைரியமாக வைக்கமுடியும் எனவும், பொதுவாக திரட்டிகள் தேவையில்லை எனவும் தெரிவித்தார்.
மேலும் , citizen journalsim வலைபதிவுகளில் இல்லை என குறைப்பட்டு கொண்டார், citizen journalsim என்றால் என்ன என்பதற்கு நம் பதிவர் கேபிள் சங்கரின் சாப்பாட்டு கடையை உதாரணம் காட்டினார்.
மேலும், வலையில் audio blogging, video blogging , பதிவர் ஓசைசெல்லாவை தவிர யாரும் பயன்படுத்தவில்லை என குறைப்பட்டு கொண்டார்.
அடுத்து, நம்ம ஆசிப்மீரான் ,,முக்கியாமாக ஆசிப்பின் முதல் பேச்சை கேட்கிறேன், தூயதமிழில் என்ன அழகான உரை.
அவரின் பதிவுலகம் பற்றி அழகாக பகிர்ந்து கொண்டார்.அவர் வந்த காலத்தில் இருந்த மூத்த எழுத்தாளர்களை நினைவு கூர்ந்தார்.
தற்பொழுது நிறைய எழுதுவதில்லை என்றும், தற்பொழுது கவிதை எழுதுவபவர்களை ஒரு வாங்கு வாங்கினார், கவிதைக்கு எதிர்கவிதை எழுதுவேன் என்றும், சரியில்லாத கவிதைக்கு கவுஜ என்று தான் பெயர் குறிப்பிட்டதை சுட்டி காட்டினார்.
நம்ம கேபிள் சங்கர் , அழகாக பேசினார், ஜனரஞ்சகம் பேச்சில் வெளிப்பட்டது.முந்தைய காலத்தில் தான் உருவாக்கிய நாடகம்.காம், shortfilmindia.com தளங்கள் குறித்து பேசினார்.
2008ல் வலைதளத்தை ஆரம்பித்து , அதனின் தற்பொழுதைய வளர்ச்சி குறித்து பேசினார்.
எந்த பதிவுக்கும் ஒரு மார்க்கெட்டிங் தேவை என்றும், அது திரட்டி இருப்பதால் முடிகிறது, திரட்டிகள் அவசியம் தேவை எனவும், எழுத வந்ததை பின்னுட்டங்களுக்கு பயப்படாமல் தொடர்ந்து எழுத வேண்டும் எனவும், இந்த வலைக்கு வந்த பிறகு தான் எழுதிய புத்தகங்களை நினைவுகூர்ந்தார்.
முக்கிய விருந்தினர்கள் மணிவண்ணன், அமெரிக்காவின் கட்டற்ற சுதந்திரத்தை பற்றி வெகுவாக பேசினார். இந்தியாவில் அப்படி எல்லாம் வருமா என கேட்டால் வராது என்பதே என் பதில்.ஆமாம், கருப்பு கொடி காட்ட அங்கே அரசே இடம் ஒதுக்கி தருதாம். ம்ம்ம்...
பின்பு, நம் பதிவர்களின் குறியீடான டிஸ்கி, மீ த பர்ஸ்ட், கும்மி இதெல்லாம் என்ன என கேட்டு தெரிந்து கொண்டார்.
பாலா பிள்ளை, நாம் தமிழர்கள் முன்னேறி்விட்டோம் என்பதே தவறு எனவும் முன்னேறி்க்கொண்டிருக்கிறோம் என்பதை தான் சொல்லவேண்டும் எனவும், நம் குறிக்கோள்கள் மிக பெரிய பாய்ச்சலை கொண்டதாக இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
ஜீவா எழுத்துரு முருகன் அவர்கள் , தமிழுக்கென பொது எழுத்துரு வேண்டும் எனவும், தான் முந்தைய காலகட்டத்தில் தானே எழுத்துருவாக்கிய விதத்தை குறிப்பிட்டார்.
தமிழக அரசை பொது எழுத்துரு உருவாக்க் வேண்டும் என கேட்டுகொண்டார், அதற்கு, திரு.மணிவண்ணன், செம்மொழி மாநாட்டில் அதற்குரிய விரிவான வடிவத்தை அரசிடம் சமர்பித்தாக கூறினார்.
அஜயன் பாலா நன்றி கூற நிகழ்வு நிறைவாக நடைப்பெற்றது.
விழாவுக்கு வந்திருந்தவர்கள் எனக்கு தெரிந்த வரையில்...
ஓசைசெல்லா, அஜயன் பாலா, தாரா கணேசன்,தமிழ் பாலு, கதிர்வேல்--வழிபோக்கன்,
முருகன், லக்கிலுக், கேபிள் சங்கர், மணிஜி தண்டோரா,
லத்திப், K.R.P செந்தில், ஆசிப் மீரான், ஜாக்கி சேகர்,கூத்தலிங்கம் நட்பு.இன்,
உமாசக்தி, இயக்குனர் செல்வகுமார், கயல்விழி ,பத்ரி நாராயணன்.
அன்புடன்
காவேரி கணேஷ்
23 comments:
மிக அற்புதமான விவரிப்பு...
உண்மைய சொல்லனும்னா.. உங்க செல்போன் கேமரா சான்சே இல்லை வாவ் அற்புதமான ரிசல்ட் ஜி..
இன்டோர்ல எவ்வளவு சூப்பரா இருக்கு..
நன்றி கணேஷ். காலையில் இருந்ததால் வர இயலவில்லை. வர முடியாத குறையை போக்கி விட்டீர்கள். வழக்கம் போல படங்கள் அருமை.
Thanks for sharing Ganesh. Photoes and comments are good, as always.
thanks for sharing
ஆமாம் ஜாக்கி செம கேமரா.. சான்ஸே இல்லை.
great shots!
osai chella
படங்களுக்கும் பகிர்விற்கும் நன்றி
பகிர்வுக்கு நன்றி...
அண்ணே பகிர்விற்கும் .. என்னை தனியே போட்டோ எடுத்து போட்டதற்கும் மிக்க நன்றி ..
நல்ல பகிர்வு...
நன்றி ஜாக்கி..
வாங்க சூர்யா.. எப்படியுள்ளீர்கள்?
நன்றி மோகன் குமார் சார்..
பகிர்தலுக்கு நன்றி நல்கிய ராம்ஜிக்கு நன்றி.
நன்றி ஓசை செல்லா..
நன்றி கதிர்..
நன்றி செந்தில்குமார்.
வாங்க ஜெட்லி..
நன்றி வழிபோக்கன்
நானும் வந்தேன் என்பதில் மகிழ்ச்சி....
பகிர்தலுக்கு நன்றி.
செல்போன் காமிரா படங்களும், உங்கள் குறுஞசெய்தி ஸ்டைல் பகிர்தலும் நன்றாக இருக்கின்றன.
குறுகியகாலத்துள் பதிவாக்கி இந்த குறுகிய கால நிகழ்ச்சிக்கு பெருமை சேர்த்த நண்பர் கணேஷ் அவர்களுக்கு நன்றி
Thanks for sharing Ganesh. Photoes and comments are good, as always.
Audio blogging Video blogging வேண்டுமானால் பரவலாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் உங்களை போன்றவர்கள் image blogging செய்வது மிக சிறப்பு. படங்கள் அருமை. பகிர்வுக்கு நன்றி.
அண்ணே, மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் இல்லாமல் நீங்க பங்கேற்ற விழான்னு நினைக்கிறேன்.
வாங்க குரு..
வணக்கம் தருமி ஜயா, நலமாய் உள்ளீர்களா?
நன்றி இயக்குனர் செல்வகுமார் அவர்களே..
நன்றி அஜயன்..
நீங்கள் நடித்த மதராசபட்டினம் அருமை.. உங்கள் காட்சிகள் அருமை..
நன்றி ரமேஷ்..
நன்றி சகோதரி ஜெஸிலா..
ஆம் , தம்பி அப்துல்லா..
fetna வில் உங்கள் விசில் சத்தம் தான் சென்னையில் கேட்டதே..
வணக்கம் ஜி...இந்த எல்லா படமும் உங்க மொபைல் லையா எடுத்தீங்க? ரொம்ப நல்லா இருக்கு ஜி..எனக்கு ஒரு விஷியம் தொனிச்சு, தயவு செய்து தப்பா எடுத்துக்கதீங்க, யாருமே தலைப்பு சம்மந்தமா பேசவே இல்லன்னு
Very good write up Ganesh ;)) lovely pics
வாங்க கயல்..
மிக்க நன்றி உமாஷக்தி..
Post a Comment