Tuesday, December 14, 2010

சாரு நிவேதிதாவின் 7 புத்தக வெளியீடு--EXCLUSIVE புகைப்படங்கள்

எழுத்தாளர் சாரு நிவேதிதாவின் 7 புத்தகங்களின் நூல் வெளியீடு மிக சிறப்பாகவும், விமர்சையாகவும் சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது.
மாலை 5.45 மணிக்கு சென்றால் , நம் பதிவர்கள் 30 பேர் வரை வந்திருந்தார்கள்.
சாருவும், அவர் மனைவி அவந்திகாவும் வந்திருந்தவர்களை உபசரித்து, மாலை நேரத்து காபியும், சமோசாவையும் சாப்பிடுமாறு மிகவும் பணித்தார்கள்.

காமராஜர் அரங்கம் போன்ற மிகபெரிய அரங்கத்தில், புத்தக வெளியீடு நடத்துவது என்பது ஒரு எந்திரன் திரைப்பட வெளியீட்டை போல செய்யவேண்டிய விசயம், அதையும் சாரு வெற்றி கொண்டிருக்கிறார் என்றே சொல்லலாம்.அரங்கம் 60 சதம் நிரம்பியிருந்தது, அதிலும் முக்கியம் இரவு 10 மணி வரை வாசகர்கள் இருந்தனர் என்பது சாருவுக்கு வாசகர்கள் கொடுத்த முக்கியத்துவம் என்பதே சான்று.

எழுத்தாளர் பாலகுமாரன் தொடக்கம் முதல் இறுதி வரை இருந்தார், அவரின் கடலோர குருவிகள் நாவலை 100 முறையாவது படித்திருப்பேன்.


உயிர்மைப்பதிப்பகத்தின் மனுஷ்யபுத்திரன் வரவேற்புரையாற்ற,

நல்லி குப்புசாமி செட்டி அவர்கள் வாழ்த்துரை வழங்க , நல்லி அவர்கள் புத்தகம் வெளீயிட, புத்தகங்களை சாருவின் வாசக நண்பர்கள் பெற்று கொண்டது மிகச்சிறப்பு.

அதிலும், நம் நண்பர், பதிவர் நர்சிம் அவர்கள், சாருவின் சரசம், சல்லாபம், சாமியார் நித்தியானந்தர் பற்றிய புத்தகத்தை பெற்று கொண்ட பொழுது கைத்தட்டலும், விசிலும் பறந்தது.

நம் பதிவர்களின் கைத்தட்டலும், விசிலும் சாருவின் விழாவிற்கு மெருகூட்டியது எனலாம், பேச்சாளர்களின் பேச்சுகளை அவ்வளவு உற்சாகப் படுத்தினார்கள்.

வந்திருந்த பதிவர்கள்:



மணிஜி,அகநாழிகை வாசு,நித்யகுமாரன்,உண்மைதமிழன்,நர்சிம்,லக்கி,நிலாரசிகன்,அதிஷா,சாம்ராஜ்யபிரியன்,ராஜபிரியன்,ஜியரோம்சுந்தர்,
வண்ணத்து பூச்சி சூர்யா, மயில்ராவணன்,கேபிள்,கேஆர்பி செந்தில், காவேரிகணேஷ்,ஊர்சுற்றி,ரமேஷ்வைத்யா, பஸ்சில் தனது உயிர் மூச்சை வைத்து இருக்கும் ஈஸ்வரி,அசோக்,லதா மகன் இன்னும் நிறைய பேர்..


மேலும், விழா பற்றிய விபரம் அறிய நண்பர் ஜாக்கியின் தளத்தை பார்க்கலாம்.



இனி, புகைப்படங்கள்:

பதிவர் பட்டர் பிளை சூர்யா.
பதிவர், தற்பொழுதைய சமகால கவிஞர் நர்சிம்..
அகநாழிகை வாசு.
மணிஜி தண்டோரா, உண்மை தமிழன்.
பதிவர்கள் லக்கிலுக், அதிஷா, எழுத்தாளர் ஷோபாசக்தி.

பின் வரிசையில் பதிவர்கள் அஷோக், மயில் ராவணன்.
பதிவர் ஜாக்கி,சேகர், நித்யா, உண்மை தமிழன்.

பின் வரிசை கே.ஆர்.பி செந்தில், கேபிள் சங்கர்
பதிவர் நர்சிம் , லக்கிலுக்
பத்திரிக்கையாளர் கவின் மலர், எழுத்தளார் சோபா சக்தி.


உயிர்மை மனுஷ்யபுத்திரன் வரவேற்புரை
சாருவின் வாசக நண்பர்கள் புத்தக்தை பெற்று கொண்ட நிகழ்வு.
பதிவர் நர்சிம் புத்தக்த்தை பெற்று கொண்டார்.




சாருவின் மனைவி அவந்திகா அவர்கள் புத்தகம் பெற்று கொண்டார்.
நல்லி அவர்கள் வரவேற்புரை
சட்ட மன்ற உறுப்பினர் ரவிகுமார் புத்தக அறிமுக உரை
கவிஞர் தமிழச்சி தங்க பாண்டியன் புத்தக விமர்சன உரை.
கவிஞர் கனிமொழி அவர்கள் சிறப்புரை.
மதன் அவர்களின் உரை, மிக சிறப்பாகவும், அவரின் படிப்பாற்றல் மிகவும் வெளிப்பட்டது.
நந்தலாலா மிஷ்கின் உரை.


சாரு அவர்களின் புத்தக வெளீயிடு விழா, டிசம்பர் மாத இசை கச்சேரி போன்று , செவிக்கும், சிந்தனைக்கும் விருந்து வைத்த விழா என்றே சொல்லலாம்.

எழுத்தாளர் S.ராமகிருஷ்ணன் புத்தக விமர்சன உரை.

29 comments:

Thenammai Lakshmanan said...

நேரில் சென்று பார்த்தது போல் அருமை கணேஷ்..:))

பகிர்வுக்கு நன்றி..

Unknown said...

அருமை! அருமை! நன்றி!! :-)

shivam said...

it was a great and unforgettable evening... thanks charu

rajmohan said...

கணேஷ் இன்று தான் முதன்முதலாக தங்களின் தளத்திற்கு வருகிறேன்! மிக அருமையாக உள்ளது! காரைக்குடியில் இருப்பதால் புத்தக
வெளியீட்டு விழாவிற்கு வரமுடியாமல் போனது ஏமாற்றம் அளிக்கிறது! இருந்தாலும் தங்கள் பதிவு அதை பூர்த்தி செய்துவிட்டது! இந்த மாதிரி விழாக்கள் வரவேற்கப்பட வேண்டும் ! நான் ஒரு புதிய பதிவர்
நேரம் இருப்பின் வருகை தரவும் ! http://grajmohan.blogspot.com

Ganesan said...

நன்றி சகோ..

நன்றி ஜீ

வருகைக்கு நன்றி சிவம்.

பதிவர் ராஜ்மோகன் நன்றிகள்.

வரிசையாக புத்தக வெளியீட்கள் வருகிறது, கலந்து கொள்ளவும்.

CS. Mohan Kumar said...

அடடா நீண்ட நாளைக்கு பின் உங்களிடமிருந்து ஒரு பதிவு!! மிக மகிழ்ச்சி; நண்பர்கள் புகை படங்களை கண்டதும் & நரசிம் புத்தகம் பெற்று கொண்டதும் அறிந்து மிகவே சந்தோசம்

விஜயதேவ் said...

புகைப்படங்களுக்கு நன்றி

Jackiesekar said...

நல்ல கவரேஜ்.. செல்போன் போட்டோன்னு யார் சொன்னாலும் நம்பமாட்டாங்க..

Ganesan said...

மிக்க நன்றி மோகன் ஜி.
வருகைக்கு நன்றி பிரசாந்த்.

ஆம் , ஜாக்கி.

மதன்செந்தில் said...

நல்ல படங்கள்...

http://madhansendhil.blogspot.com

விழா சம்பந்தமான என்னுடைய பார்வை..

Anonymous said...

helloo, 100 thadavaiya padicha, karaiyora kuruvi or mudhalai

Bullet said...

சரவணகார்த்திகேயனின் புத்தகவிழாவுக்கு வந்த சாரு ஒரு வார்த்தை கூட அந்த தொகுப்பை பற்றி பேசாமல் 'தேகம்' நாவலை பற்றி பேசினா‌‌‌ர். இப்பொழுது மிஷ்கின் 'தேகம்' நாவலை பற்றி பேசாமல் நந்தலாலா பற்றி பேசுவதாக சாரு குறை சொல்லுகிறார். ங்கொய்யாலா..எந்த ஊரு நியாயம் இ‌து?

Ganesan said...

அனானி,

அது கடலோரக்குருவிகள் தான்:
அதிலிருந்து ஒரு பகுதி:

சொல்லிக் கொடுப்பதில் எந்த சிரமமில்லை.ஆனால் சொல்லிக் கொடுத்ததை, சொல்லிக் கொடுத்த விதத்தில் புரிந்து கொள்ளத்தான் சிரமப்பட வேண்டியிருக்கிறது. சொல்லிக் கொடுப்பவன் மீது முழு கவனமாக கற்றுக்கொள்பவன் இருக்கவேண்டியிருக்கிறது.அப்படி ஒரு கவனம் வர ஆர்வம் தேவையாய் இருக்கிறது.இந்த ஆர்வத்திற்கு அப்பால், சொல்லிக் கொடுப்பவனுக்கு விஷயம் தெரியும் என்ற நம்பிக்கை, கற்றுக்கொள்பவனுக்கு தேவைப்படுகிறது.கற்றுக்கொள்ள ஒரு நல்ல சுழ்நிலை தேவையாய் இருக்கிறது.கற்றுக்கொள்ள நல்ல நேரம் தேவைப்படுகிறது.

Anonymous said...

bullet sonnadu corect than.Nanum andha kootathuku chendrinden. 40km dhooram chendru emartram aanen sukumaran

Anonymous said...

புல்லட்
அப்படி போடு அருவாளை. கரெக்ட்ப்பா. சரவணகார்த்திகேயன் கவிதை பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அந்த விழாவில் கலந்துகொண்ட யாராவது இப்போது வாயை திறப்பார்களா? புல்லட்
உங்கள் நண்பர் நர்சிம் பதில் சொல்லட்டும்.

மணிஜி said...

//சரவணகார்த்திகேயனின் புத்தகவிழாவுக்கு வந்த சாரு ஒரு வார்த்தை கூட அந்த தொகுப்பை பற்றி பேசாமல் 'தேகம்' நாவலை பற்றி பேசினா‌‌‌ர். இப்பொழுது மிஷ்கின் 'தேகம்' நாவலை பற்றி பேசாமல் நந்தலாலா பற்றி பேசுவதாக சாரு குறை சொல்லுகிறார். ங்கொய்யாலா..எந்த ஊரு நியாயம் இ‌து?//


மிஸ்டர் புல்லட்..

சும்மா வாய்க்கு வந்ததை பேச வேண்டாம்..சாரு பரத்தை கூற்றை பற்றி விரிவாகவே பேசினார்.. சில கவிதைகளை படித்து கருத்தும் கூறினார்.. நான் தான் விடீயோ எடுத்தேன்..ஆதாரம் இருக்கிறது..நீங்கள் எழுதியதை பார்த்துதான் ஒருவர் பஸ்சில் இதை சொல்லி வாபஸ் வாங்கி கொண்டார்..

மணிஜி said...

//புல்லட்
அப்படி போடு அருவாளை. கரெக்ட்ப்பா. சரவணகார்த்திகேயன் கவிதை பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அந்த விழாவில் கலந்துகொண்ட யாராவது இப்போது வாயை திறப்பார்களா? புல்லட்
உங்கள் நண்பர் நர்சிம் பதில் சொல்லட்டும்//

அடையாளத்தோடு வாருங்கள் அனானி..வீடியோவை போட்டு காட்டுகிறேன்..மேலும் அந்த விழாவிற்கு நிறைய சிறு குழந்தைகள் வந்திருந்தார்கள்..சாரு தன் பெச்சிலும் அதை குறிப்பிட்டு அடக்கி வாசித்தார்.. அந்த நூல் பரத்தை கூற்று கவிதை தொகுப்பு அப்படியானது...

மணிஜி said...

சும்மா விழாவிற்கு வராமல் கும்மியடிக்க வேண்டாம் நண்பர்களே...

Ganesan said...

அருமை மணிஜி.

சரவண கார்த்திகேயன் விழாவிற்கு நான் வரவில்லையாதலால் பதிலளிக்கவில்லை.

நன்றி மணிஜி

நித்யன் said...

சிறப்பான தொகுப்பு நண்பரே...

அன்பு நித்யன்

லதாமகன் said...

அட என்னோட பேரும் லிஸ்ட்ல இருக்கா? :)))) நல்ல கவரேஜ் நண்பா! ;)

லதாமகன் said...

ஒரு விளம்பரம்........
http://wp.me/pjgWz-4v

Bullet said...

மணிஜீ
அந்த வீடியோவை கட் செய்யாமல் அப்படியே பிளாக்கில் பிரசுரிக்கவும். சாரு CSK வின் பரத்தை கூற்றிலிருந்து இரண்டு கவிதைகளை மட்டும் வாசித்தார். (சின்ன பசங்க காதை பொத்திக்கொள்ளுங்க என்றார். மிஷ்கின் சரோஜாதேவி எ‌ன்று சொன்னது போல)

அந்த கூட்டம் முழுவதும் தேகம் நாவலை பற்றி பேசினா‌‌‌ர். பிறகு சமகால கவிதை தொகுப்பிலிருந்து (பிரம்மராஜன் தொகுப்பு) இரண்டு கவிதைகளை படித்தார். நான் படம் எடுத்தால் படத்தில் சீழ்பிடித்த யோனியை மட்டும் ஐந்துநிமிடத்துக்கு காட்சியாக காட்டுவேன் எ‌ன்றார். அந்த வீடியோவை கட் செய்யாமல் அப்படியே பிளாக்கில் பிரசுரிக்கவும். இதற்கு உரிய பதிலை-விளக்கத்தை சரவணகார்த்திகேயன் தரட்டும்.

Bullet said...

அந்த கூட்டத்தில் தசாவதாரம் பற்றி பேசினா‌‌‌ர். எந்திரன் பற்றி பேசினா‌‌‌ர். மிஷ்கினை கடவுள் எ‌ன்றார். உங்களிடம் உள்ள வீடியோவை அப்படியே வெளியிடவும். பளீஸ்.

Bullet said...

சரவணகார்த்திகேயன் - அந்த வீடியோ உங்களிடம் நிச்சயம் இருக்கும். உண்மையை நீங்கள் அப்படியே சொல்லவும். அந்த கூட்டத்தை சாரு அவரது தேகம் நாவலுக்கு விளம்பரப் படுத்திகொண்டார். உண்மையா? இல்லையா?

மணிஜி said...

பரத்தை கூற்று 60 பக்கங்கள் கொண்ட ஒரு கவிதை தொகுப்பு..முதலில் சி.எஸ்.கேவுடன் தான் நிகழ்த்திய உரையாடல்களின் தொகுப்பே தாந்தேயின் சிறுத்தை என்பதை பதிவு செய்தார்..பின் பிரம்மராஜன் கவிதை யும் வாசித்தார்.. பரத்தை கூற்றிலிருந்து இரண்டு கவிதைகளையும், சில மேற்கோள்களையும் கூறினார்.. சாரு சொன்னது போல் பரத்தை கூற்றை விரிவாக பேச அந்த மேடை பொருத்தமில்லை.. அந்த கவிதைகள் அந்த வகையானது.. தந்து தேகம் நூலைப்ப்ற்ரியும் பெசினார்.. இதில் என்ன தவறு இருக்கிறது.. உங்கள் கூற்று..அவர் பரத்தை கூற்றைப்பற்றி பேசவேயில்லை என்பதுதான்..அதற்குதான் நான் பதில் சொன்னேன்..உங்கள் முதல் கமெண்டை படித்துப்பாருங்கள் புல்லட்..இரண்டு மணிநேர நிழவை சுவராசியமாக பரத்தை கூற்று புராணமே பாடிக் கொண்டிருந்தால்...


மிஷ்கின் பேசியது வேறு...அதையும் , இதையும் ஒப்பிட முடியாது எனப்து என் கருத்து..விடீயோவை இங்கு ஏற்ற முடியாது.. கால அளவு அதிகமாக இருக்கிறது..அதனால்.. நீங்கள் சரவணகார்த்திகேயனை கேளுங்கள்..அவருக்கு நான் ஒரு காப்பி அனுப்பியிருக்கிறென்...பிடிக்கவில்லைஎன்பதற்காக போகிற போக்கில் தூற்றுவது வருத்தமாக இருக்கிறது நண்பரே...

நன்றி..

மணிஜி

மணிஜி said...

சரவணனின் உறவினர்கள், அவர் குழந்தைகள் என்று நிறைய பேர் வந்திருந்தனர்..எவ்வளவு இலை மறை காய் மறைவாக பேச வேண்டுமோ..அப்படித்தான் பேசினார்..அதில் ஒன்றும் தவறு இல்லை.. சில கவிதைகளை குட்டவும் செய்தார்..மாஸ் ஆடியன்சுக்கு இந்த கவிதை(நேயர் விருப்பம் என்கிர கவிதை) பிடிக்கும் என்று சிலாகித்தார்..
சாருவுக்கு குடை பிடிக்கிறென் என்று நினைக்க வேண்டாம்.. கால் எத்தும் கழுதை என்ற தலைப்பில் என்னை விட அவரை யாரும் பகடி செய்திருக்க முடியாது..(அவரிடம் சொல்லி விட்டே செய்தது)

நர்சிம் said...

கலக்கல் கணேஷ்... பகிர்விற்கு நன்றி..

Ganesan said...

நன்றி மணிஜி,

நன்றி நர்சிம்.