கேபிளாருக்கும் , இயற்கைக்கும் என்ன ஏழாம் பொருத்தமோ? எப்பொழுது எந்த நிகழ்வினை கேபிள் ஏற்பாடு செய்தாலும் மழை கொட்டும் போல,
சென்னையில் கடந்த ஒரு வாரமாக அமைதி காத்த மழை , விழாவினையொட்டி மழையும் பெய்தது. மழையும் பொருட்ப்படுத்தாமல் 50 பேர் வந்திருந்தனர்.
தயாரிப்பாளர் பிரமிட் நடராஜன், கவிஞர் நா.முத்துகுமார், ஒளிப்பதிவாளர் மதி, கிழக்கு பதிப்பகம் பத்ரி மேடையேற , வெளியீட்டு விழா ஆரம்பமாகியது.
பிரமிட் நடராஜன் கேபிளின் குடும்பத்தை புகழ்ந்து கூறினார்,
தான் சென்னைக்கு வந்த பொழுது தனக்கு கேபிள் சங்கரின் குடும்பம் அடைக்கலம் கொடுத்ததை நினைவு கூர்ந்தார்,
இதே நினைவு கூர்தலை ஏற்கனவே கேபிளின் முதல் புத்தக வெளியீட்டிலும் கூறினார். நன்றிகளை மறக்கும் காலத்தில், இரண்டு முறை மேடையேறி நன்றிகளை தெரிவிப்பது பாராட்ட தக்கது.
மேலும் நடராஜன், பதிவர்களையும் , பதிவுகளையும் மிகவும் பாராட்டினார், வலையுலக பதிவுகள் இப்பொழுதைய டிரெண்டு என்பதை, கேபிள் சங்கரின் ஜெயா டி.வியில் நேர்காணலின் போது பதிவுகள், பதிவர்கள் பற்றி அதிகம் தெரிந்து கொண்டதாக குறிப்பிட்டார்.
மேலும் புத்தகம் குறித்தான அவரின் பார்வைகளை வெகுவாக பதிந்தார்,
அதுவும் தான் தயாரித்த சங்கமம் படம் சேட்டிலைட் ரைட்ஸ் கொடுக்கபடாத காலத்தில், தன்னுடைய படத்தை சன் டிவிக்கு வழங்கியது அப்பொழுது பரபரப்பாக பேசப்பட்ட விசயத்தை, அதன் சூட்சமத்தை , வெளியில் வராத விசயங்களை கேபிள் தன்னுடைய புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பதை கூறினார்.
கேபிள் சங்கர் மிகவிரைவில் திரைப்படம் இயக்கவேண்டும் என வாழ்த்துக்கள் கூறி விடைப்பெற்றார்.
ஒளிப்பதிவாளர் மதி அவர்கள் சுருக்கமாக சினிமா வியாபாரம் புத்தகம் குறித்தான
பார்வையை விவரித்தார். தம்மை போன்ற டெக்னிசியன்கள் , அதற்கு மேலும் உள்ள சினிமா வியாபார நுணுக்கங்களை இந்த புத்தகம் தெரிவிப்பதாக குறிப்பிட்டார்.
கவிஞர் நா.முத்துகுமார், கேபிளாரின் புத்தகத்தை பற்றி சிலாகித்து பேசினார்,
வெளியூரிலிருந்து படம் எடுப்பதற்காக ஒவ்வொரு ஊரிலிருந்து வரும் தயாரிப்பாளர்கள் கையில் இருக்க வேண்டிய புத்தகம் என்றும்,
மேலும் இந்த புத்தகம் பல பிரதிகள் விற்ற பின்னர் நடைபெறும் வெளியீட்டு விழா என்றும், இதே மாதிரி தன்னுடைய பட்டாம் பூச்சி விற்பவன் கவிதை தொகுப்பு , புத்தக கண்காட்சியில் விற்பனைக்கு வைக்கப்பட்ட பின் ,போட்ட 800 பிரதிகளில் 750 விற்றுபோக , மீதி 50 யை வைத்து கொண்டு , பாலுமகேந்திரா அவர்களை கொண்டு வெளியிட்ட விழாவில் 300 புத்தகத்திற்கு ஆர்டர் வந்த விசயத்தை சுவைப்பட கூறினார். அதே போல் கேபிளின் புத்தகம் விற்கும் என கூறினார்.
மேலும் புத்தகம் குறித்தான பார்வையில் பல நுட்பமான தகவல்களை இந்த புத்தகம் தெரிவிப்பதாக குறிப்பிடார். ஒரு படத்திற்கு விளம்பரம் எவ்வளவு முக்கியம், கலைப்புலி தாணு கூலிக்காரன் தொடங்கி கந்தசாமி படங்கள் வரை அவர் பண்ணிய விளம்பரங்கள், அதனால் அவர் பெற்ற வெற்றி,
ஜெமினி அதிபர் S.S வாசன் திரைப்பட வியாபாரம் செய்வதற்கு அந்த காலத்திலயே மும்பை சென்ற விதம்,
மேலும் கேபிள் சங்கர் அவர்களே விநியோகத்தில் ஈடுப்பட்டது,” சேது ”படத்தை விநியோகம் செய்ய ப்ரிவியூவில் பலமுறை சேது படத்தை பார்த்து, அதை வாங்கமால் கஷ்டப்பட்டது, “ உயிரிலே” என்ற படத்தை வாங்கி கஷ்டப்பட்டது என பல விசயங்களை இந்த புத்தகம் தெரிவிப்பதாக கவிஞர் நா.முத்துகுமார் தெரிவித்தார்.
கேபிள் சங்கர் தன்னுடைய ஏற்புரையில் , வந்திருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துவிட்டு, இந்த புத்தகத்தின் பங்களிப்பில் நம்முடைய பதிவர் ஹாலிவுட் பாலா முக்கியம் இடம் பெறுவதாக தெரிவித்தார்,
இந்த புத்தகத்தில் ஹாலிவுட் பகுதியில் எழுதுவதற்கு நிறைய விசயங்கள் தேவைப்பட்டதாகவும், இணையத்தில் தேடியும் கிடைக்காமல், நண்பர் பதிவர் ஹாலிவுட் பாலா உதவிக்கு வந்தார் எனவும், ஒவ்வொரு சனி, ஞாயிறுகளில் அமெரிக்காவில் உள்ள multiplex மேனேஜர்களிடம் appointment வாங்கி, தான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் பெற்று, பேட்டி எடுத்து 350 பக்கம் டேட்டாவாக கொடுத்தவர் பாலா என்றும், அவருக்கு மிகவும் நன்றி தெரிவிப்பதாக கூறினார்.
நன்றியுரையில் கிழக்கு பதிப்பகம் பத்ரி அவர்கள், இந்த துறையின் வியாபாரம் குறித்து சங்கர் தொடர்ந்து ஆரம்பத்தில் தகவல்களாக எங்களிடம் தெரிவித்தார், அதன் பின்பு புத்தகமாக போடலாம் என ஜடியா உதித்தது எனவும்,
இந்த புத்தகம் ஆண்டிற்கு 5000முதல்--8000 வரை விற்கும் எனவும், தங்களுடைய good list ல் இந்த புத்தகம் இருக்கும் என தெரிவித்தார்.
பதிவர்களிடம் , என்னிடம் திறமை இருக்கிறது, என்னிடம்கொடுத்தால் நல்ல படத்தை எடுக்க முடியும் என்பது மாதிரி புத்தகம் எழுத ஆர்வமுள்ளவர்கள் ,தன்னை தொடர்பு கொள்ளலாம் என்று பத்ரி கூறியவுடன்
நம்முடைய பதிவர் , குறும்பட இயக்குனர் ஆதிமூல கிருஷ்ணனை எல்லா பதிவர்கள் பார்த்தனர், அதன் அர்த்தம் ஆதியார் புத்தகம் எழுத போகிறார் என்பதாகவே புலப்பட்டது.
விழாவினை கிழக்கு பதிப்பகத்தார் சிறப்புடன் ஏற்பாடு செய்திருந்தனர், கிழக்கின் ஹரன் பிரசன்னா தொகுத்து வழங்கினார்.
வந்திருந்த பதிவர்கள்: கார்க்கி, அகநாழிகை பொன்.வாசுதேவன், மணிஜி தண்டோரா, சங்கர்,பெஸ்கி,குகன், சுகுமார் சுவாமிநாதன்,,லத்திப், அன்பு, சென், ஆதிமுலகிருஷ்ணன், ஜெட்லி, லக்கிலுக், அதிஷா, அதியமான், K.R.P. செந்தில்,நர்சிம், அப்துல்லா, மறத்தமிழன், பலாப்பட்டறை சங்கர், விஜய மகேந்திரன், மயில் ராவணன், எறும்பு ராஜகோபால் , காவேரி கணேஷ், புதிய பதிவர் என்னது நான் யாரா? ( பெயரெ வித்தியாசமாக இருக்கிறது).
இனி புகைப்படங்கள்:
சங்கர், சுகுமார் சுவாமிநாதன், தண்டோரா மணிஜி.
பதிவர் லக்கிலுக்
கவிஞர் நா.முத்துகுமார் “ சினிமா வியாபாரம் “ புத்தக வெளியிட பிரமிட் நடராஜன் பெற்று கொள்கிறார்.
ஒளிப்பதிவாளர் மதி பெற்று கொள்கிறார்.
கையில் புத்தகங்களோடு கூடவே புன்னகையும்
பதிவர்கள் ஜெட்லி, சங்கர், கார்க்கி, பின்னால் k.r.p செந்தில், சுகுமார் சுவாமிநாதன்.
பதிவர்கள் லக்கிலுக், அகநாழிகை பொன்.வாசுதேவன், குகன்
அதிஷா, அதியமான்.
திரு.பிரமிட் நடராஜன் சிறப்புரை
பதிவர் வெண்பூ, சகோதரர் அப்துல்லா.
ஒளிப்பதிவாளர் மதி சிறப்புரை
கவிஞர் நா.முத்துகுமார் அவர்களின் நூல் அறிமுகம் உரை
கேபிள் சங்கரின் ஏற்புரை
கிழக்கு பதிப்பகம் பத்ரி அவர்களின் நன்றியுரை.
நூலாசிரியர் கேபிள் சங்கருடன், ஒளிப்பதிவாளர் மதி.
கவிஞர் நா.முத்துகுமாருடன்.
நானும், ஒளிப்பதிவாளர் மதியும்.
சகோதரர் அப்துல்லா, காவேரி கணேஷ், நா.முத்துகுமார், நர்சிம்.
இரவின் ஒளியில் பதிவர்கள் மயில் ராவணன், எறும்பு ராஜகோபால், மறத்தமிழன், பலாப்பட்டறை சங்கர்.
அகநாழிகை, கேபிள் சங்கர், குகன்.
அன்புடன்
காவேரி கணேஷ்
36 comments:
pagirvirku nandri...
அருமையான படங்களுக்கு மிக்க நன்றி த்லைவரே
கேபிளாருக்கு இனிய வாழ்த்து(க்)கள்.
விழா அட்டகாசமா நடந்துருக்கு!!!!
படங்களுக்கு நன்றி காவேரி கணேஷ்.
அண்ணா! 6வது படத்தில் மொட்டை தலையாடு இருப்பது தான் நான். எனக்கு யாரையும் தெரியாது. விழாவுக்கு முன்பு பதிவர் சந்திப்பு இருக்குமுன்னு நினைச்சு வந்தேன்.
பதிவர்கள்கிட்ட அறிமுகம் செய்து கொள்ளலாம்னு நினைச்சேன். ஆனா அப்படி இல்லாம, தனி தனி குழுக்கலா நண்பர்கள் பேசி கொண்டு இருந்தாங்க. அதனால யாரிடமும் அறிமுகம் செய்துக்க முடியாம போச்சு!
இன்னொரு முறை பிரத்யேகமாக, பதிவர் சந்திப்பு நடக்கும் போது, நண்பர் எல்லோரையும் பற்றி அறிந்து கொள்ள ஆவல். கூடிய சீக்கிரம் நடக்கும்னு நினைக்கிறேன்.
படங்கள் எல்லாம் அருமை. அடடா! உங்களையும் அறிந்து கொள்ள முடியாமல் போச்சு! கொஞ்சம் வருத்தம் தான்!
மிக்க நன்றி முத்துகுமார் ஜி.
வாழ்த்துக்கள் கேபிள்.
துளசி டீச்சருக்கு நன்றிகள்.
என்னது நான் யாரோ, உங்க பேருக்கு ஏற்றாற் போல ஒதுங்கி இருந்தீங்களா?
எங்களது பதிவர் சந்திப்பில் புதியவர்களை முன்னால் உட்கார வைப்போம்.விட்டுட்டோமே.sorry.
///அண்ணா! 6வது படத்தில் மொட்டை தலையாடு இருப்பது தான் நான். எனக்கு யாரையும் தெரியாது. விழாவுக்கு முன்பு பதிவர் சந்திப்பு இருக்குமுன்னு நினைச்சு வந்தேன்.//
அடடா உங்களை பார்த்தேன் சார்.. அப்புறம் பதிவர் சந்திப்பு அப்படிதான் இருக்கும் ... நாமளாத்தான் நன்மை அறிமுகம் செஞ்சுக்கணும்...
இத முறை அண்ணன் காவேரி கணேஷுடன் பேசமுடியவில்லை... விவரமான பதிவு ...
மிக்க நன்றி அண்ணே ...
நெருங்கிய உறவினர் கல்யாணம் அதனால் வர முடியலை புகை படங்கள் பார்த்து மகிழ்ச்சி நன்றி கணேஷ்
வழக்கம்போல சூப்பர் போட்டோஸ்... உண்மையிலேயே நோக்கியா கம்பெனிக்காரங்க பார்த்தாகூட ஆச்சரியப்படுவாங்கெ...அவிங்க மொபல்ல இம்புட்டு அழகா போட்டோ புடிக்க முடியுமான்னு.நன்றி
புதிய மனிதர்கள் பாருங்கள்! சந்திப்புக்கு முதல் முறை வருகிறேன். எந்த விதத்தில் பதிவர் சந்திப்பு நடக்கும் என்று எனக்கு தெரியவில்லை. அதனால் அமைதியுடன் உட்கார்ந்து விழாவில் பங்கு கொண்டேன். ஒரு வேலை விழா முடிந்த பின், சந்திப்பு இருக்குமென்று எண்ணினேன். அப்படியும் இல்லை. விழா முடிந்ததும் எல்லா நண்பர்கள் களைந்து சென்று கொண்டு இருந்தனர்.
உங்களின் வருத்தத்தை தெரியபடுத்தியதற்கு நன்றி அண்ணா!
@@@கே.ஆர்.பி.செந்தில்:
///அடடா உங்களை பார்த்தேன் சார்.. ///
உங்களை சந்திச்சு பேசனும்னு இருந்தேன். விழா தொகுப்பாளரா இருப்பீங்கன்னு நினைச்சேன். ஆனா விழா முடிஞ்ச பின்னாடி தான் அவர், நீங்க இல்லன்னு தெரிஞ்சது.
///அப்புறம் பதிவர் சந்திப்பு அப்படிதான் இருக்கும் ... நாமளாத்தான் நம்மை அறிமுகம் செஞ்சுக்கணும்...///
நான் கலந்துகொள்வது இது முதல் முறை. அதனால எனக்கு, சந்திப்பு எந்த முறையில் இருக்கும்னு தெரியல. கூடிய சீக்கிரம் மறுபடி நண்பர்களை சந்திக்க வாய்ப்பு வரும் என நினைக்கிறேன்!!!
பகிர்விர்க்கும் படங்களுக்கும் நன்றி ...
பகிர்வுக்கு நன்றி.
நன்றி k.r.p செந்தில்.
நன்றி மோகன்குமார் ஜி.
நன்றி மயில்
நன்றி யோகேஷ்
நன்றி கோபி.
மழை பெய்ததால் நான் வரவில்லை.இல்லையெனில் அவசியம் வந்து இருப்பேன்.
படங்களை பார்த்தேன் மிக்க மகிழ்ச்சி, விழாவிற்கு வந்த உணர்வு.
Nice photos! :-)
good post....
மொட்டை - அழகு...
கேபிளாருக்கு இனிய வாழ்த்து(க்)கள்.
thanks for sharing
கேபிள் அண்ணனுக்கு புத்தக வெளியீடு அன்று ரொம்ப வேலை போல... எல்லா புகைபடத்திலும் கண்ணை மூடிக்கிட்டு இருக்குராறு...
படங்கள் மிக அருமை. சென்னை-யில் இருந்திருந்தால் கண்டிப்பாக வந்திருக்கலாம்...
//அகநாழிகை பொன்.வாசுதேவன், மணிஜி தண்டோரா, சங்கர்,பெஸ்கி,குகன், சுகுமார் சுவாமிநாதன்,,லத்திப், அன்பு, சென், ஆதிமுலகிருஷ்ணன், ஜெட்லி, லக்கிலுக், அதிஷா, அதியமான், K.R.P. செந்தில்,நர்சிம், அப்துல்லா, மறத்தமிழன், பலாப்பட்டறை சங்கர், விஜய மகேந்திரன், மயில் ராவணன், எறும்பு ராஜகோபால் , காவேரி கணேஷ், //
:(((((
en pera kaanom!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
sema koottam
Ananiya vanthu sema koottamnnu comment Potta lucky valga......
சூப்பர் போட்டோஸ்... நான் இவ்வளவு அழகா.. என் கண்ணே பட்டுடும் போல...
பகிர்வுக்கு நன்றி கணேஷ்...
i missed it
வாங்க அமுதா.
நன்றி நந்தா.
நன்றி நாளை, விஜய மகேந்திரன்,
நன்றி சூர்யா, அவ்வளவு அழகா மொட்டை?
நன்றி குமார், ராம்ஜி,தனுசு.
நன்றி தம்பி கார்க்கி, திருத்திவிட்டேன்.
அனானி நண்பருக்கு நன்றி, அந்த அனானி லக்கி என்று சொன்ன நண்ப அனானிக்கும் நன்றி.
நன்றி குகன்
நன்றி பரிசல், உங்களை போன்ற வெளியூர்காரங்களுக்குகாக தான் புகைப்படங்கள்.
நன்றி ரமேஷ்
கார்க்கி said...
//அகநாழிகை பொன்.வாசுதேவன், மணிஜி தண்டோரா, சங்கர்,பெஸ்கி,குகன், சுகுமார் சுவாமிநாதன்,,லத்திப், அன்பு, சென், ஆதிமுலகிருஷ்ணன், ஜெட்லி, லக்கிலுக், அதிஷா, அதியமான், K.R.P. செந்தில்,நர்சிம், அப்துல்லா, மறத்தமிழன், பலாப்பட்டறை சங்கர், விஜய மகேந்திரன், மயில் ராவணன், எறும்பு ராஜகோபால் , காவேரி கணேஷ், //
:(((((
en pera kaanom!!!!!!
//
ஹிஹி.. என் போட்டோவைக் காணோம்.? (போட்டோவை எப்படி Bold பண்ணுவீங்க.?) :-))
அப்புறம் இது என்ன கூத்து? ஆதியார் புக்கு போடறாரா? யாராவது கையில் குடுத்தா வேணா கீழ போடுறேன். :-))
வரமுடியாமல் வேறு வேலையில் மாட்டிக்கொண்ட படுபாவி நான்!
ஆதியின் இந்த காமெடிக்கே புத்தகம் போடலாம்.
என்னா ஆதி தாளம் போட்றீங்க..
நன்றி சுரேகா, வரமுடியாத உங்களுக்கு பார்பதற்காகவே புகைப்படங்கள் இடும் அப்பாவி நான்.
அப்துல்லாவுக்கு ஒரு 45 வயசு இருக்கும்னு இன்னிக்கு வரைக்கும் நினைச்சிட்டு இருந்தேன். 40-தான் போலயிருக்கே!! :) :)
கணேஷ் அண்னன்,
படங்கள் அனைத்தும் அருமை.
பதிவர் சந்த்திப்புக்கு வராதவர்கள் உங்கள் வலைப்பதிவை பார்த்தாலே போதும் என்கிற அளவுக்கு கவர்செய்து சிறப்பாக தொகுத்து எழுதியிருக்கிங்க..
வாழ்த்துக்கள்..
அன்புடன்
மறத்தமிழன்.
வாங்க ஹாலி பாலா.
நன்றி மறத்தமிழன்.
அழகிய படங்கள். பகிர்ந்தமைக்கு வாழ்த்துகள்.
Post a Comment